மாறவர்ம பாண்டியர் , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
இந்திரன்
''''''""'''""""""'"''''"
இந்திரன் பற்றி பல குறிப்புகள் நம் சங்க இலக்கியங்களிலும் அதற்கு பிந்தைய
இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
"அந்தர வாணியாற் றாயிரங் கண்ணினான் இந்திரன் ஆடுந் தகைத்து"......
"இந்திரன் பூசை இவளக லிகையிவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும் "-பரிபாடல்
"உண்டாலம்ம இவ்வுலக மிந்திரர் அமிழ்த மியைவதாயினு"- புறநானூறு.
"இந்திர விழவிற் பூவின்
அன்ன" - ஐங்குறுநூறு
"இந்திர நீலத் திடையிடை திரண்ட" - சிலப்பதிகாரம்.
"காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன்"-
சிலப்பதிகாரம்.
"இந்திர கோடானை விழா"-
மணிமேகலை.
சக்கரச் செல்வம்பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; -
எக்காலும்முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை இந்திரனா எண்ணி விடும்-
நான்மணி கடிகை
இலங்கு நீண்முடி யிந்திரன் மார்பின்மேல்- சீவக சிந்தாமணி
முன்னொரு காலத் திந்தரனுற்ற
முனிசாபம் - திருஞானசம்பந்தர்
"அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிரயான் போய்
இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்"-
தொண்டரடிப் பொடியாழ்வார்.
"மருத நன்னிலத்து வேந்தன் மருத்துவண் வானோர் கோமான்
புருகூதன் சசிமணாளன் புரோகிதன் கௌசிகன்னே கரியவன்
சுனாசீரன் ஆகண்டலனுடன் வலாரி
அரிசதக் கிரது நீண்ட ஆயிரங் கண்ணன் இந்திரன்"
- சூடாமணி நிகண்டு.
சேந்தன் திவாகர நிகண்டு இதனுடன் சிலப் பெயர்களை சொல்கிறது. அவை:-
அமரர் கோன், மால், முகிலூர்தி, வேள்வி நாயகன், விண்முழுதாளி, அயிராணி
கேள்வன், மகவான், வலாரி,
விருத்திராரி, வெள்ளை வாரணன், இமையவர் வேந்தன்,வச்சிரபாணி.
இந்திரன் பெயர் பற்றி:-
இந்திரன் பெயரைப் பற்றி விளக்கும் ஐயன் அயோத்திதாச பண்டிதர் ஐந்திரன்
என்கிற சொல்லின் மருவே
இந்திரன் என்கிறார்.
ஐம்புலன்களை அடக்கி காமத்தை வென்றவர்கள் ஐந்திரர். ஐந்திரரே
காலப்போக்கில் இந்திரர் என்றும்
இந்திர நெறியை எங்கும் பரவச் செய்து
இந்திரவிழா கொண்டாடி வந்தவர்கள்
பெரும் பாலும் தமிழரேயாவர் என்கிற
கருத்தையும் ஐயன் அயோத்திதாச பண்டிதர் கூறுகிறார்.
ஐயன் தேவநேய பாவாணரும் வேந்தன் என்கிற மருத நிலத் தெய்வமே வடநாட்டு
தெய்வமான இந்திரன் என்கிறார்.
ஐயா குணாவும்
இருக்கு வேதத்தின் முதன்மை தெய்வம் இந்திரன் என்றும் இந்திரனைப் பற்றிய
பாடல்களே இருக்கு வேத்தில் அதிகம்.
இருக்கு வேதமானது தமிழர்களின் வானியல் உருவகங்களின் தொகுப்பு நூலே
என்றும் நான்மறைகளை சங்கதமாக்கும் போது அவற்றை நான்கு மறையென
தொகுத்துவிட்டு
மூல தமிழ் நூலான நான் மறையை அழித்தவிட்டனர் என்கிறார்.
இருக்கு வேதம் இந்திரனை மாதளி என்கிறது. மாதளி என்பது மாமழை என்று பொருள் படும்.
சிலப்பதிகாரத்தில் இந்திர விழவெடுத்த காதை என்கிற காதையும்
உண்டு.
மருத நில வேந்தர் வழிபாடே இந்திரவழிபாடு. வேந்தனே இந்திரன்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
-ஐயன் திருவள்ளுவர்.
பொருள்:-
"""'""""""""""""
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின்
தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்....
கடவுள் வழிபாடு தேவேந்திரர் பள்ளர் மள்ளர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக