தஞ்சாவூரான் on June 6, 2014 at 10:16 am
பாண்டியனின் வெற்பு நோயைத் தீர்க்க மங்கையர்க்கரசி அழைத்து
திருஞானசம்பந்தர் மதுரை சென்று அங்கு மன்னருக்கு நெருக்கமாக இருந்த
சமணர்களோடு வாதிட்டு, அனல் வாதம், புனல் வாதம் எல்லாம் செய்து வெற்றி
பெற்றபின், சமணர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவேற விருப்பமின்றி பலரும்
தப்பிப் பாண்டிய நாட்டுக் காடுகளில் சென்று மறைந்து வாழ்ந்தார்கள்
என்றும், அப்படி அவர்கள் வாழ்ந்த இடம்தான் புதுக்கோட்டை அருகிலுள்ள
சித்தன்னவாசல் என்று ஒரு செய்தி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆக கழுவேற்றல்
முறை இங்கு இருந்திருக்கிறது என்பதும், சமணர்கள் அதிலிருந்து தப்பி
ஓடியவர்கள் என்பதும் தெரியவருகிறது. இதற்கான வரலாற்று பூர்வமான ஆவணங்கள்
இருப்பதாகத் தெரியவில்லை.
சேக்கிழான் on June 6, 2014 at 1:53 pm
சகோதரர் ஸ்ரீதர் அவர்களுக்கு, தாங்கள் குறிப்பிட்ட பிழை சரிசெய்யப்பட்டுவிட்டது.
//அலகில் சோதியன்//
நன்றி.
-ஆ.குழு
Sridharan on June 6, 2014 at 2:22 pm
மிக அருமை. அதே மாதிரி விமர்சனங்களும் அருமை.
க்ருஷ்ணகுமார் on June 7, 2014 at 12:20 am
\\ அனல் வாதம், புனல் வாதம் எல்லாம் செய்து வெற்றி பெற்றபின், சமணர்கள்
ஒப்புக்கொண்டபடி கழுவேற விருப்பமின்றி பலரும் தப்பிப் பாண்டிய நாட்டுக்
காடுகளில் சென்று மறைந்து வாழ்ந்தார்கள் என்றும், அப்படி அவர்கள் வாழ்ந்த
இடம்தான் புதுக்கோட்டை அருகிலுள்ள சித்தன்னவாசல் என்று ஒரு செய்தி
கேள்விப்பட்டிருக்கிறேன். \\
இந்த செய்தி புனைவா சரித்ரமா?
\\ ஆக கழுவேற்றல் முறை இங்கு இருந்திருக்கிறது என்பதும், சமணர்கள்
அதிலிருந்து தப்பி ஓடியவர்கள் என்பதும் தெரியவருகிறது. இதற்கான வரலாற்று
பூர்வமான ஆவணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை \\
கழுவேற்றல் என்ற கருத்தாக்கம் இருந்துள்ளது என்பது அதைப்பற்றி பல
நூற்களில் ப்ரஸ்தாபித்திருந்த படிக்கும் இங்கு காணும்
சித்திரத்திலிருந்தும் தெரிகிறது. ஆனால் இப்படி ஒரு கொடுமையான நிகழ்வு
உண்மையிலேயே நடந்துள்ளது என்று சரித்ர பூர்வமான ஆவணங்களிலிருந்து தெரிய
வந்துள்ளதா?
க்ருஷ்ணகுமார் on June 7, 2014 at 12:27 am
\\ திருஞானசம்பந்தப் பெருமானுடன் வாது செய்து கழுவேறியவர்கள் திகம்பர
சமணர்கல். அவர்கள் பூணூல் என்ன நூலான ஆடையும் அணியாதவர்கள். ஸ்வேதாம்பர
சமணர்கள் பூணூல் அணிவார்கள் என நினைக்கின்றேன். \\
மதிப்பிற்குரிய ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி மஹாசய,
கழுவேற்றம் என்பது நிகழ்ந்ததா என்பது மிகவும் சம்சயத்திற்கு உரிய விஷயம்.
இப்படிப்பட்ட ஒரு கொடுமையான நிகழ்வை நமது முன்னோர்கள்
நிகழ்த்தியுள்ளார்களா என்பதை பக்ஷபாதம் இல்லாது முறையான சரித்ரத் தரவுகள்
சார்ந்து ஆராய்வதே சரி. இதுவரை பக்ஷபாதமின்றி ஆராயப்பட்ட படி அப்படி ஒரு
நிகழ்வு நிகழ்ந்ததற்கு சரித்ர ஆதாரம் இல்லை என்று தான் தெரிகிறது.
இங்கு பகிரப்பட்ட சில்பத்தில் கழுவேற்றம் என்பது காண்பிக்கப்பட்டுள்ளது
என்பது மட்டிலும் உண்மை.
கழுவேறியதாகக் காண்பிக்கப்படும் நபர்கள் சமணர்களா என்பதில் “பூணல்” என்ற
ஒரு சம்சயம் மட்டிலும் இல்லை.
நன்றாக உற்றுக்கவனியுங்கள் சிற்பத்தை. கழுவேறிய நபர்கள் “பூணல்”
மட்டிலும் அணியவில்லை. நீண்முடி மண்டையராகவும் தாடியுடனும்
காணப்படுகிறார்கள். ஸ்வேதாம்பரர்களோ திகம்பரர்களோ — யாரும் பூணல்
அணிந்ததாக நான் அறிகிலேன். வெகு நிச்சயமாக சமணர்கள் நீண்முடி மண்டையராகவோ
தாடி வளர்த்தவர்களாகவோ இருக்கவே முடியாது.
பொன்முடி on June 7, 2014 at 9:13 am
எனக்குமடியெடுத்துக்கொடுத்தான் அந்த ஈசன்!
———————————————————————
தமிழில் புணர்ச்சியென்னும் இலக்கணத்தின் பயன்பாடுபற்றிய ஒரு நூலை
பன்னிரண்டாண்டுகளாக எழுதி ஒருவாறு முடித்தபின், அதுவரை பெயரிடாமலிருந்த
அந்த நூலுக்கு ஒரு பெயரைச்சொல்லுமாறு நான் வணங்கும் கருப்பசாமியிடம்
கேட்டுநின்றேன்.
கருப்பசாமியோ, ‘என்னிலும்பெரியவரைக்கேள்!” என்றார். கருப்பசாமி
நேரில்வந்து பேசினாராவென்றால், இல்லை. ஆனால், நாம் மனத்தால் நினைப்பவை
ஒலியாக நம் மனத்தால் கேட்பதைப்போல, இந்த சொற்களை நான்
மனத்தாலேயேகேட்டேன். அதாவது நானேதான்
நினைத்தேனென்றுவைத்துக்கொள்ளுங் களேன்! நானெதற்கு
‘என்னிலும்பெரியவரைக்கேள்’ என்றுசொல்லவேண்டும்?
சரியென்று, எல்லாக்கடவுளர்க்கும் பெரியகடவுளாகிய
சிவபெருமானைவேண்டிக்கேட்டேன். அவரோ, ‘வெல்லம்’ என்று
ஒற்றைச்சொல்லில்விடைதந்தார்!
இந்த ஒற்றைச்சொல்லை எப்படி தலைப்பாய்வைப்பதென்றெண்ணி, தமிழ்க்கடவுளாகிய
முருகப்பெருமானைவேண்டிநின்றேன். அவரோ, ‘ஔவையைக்கேள்!’ என்றுசொன்னார்.
அதன்படி ஔவையாரைத்தொழுது ‘ஔவையாரே பெயர்சொல்லும்!’ என்றேன். அவரோ, ‘தாழி’
என்று சிவபெருமானைப்போல ஒற்றைச்சொல்லில்விடைதந்தார்.
‘வெல்லம்’ ‘தாழி’ என்ற இரண்டுசொற்களையும்வைத்துக்கொண் டு
என்னசெய்வதெனத்தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது, ‘இது
தமிழைப்பற்றியநூலாயிற்றே, இவற்றோடு தமிழென்பதையும்
சேர்த்துப்பார்த்தாலென்ன?’ என்றுநினைத்து, ‘தமிழ்’ ‘வெல்லம்’ ‘தாழி’ ஆகிய
மூன்றுசொற்களையும் சேர்த்துப்பார்த்தால்,
‘தமிழ்வெல்லத்தாழி’ என்றபெயர்வந்தது. இதையே நூலுக்கு பெயராகவைத்தேன்.
நூல் புணர்ச்சியால் பொருளில் மாற்றமுண்டாகுமென்பதை
அடிப்படைக்கருத்தாய்க்கொண்டது. அதற்கேற்றவாறு, ஈசனாலும்
ஔவையாலுமெடுத்துக்கொடுக்கப்பட்ட இந்த நூலின் தலைப்பும் புணர்ச்சியால்
இருவேறுபொருளைக்கொண்டதென்பது இந்த தலைப்பின் சிறப்பு.
அதாவது, தமிழ்வெல்லம் + தாழி = தமிழ்வெல்லத்தாழி என்றுபார்த்தால்,
‘தமிழ்வெல்லத்தை தன்னகத்தேகொண்ட ஒரு தாழி’ என்பதுபொருள்.
இதையே, தமிழ்வெல்லம் + அத்து + ஆழி = தமிழ்வெல்லத்தாழி எனக்கொண்டாலோ,
‘தமிழாகியவெல்லத்தைக்கொண்ட ஆழி (பெருங்கடல்)’ என்றாகிறது.
நூலை ஒரேசொல்லால் தாழியென்றும் ஆழியென்றுஞ்சொல்வது
புணர்ச்சியினாலென்பதும் நூலானது புணர்ச்சியைப்பற்றியதேயென்பதும்
பொருத்தமன்றோ?
ஒரு அரிசோனன் on June 7, 2014 at 11:50 am
மதிப்பிற்கு உரிய கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
தமிழ்நாட்டில் போர்கள் பல நிகழ்ந்திருக்கின்றன. போரில்
பல்லயிரக்கணக்கானவர்கள் கோரமான முறையில் மடிந்தது உண்மையான வரலாறே!
“கலிங்கத்துப் பரணி”யில் எப்படியெல்லாம் மாண்டார்கள் என்பரத்தை
விவரித்திருப்பதைப் படித்தால் வயிற்றைக் குமட்டிக்கொண்டு வரும். அது
இலக்கியத்தின் ஒன்பது சுவைகளில் ஒன்றான அருவருப்புச் சுவை (பீபத்ஸ ரசம்).
அதில் மிகைப்படுத்தல் இருந்தாலும், முதலாம் குலோத்துங்க மன்னனின்
படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமானின் தலைமையில், கலிங்கர்களின் (ஒரிசா)
படை அழித்தொழிக்கப்பட்டது உண்மையான வரலாறுதானே! மேலும், போரில் பிடிபட்ட
எதிரிப் படைத்தலைவர்களின் (மேலைச் சாளுக்கியர்கள்) தலையை கொய்வதும்
சோழர்களின் வழக்கம் என்று வரலாற்றில் குறிக்கப்பட்டு இருக்கிறது.
தங்கள் மன்னன் போரில் வென்றால், தலையைத் துண்டித்துக்கொண்டு தன்னையே
கொற்றவைக்குப் பலியாகக் கொடுக்கும் வழக்கமும் தமிழ்நாட்டில் இருந்து
வந்திருக்கிறது. சில கோவில்களில் வீரர்கள் தங்கள் தலையைத் துண்டிக்க
முயலும் சிற்பங்களைக் காணலாம். அந்த வீரர்கள் பிற்காலத்தில் காவல்
தெய்வமாக வணங்கப்பட்டர்கள். இதுவும் வரலாறே!
அதுபோலவே, கொடிய குற்றங்களுக்கு கழுவேற்றும் தண்டனையும் தமிழ்நாட்டில்
இருந்து வந்திருக்கிறது. கல்வெட்டுகளிலும், மன்னர்களின்
மெய்க்கீர்த்திகளிலும் சிறப்பைப் பற்றிக் குறிப்பார்களே தவிர, எப்படி
ஒருவரைக் கொன்றார்கள் என்று குறிப்பிடுவது வழக்கம் இல்லை.
எனவே, அப்படிப்பட்ட தண்டனை தமிழ்நாட்டில் இல்லை என்று வாதாட இயலாது.
தில்லைக் கோவில் சிற்பத்தில் கழுவேற்றம் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.
இல்லாத ஒன்றை கோவிலில் சேதுக்கி இருக்க மாட்டார்கள்.
தகுந்த ஆதாரம் கிடைக்கும் வரைகழுவேற்றப் பட்டவர்கள் சமணர்களா என்று நாம்
வாதம் செய்துகொண்டு இருக்கலாம்.
சேக்கிழார் மிகைப்படுத்தி எழுதினர் என்று வாதாடலாமே தவிர, அவர்
பொய்யுரைத்தார் (கழுவேற்றத்தைப்பற்றி) என்று என்னால் எடுத்துக்கொள்ள
இயலவில்லை.
உதாரணமாக, திருவாசகத்தில் (கீர்த்தித் திருவகலல்) கரு எப்படி வளருகிறது
என்று மாணிக்கவாசகர் எழுதி உள்ளார். இக்கால மருத்துவக் கண்டுபிடிப்புகள்
வரும்வரை மாணிக்கவாசகர் எழுதியதற்கு ஆதாரம் இல்லை, அதை ஒப்புக்கொள்ள
முடியாது என்றுதான் நாம் நினைத்திருப்போம்.
சமயப் பூசல்களில் மக்கள் சில சமயங்களில் கொடுமையான செயல்களைச் செய்வது
உலக நியதிதான். அது தமிழ்நாட்டிலும் நடந்துதான் இருக்கிறது.
வரலாற்றிலிருந்து நாம் கசப்பான உண்மைகளையும், பாடங்களையும்
கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு அரிசோனன் on June 7, 2014 at 11:53 am
உயர்திரு பொன்முடி அவர்களே!
நல்ல விளக்கம். சொற்புணர்ச்சிகளைப் பற்றி எழுதியது மிகவும் நன்றாக இருக்கிறது.
க்ருஷ்ணகுமார் on June 9, 2014 at 9:39 pm
அன்பார்ந்த ஸ்ரீ அரிசோனன்,
உங்களது வ்யாசத்தில் இரண்டு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.
பெரியபுராணத்தின் ஆரம்பச்செய்யுட்கள் எப்படி இறையருளால் சமைக்கப்பட்டன
என்ற அழகான புனைவு. அழகுற பக்தி உணர்வை ப்ரதிபலிக்கும் புனைவு.
அதற்கு முன் சொல்லப்பட்ட புனைவான சமணக்கழுவேற்றத்துக்கு நீங்கள் ஆதாரமாக
எடுத்துக்கொண்டது புலியூர்க்கோவிலில் உள்ளதாக நீங்கள் பகிர்ந்துள்ள
சிற்பம்.
\\ தகுந்த ஆதாரம் கிடைக்கும் வரைகழுவேற்றப் பட்டவர்கள் சமணர்களா என்று
நாம் வாதம் செய்துகொண்டு இருக்கலாம். \\
இதுவரை ஆராயப்பட்ட ஆதாரங்களின் பாற்பட்டு சமணர்கள் கழுவேற்றப்படவில்லை
என்ற விஷயம் சரித்ர ரீதியாக நிர்த்தாரணம் செய்யப்பட்ட விஷயம்.
ஹிந்துத்வவாதிகள் மற்றும் இடதுசாரி சார்புடைய ஆனால் நிஷ்பக்ஷ வாதியால்
….. இருதரப்பிலிருந்தும் நிர்த்தாரணம் செய்யப்பட்ட விஷயம்.
இதையெல்லாம் வாசித்தறிந்த பின்னரும்………இதை மறுதலிக்கும் விதத்தில்
ஆதாரங்கள் ஏதும் இல்லாத பக்ஷத்திலும் கூட…….. கழுவேற்றப்பட்டவர்கள்
சமணர்களா என்று வாதம் செய்ய முனைவது விதண்டாவாதம் அல்லது சுஷ்கதர்க்கம்
ஆகும்.
நீங்கள் வ்யாசம் எழுதும் சமயம் உங்களுக்கு இந்த விஷயத்தின் முழுப்பின்னணி
தெரியாமல் இருந்திருக்கலாம் என்று ஏற்றுக்கொள்கிறேன்.
Again revisit the summary of PAK sir.
சம்பந்தர் காலத்திய கழுவேற்ற சம்பவம் சேக்கிழார் மற்றும் நம்பியாண்டார்
நம்பிகளால் கிட்டத்தட்ட 350 வருஷங்களுக்கு பிற்பட்ட காலத்தில்
வடிக்கப்பட்டதால் நம்பகத் தன்மை குறைகிறது என்று பாக் சார்
அபிப்ராயப்படுகிறார். மறுக்க முடியவில்லையே. # 1
யார் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறார்களோ — அதாவது சமணர்கள் —
அவர்களது இலக்கியங்களிலோ கல்வெட்டுகளிலோ இது பற்றிக் குறிப்பேதும் இல்லை.
இவ்வளவு பயங்கரமான ஒரு சமாசாரத்தை இவர்களது எதிரிகளான சைவர்கள்
செய்திருந்தார்கள் என்றால் வறுத்தெடுத்திருக்க மாட்டார்கள்? atleast அறம்
பாடியிருக்க மாட்டார்கள்? # 4
Its not as if there have been no stone carvings of Jains with respect
to this issue. In fact some stone carvings which narrates such an
incident as described by PAK sir at # 5 have been found. But those
were dated at a latter period as alleged by PAK sir and accordingly
were rejected on the same logic as you find at #1.
\\ தில்லைக் கோவில் சிற்பத்தில் கழுவேற்றம் காண்பிக்கப்பட்டு இருக்கிறது.
இல்லாத ஒன்றை கோவிலில் சேதுக்கி இருக்க மாட்டார்கள். \\
கோயில் சிற்பங்களில் வடிக்கப்பட்ட விஷயங்களில் இருந்து சரித்ரத்தையும்
பெறலாம் என்பது ஏற்புடைய விஷயம். ஆனால் கோவில் சிற்பங்களில் காணப்படும்
விஷயமனைத்தும் சரித்ரத்தையே படமெடுக்கிறது என்பது ஏற்புடையது அல்ல. Again
specifically read, #1 and #5 to understand the bias and flaw in your
above statement.
உங்கள் வ்யாசத்தில் தில்லைச்சிற்றம்பலக் கோவிலில் உள்ளது என்ற படிக்கு
பகிரப்பட்டுள்ள சிற்பம் கழுவேற்றம் என்ற விஷயத்தைக் காண்பிக்கிறது.
அவ்வளவே. கழுவிலேற்றப்பட்டவர்கள் பூணூல் அணிந்துள்ளார்கள். நீண்முடி
மண்டையராகவும் மீசை தாடி வளர்த்தவர்களாகவும் காணப்படுகிறார்கள்.
சமணக்கழுவேற்றம் என்ற விஷயம் மனதிலேறிய உங்களுக்கு இந்த சிற்பத்தைக்
கண்டதும் கழுவில் காணப்பட்டவர்களை சமணர்களாகக் கண்டது வியப்பில்லை. ஆனால்
சமணர்களின் அடையாளங்களுக்கு விரோதமாகக் காணப்படும் இவர்களின் லக்ஷணாதிகளை
அறிந்த பின்னரும் சாரமில்லாத கற்பனையை மறுதலிக்காதது வியப்பே.
சிவனடியார்களையும் திருமாலடியார்களையும் மதிக்க வேண்டும் என எங்கள்
வள்ளல் அருணகிரிப்பெருமான் போதித்துள்ளார். நான் சைவனல்ல. ஆனால்
சிவனடியார்கள் பால் மிக்க மதிப்புடையவன். சரித்ரத்தை நிஷ்பக்ஷமாக
ஆராய்ந்துள்ள ஹிந்துத்வரான ஸ்ரீமான் ஜடாயு அவர்களும் இடதுசாரி சார்புடைய
ஸ்ரீமான் பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன் அவர்களும் வண்டி வண்டியாக காரண
கார்யங்களை சமர்ப்பித்து — சமணக்கழுவேற்றம் என்பது வெற்றுப்புனைவு என்று
நிர்த்தாரணம் செய்துள்ளார்கள்.
நான் மிக மதிக்கும் சைவர்கள் மாற்று மதத்தை ஆச்ரயிக்கும் சமணர்களை
கழுவேற்றக்கூடிய செயற்பாடுடைய கொடிய ஒழுக்கமுடையவர்கள் அல்லர் என்பதனையே
மறுதலிக்க முடியாத சரித்ரச் சான்றுகள் காண்பிக்கின்றன.
அப்படியிருக்க இவ்வளவு ஆதாரம் இருக்கும் போதும் வெற்றுப்புனைவுகளின்
பாற்பட்டு சைவர்கள் கிராதர்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்வதால்
மட்டிலும் சைவர்கள் கொடியவர்கள் ஆக மாட்டார்கள் என்பது என் ஆழ்ந்த
கருத்து.
அன்பே சிவம் என்று படத்தின் பெயரை வைத்து விட்டு …….கூத்தாடியான
கமலஹாசன்…… படம் முழுதும் *அன்பே சிவம்* என்று சொல்லக்கூடிய ஆசாமி
…….மஹாகிராதனாக எல்லோரையும் கொடுமை செய்பவனாகப் படத்தைக் காண்பித்தது
…….இந்த தளத்தில் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
கற்பனையான விஷயத்தை மனதில் வாங்கி ஏற்கவொண்ணா புனைவை தவறுதலாக வடித்தமை
கண்டனத்துக்கு உரியதல்ல. ஆனால் சரித்ரத்துக்கும் ந்யாயத்துக்கும்
ஒவ்வாதபடிக்கான விஷயத்தை சுற்றிச் சுற்றி உரக்கப்பேசுதல் கடும்
கண்டனத்துக்கு உரியது.
சைவர்கள் கிராதர்கள் அல்லர். மாற்றுச் சமயத்தவர்களை……. அவர்கள் மாற்றுச்
சமயத்தின் படி ஒழுகுகிறார்கள் என்ற படிக்கு மட்டிலும்…….மிகக்கொடிய
விதத்தில் அறநிலைக்கொவ்வாத படிக்கு கொலை செய்யும் வன்மமுடையவர்கள்
அல்லர். இது சைவனல்லாத நான் சொல்லும் விஷயம். இதை மறுதலிக்க விழைபவர்கள்
……முறையான சரித்ர ஆதாரங்களை முன்வைத்து மட்டிலும்…….. சைவர்களால்
சமணர்கள் க்கழுவேற்றப்பட்ட விஷயத்தை நிர்த்தாரணம் செய்யப் புகலாம்.
சமணர்கள் மாற்றுச் சமயத்தவரே என்றாலும் நாம் ஏற்கவொண்ணா சமயக்கொள்கைகளைக்
கொண்டிருந்தவர்கள் என்றாலும்…………. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தேசத்தில்
நிலவி வந்த சமயங்கள் கடந்த அறக்கோட்பாடுகளின் பாற்பட்டு இவ்வளவு இழிவான
தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று கண்டிப்பாக உரக்கச் சொல்வேன்.
சமணக்கழுவேற்றம் சம்பந்தமாக உருப்படியான ஆதாரம் என்று ஏதாவது
கொடுக்கப்பட்டாலன்றி மேற்கொண்டு விவாதிப்பதற்கு அருகதை வாய்ந்த விஷயமாக
இதை நான் கருதவில்லை.
T R Ramesh on June 9, 2014 at 10:18 pm
ஓர் அரிசோனன் அவர்கட்கு ( நீவீர் ஒரு அரிசோனன் அல்லர் )
பெரிய புராணம் உங்கள் வீட்டுத் தோட்டது கிள்ளுக் கீரையன்று. உங்கள்
இட்டம் போல் கிள்ளி எறிதற்கு. தெய்வச் சேக்கிழார் பெருமான், குறுமுனியும்
ஒப்பாகா மாண்பும் ஏற்றமும் உடையவர். தில்லை மூதுரின் கோலமா பொதுவில்,
தியாகேசப் பெருமானும் இவர்கள் அடியாரின் அடியேன் யான் என்று தென் தமிழின்
பயனுரைத்த பெருமை உடை தில்லை வாழ் அந்தணரை விடுத்தது ஒரு சிவாச்சாரியாரை
வலிந்து புகுத்தியுள்ளீர். முப்போதும் திருமேனி பிற சிவாலயங்களில்
தீண்டிச் செய்யும் அவர் சீரைப் பாடிய சேக்கிழார் பெருமான் அவரை “ஒய்”
என்று அனுசிதமாக அழைப்பதாக மீண்டும் மீண்டும் எழுதியுள்ளீரே. தக்க
ஆசிரியரிடம் திருமுறையை முறையாகப் பயின்று, பழைமையும், பண்பும்,
பயிற்சியும், நண்பும், விழுப்பமும், சைவ ஒழுக்கமும், மாட்சியும் பெற்று,
எழுத்தும், சொல்லும், யாப்பும் அறிந்து, அதன் பின்னரும் எழுத வேண்டும்
என்ற நசை உண்டாயின் நாயன்மார் (நாயன்மார்கள் என்றுரைப்பது பிழை) மீது
மாறாத பக்தி கொண்டோரைத் தலைப்பட்டு அவர் தம் சம்மதம் பெற்று நீர்
எழுதலாம். சிவ சிதம்பரம்.
K.S.Sankaranarayanan on June 10, 2014 at 8:07 pm
ஓய் என்று எழுதியது தவறாய் இருக்கலாம். ஆனால் அறிசோணன் யார் என்ற என்
சந்தேஹம் தீர்ந்தது. நிற்க.
சமணர்கள் எந்தக் காலத்திலும் தமிழகத்தில் பெரும்பான்மையோர் இல்லை, ஆனால்
ஏழாம் நூற்றாண்டில் அவர்கள் தமிழகத்தின் இரண்டு பேரரசர்களையும் தங்கள்
மடத்துக்கு மாற்றி விட்டார்கள். அதனால் அப்போது தமிழ் நாடு ஐய்ந்து
வருஷம் முன்பு ஆந்திரா இருந்தது போல் இருந்தது.
இஸ்லாமிய படை எடுப்பு நடந்ததால் சமணர்கள் தங்கள் அஹிம்சைக் கடைப்பிடிக்க
முடியாமல் இங்கு சைவத்திற்கும், வடக்கே வைஷ்ணவத்துக்கும் மாறினார்கள். (
அதான் vegeterian ஹோட்டல் இங்கே சைவம் அங்கே வைஷ்ணவம்)
மகேந்திரன் ஏன் சைவத்துக்கு மாறினான் என்றால் ஒரு சமணனாக அவனால்
புலிகேசியுடன் சண்டை போட முடியவில்லை.( அஹிம்சை. சமணம் சண்டை போட விடாது)
கோட்டைக் கதவை சாத்திக்கொண்டு இருந்துவிட்டு பழி ஏற்றான். பின்னர்
யுத்தம் செய்ய வேண்டி அவன் சைவமாக மாரி, அவன் மகன் மகேந்திரன் சிவ
பெருமான் திரிபுரத்தை எரித்தது போல் வாதாபியை எரித்தான்.
க்ருஷ்ணகுமார் on June 11, 2014 at 2:30 pm
வ்யாசத்தின் கருப்பொருளிலிருந்து விலகிக் கருத்துப்பதிவதற்கு க்ஷமாயாசனங்கள்.
ஸ்ரீ டி. ஆர். ரமேஷ் அவர்களுடைய http://templeworshippers.org என்ற இணைய
தளத்தை பார்க்க நேரிட்டது மிக்க மகிழ்ச்சி.
Temple Worshippers Society என்ற ஸ்தாபனம் மூலம் தமிழக ஆலயங்களில்
ஆக்ரமிப்புகள் மற்றும் செக்யுலர் சர்க்கார்களின் அனாவச்ய தலையீடுகள்
போன்றவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக இணையதளம் தெரிவிக்கிறது.
இந்த ஸ்தாபனத்தின் குறிக்கோள்கள் செயல்பாடுகள் பற்றி தமிழ் ஹிந்து
தளத்தில் ஸ்ரீ ரமேஷ் அவர்கள் விரிவாக எழுதுவது பலருக்கும் பயனளிக்கும்.
இயன்றால் http://www.brajfoundation.org இணைய தளத்தைப் பார்வையிடவும்
என்றும் விக்ஞாபித்துக்கொள்கிறேன். இந்த ஸ்தாபனம் 84 க்ரோசம் விஸ்தீர்ணம்
உள்ள வ்ரஜ தாமம் முழுவதையும் புனருத்தாரணம் செய்வதில் முனைந்துள்ளது.
வ்ரஜ தாமத்தில் இருப்பதாகக் கருதப்படும் கிட்டத்தட்ட 1000 நீர்நிலைகள்,
பற்பல மலைகள், காடுகள், விசேஷமான தாவரங்கள் போன்றவற்றை மீட்கப்
பாடுபடுகிறது. முதற்காரியமாக முழு வ்ரஜ தாமத்தையும் அதில் உள்ள இயறகைச்
செல்வங்களைப் பற்றியும் முறையாக survey and mapping செய்துள்ளது. பற்பல
நீர்நிலைகளைப் போராடி மற்றும் கனரக மிஷனெரிகள் துணைகொண்டு மீட்டெடுத்து
சுற்றுலாக்கண்ணோட்டத்துடனும் ஆன்மீகக் கண்ணோட்டத்துடனும் புனருத்தாரணம்
செய்துள்ளது. ப்ருந்தாவனத்தில் ப்ரபலமான ரங்கஜீ மந்திர் அருகில் உள்ள
க்ருஷ்ண லீலைகளுடன் சம்பந்தப்பட்ட ப்ரம்ம சரோவர் என்ற தடாகம் ஓரிரு
வருஷங்கள் வரை குப்பைக்கூளமாக காட்சியளித்தது. பற்பல எதிர்ப்புகளையும்
எதிர் கொண்டு இந்த தடாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல
நீர்நிலைகள் மிகக் குறிப்பாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பல பணிகளை
நேரிலேயே பார்த்து வியந்தும் இருக்கிறேன்.
தமிழகக் கோவில்களைப் பற்றிய முழுத்தகவல் கலைக்களஞ்சியம் தமிழ் ஹிந்து
அன்பர்களால் தயாரிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பல்லாவரத்தருகே மகேந்த்ரவர்மன் கட்டிய ஐந்து குகைக்கோவில்கள் இன்று
தர்க்காவினால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள அவலத்தை ஸ்ரீ ரமேஷ் அவர்களின்
இணையதளம் பகிர்கிறது.
தமிழகக் கோவில்கள் அனைத்தைப் பற்றியும் கோவிலின் வரைபடம், அதில் உள்ள
மூர்த்திகள், அதன் ஸ்தலபுராணம், கோவிலுக்கு உள்ள சொத்துகள், நிலபுலன்கள்,
ஸ்தல வ்ருக்ஷம், கோவிலைச் சார்ந்த நீர்நிலைகள் ( கோசக க்ஷேத்ரம்
என்றறியப்படும் ஆமருவியப்பனின் தேரெழுந்தூர் கோவிலருகே உள்ள குளம்
ஆக்ரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் அபாயம் பற்றி இங்கோ அல்லது வேறு
தளத்திலோ வாசித்தது நினைவு) இவையாவும் compile செய்யப்பட வேண்டும்.
தமிழகத்து கோவிலைச் சார்ந்த தடாகங்கள், குளங்கள் பற்றிய நிலை மனதை
வாட்டும் விஷயம். எண்ணிறந்த நீர்நிலைகள் தூர்ந்து போய் நீரில்லாமல்
வற்றிக்காட்சியளிப்பது வருத்தம் தரும் விஷயம். பற்பல நீர்நிலைகள்
ஆக்ரமிப்பாளர்களால் அகற்றப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள்
கட்டப்பட்ட அவலம் தமிழகத்திற்கே உரிய அவலம்.
தமிழகத்தில் உள்ள ஏரிகள் பலவும் பஸ் நிலையங்களாகவும், குடியிருப்புக்
காலனிகளாகவும், விளையாட்டு மைதானங்களாகவும், ஆக்ரமிக்கப்பட்ட
வயல்வரப்புகளாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆறுகள் அனைத்தும் மணல்வாரி
அரசியல் வ்யாதிகளால் பாழ்செய்யப்பட்டது போதாதென்று சாக்கடைகளுடன்
கலக்கப்பட்டு சரிசெய்யக் கடினமான வகையில் ப்ரதூஷணம் செய்யப்படுகின்றன.
இந்த அவலத்தினால் தமிழகத்தின் நிலத்தடி நீர் அதலபாதாளத்தை நோக்கிப்
போய்க்கொண்டிருக்கிறது.
கோவில்களையும் கோவில்களில் உள்ள கல்வெட்டுகளையும் பாதுகாக்க முனைபவர்கள்
மிகுந்த பரிச்ரமம் எடுத்து ஒரு முழுமையான நோக்குடன் கோவில் சம்பந்தப்பட்ட
அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைந்த ரீதியில் பாதுகாக்க முயற்சி எடுக்க
வேண்டியது காலத்தின் கட்டாயம்.
முருகன் அருள் முன்னிற்க.
ஒரு அரிசோனன் on June 13, 2014 at 3:45 am
மதிப்பிற்கு உரிய டி.ஆர். ரமேஷ் அவர்களே,
உயர்திரு கிருஷ்ணகுமார் எழுதியதுபோல உங்கள் இணைய தளம் மிகவும் நன்றாக
இருக்கிறது. இறையிடங்களின் மேன்மையை மிகவும் நன்றாக வெளிப்படுத்தி
உள்ளீர்கள். உங்கள் தொண்டு வாழ்க, வளர்க என்று எல்லாம் வல்ல இறைவனை
ஏத்துகிறேன்!
உங்கள் பின்னூட்டத்தில் எம்பெருமான் சிவனின் அம்சமான உருத்திரனைக்
காணுகிறேன். இறைவனின் அந்த அம்சத்தை உங்கள் எழுத்துகள் மூலம் எனக்குக்
காட்டிகொடுத்தமைக்கு மிக்க நன்றி! எல்லாம் அவன் அருள்!
நீங்கள் எழுப்பிய கருத்துகளுக்கு எனது சிற்றறிவுக்கு எட்டியமட்டில்
விளக்கம் கொடுத்திருக்கிறேன். பிழையிருந்தால் பொறுக்குமாறு
வேண்டிக்கொள்கிறேன்.
1. தோழமை இருந்தால் எவரையும் ‘ஒய்’ என்றழைக்கலாம். என் உருவகக் கதையில்
சேக்கிழார் பெருமானுக்கும், புனை பாத்திரமான ஒரு சிவாச்சாரியாருக்கும்
உள்ள நட்பையே அந்த ‘ஓய்’ என்ற விளிப்பின்மூலம் காட்டியிருக்கிறேன்.
சுந்தரர் பெருமான் சிவபெருமானையே நண்பனாகக் கருதிப் பாடல் இயற்றியது
தாங்கள் அறியாததல்லவே!
2. நாயன்மார்கள் என்று ஏன் எழுதக்கூடாது என்று எனக்கு விளக்கினால்,
மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன். பல கோவில்களில் ‘நாயன்மார்கள்’ என்று
எழுதியிருப்பதைப் படித்திருக்கிறேன். மரியாதையைக் குறிக்கும் பொருட்டு
‘கள்’ என்ற விகுதி சேர்க்கப்படுவது முறைமைதானே!
3. தில்லைவாழ் அந்தணர்கள் வணங்கத்தக்கவர்கள் என்று சுந்தரர் பெருமானே
தனது திருத்தொண்டத்தொகையில் உரைத்துவிட்டதால்தான், மகாபாரதம் எழுத
வேதவியாசருக்கு ஆனைமுகத்தோன் எழுத்தராகப் பணி புரிந்து அருளியதுபோல,
இறைவனே தனது அடியாரான ஒரு சிவாச்சாரியாரைத் தன அடியார்களின் புராணத்தை
எழுத்தராக இருந்து சேக்கிழாருக்கு உதவ அணிப்பிவைத்ததாகப் புனைந்துள்ளேன்.
4. நான் ‘அரிசோனன்’ அல்ல என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? அரிசோனன்
என்பதற்கு எப்படிப் பொருள் செய்து கொண்டீர்கள்?
உருத்திரமூர்த்தியான தாங்கள், எனக்கு ‘அன்பே உருவான சிவமாக’ப்
பதிலக்குமாறு வேண்டி விழைகின்றேன்.
ஓம் நமச்சிவாய! தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா
போற்றி!! திருச்சிற்றம்பலம்!
Parswanathan on June 14, 2014 at 3:00 pm
அன்பர்களுக்கு சில விளக்கங்கள்:
1. திகம்பர சமணர்களில் இல்லறத்தார் பூணூல் அணிவர்; ஒரு ஆச்சாரமான இல்லற
சமணன் (ஸ்ராவகன் என்று ஆண்களையும்; ஸ்ராவகி என்று பெண்களையும் அழைப்பர்)-
பூணூல் அணியும் ஜைனன்- எவ்வாறு சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்று
“ஸ்ராவாக சாரம்” (இல்லறத்தார் ஒழுக்கம்) என்ற நூல் விரிவாக விளக்கும்.
தற்போதய தமிழக திகம்பர இல்லறதோர் பூணூல் அணிந்தாலும், சந்தியாவந்தனம்
செய்வது மற்ற மதங்களை போலவே குறைந்து வருகிறது. ஆனால் திகம்பர சாது
பூணூல் அணிய மாட்டார்;தாடியும் ஜடா முடியும் தரிக்க மாட்டார்.
சிற்பத்தில் உள்ளது ஒன்று சமண இல்லறதாராய் இருத்தல் வேண்டும் அல்லது
புனைவாக இருத்தல் வேண்டும்.
2. எனக்கு தெரிந்த வரையில், சமண நூல்களில், கழுவேற்றதுக்கான குறிப்புகள்
இல்லை. ஒரு வேளை கழுவேற்றிய பிறகு, தமிழக ஜைனர்கள் உயிருக்கு பயந்து,
குறிப்புகள் எழுதாமல் இருந்திருக்கலாம்.
பார்ஸ்வநாதன்.
T R Ramesh on June 15, 2014 at 7:50 pm
ஓர் அரிசோனன் அவர்கட்கு
சிவனருளும், குருவருளும் நிங்கட்கு சிறக்க!

“””””” பொய்யே நடையாய் கட்டித் தோன்றிய சீவக சிந்தாமணியில் அரசன்
ஆழங்கால்பட்டிருப்பது கண்டு சேக்கிழார் பெருமான் கருணையினால்,
இம்மைக்கும் மறுமைக்கும் சிவகதையே உறுதி பயக்கும் எனக்கொண்டு, அவன்
உய்யும் பொருட்டும் உலகம் உய்யும் பொருட்டும் அம்பலவானரே அடியெடுத்து
கொடுத்துப் பாடிய திருமுறை திருத்தொண்டர் புராணம். அண்டர்நாயகன்
அடியெடுத்துக் கொடுத்த அருட்செயலை அனுச்சிதமாகப் புனைந்துரைத்தல் அடாத
செயல். சங்கரன்தாள் தமது சிரங்கொள் தெய்வச் சேக்கிழார் பெருமானும்
அடியார் சரிதம் உரைக்கும் போது “நாந்தெரிந்தவாறு உரைப்பாம்” என்றே
அருளிச்செய்வார். தெய்வச் சரிதங்களில் நாம் புனைந்துரைக்க வேண்டியன
எவையும் இல்லை.
சேக்கிழார் பெருமான் ஆடல்வல்லானிடம் திருத்தொண்டர் சீர் பாட இறையருளை
வேண்டித் தில்லைப் பொதுவில் இறைஞ்சா நிற்ப, இலகு மன்றினில் ஆடுவார்
திருவருளினால் “உலகெலாம்” என்ற வானொலி சீரடியார் அனைவரும் கேட்க எழுந்தது
என்பதே உண்மை.
இ:.து இவ்வாறாக, அங்கு சிவாச்சாரியார் ஒருவரைத் தோற்றிவித்து, தொண்டர்
சீர் பரவுவார் அவரை தோழமை பற்றி அடாது விளிப்பார் எனக்கொள்ளல் ஆமாறோ?
“”””””

“”””நாயன்மார் என்ற சொல் பன்மைச் சொல். நாயன்மார்கள் என்றுரைத்தல் மிகை. “”””

“”””” அரிசோனன் என்ற சொல் உயிர் எழுத்துடன் தொடங்குதலால் ஒரு அரிசோனன் என
வழங்கலாகாது. “ஓர் அரிசோனன்” என்பதே சரி. “””””

“”””அடியேனை மிகவும் சிறப்புச் செய்கின்றீர். அடியேன் நாடகத்தால் அடியார்
போல் நடிக்கும் செய்கையன்றி சிவமாம் பெற்றியினை அடையும் செய்கைகள்
எவையும் புரிந்திலேன். “””””

“””””””அம்பலவாணர் அருளாலே உங்கட் பணிகள் என்றும் இன்பம் பெருகும் இயல்பு
பெற்று விளங்குவதாக!
சிவ சிதம்பரம் “””””””
க்ருஷ்ணகுமார் on June 16, 2014 at 7:35 pm
\\ சிற்பத்தில் உள்ளது ஒன்று சமண இல்லறதாராய் இருத்தல் வேண்டும் \\
அன்பின் ஸ்ரீ பார்ஸ்வநாதன்,
இல்லறத்தார் ஜடா முடி தரித்தல் திகம்பர ஜைன ஆசாரத்திலோ அல்லது ஸ்வேதாம்பர
ஜைன ஆசாரத்திலோ சொல்லப்பட்டிருக்கிறதா?
அடியவன் on June 17, 2014 at 8:50 am
நானும் கூட, டி.ஆர். ரமேஷ் அவர்களைப் போல இறைச் செயலில் இப்படி ஒரு
புனைவு செய்வதை ஏற்க மனம் இல்லாதிருக்கிறேன். இறைவன் அடிஎடுத்துக்
கொடுத்ததைப் புனைவினால் விவரித்தல், பின்னாளில் அந்த இறைச் செயலுக்கே
கெட்ட பொருளைகே கற்பிக்க நம் மதத்தின் விரோதிகளுக்கு வாய்ப்பளிக்கும்
அபாயம் உள்ளது.
எனக்குத் தெரிந்து சேக்கிழார் அடிப்பொடி, யாழ்ப் பல்கலைக் கழகத்தால்
முனைவர் பட்டம் தந்து சிறப்பிக்கப்பட்ட சிவஞானி திரு
டி.என்.ராமச்சந்திரன் அவர்களுக்கு டி.ஆர்.ரமேஷ் என்ற பெயரில் ஒரு
புதல்வன் உண்டு. அவரும் இங்கு பதியும் ரமேஷ் அவர்களும் ஒருவரா என்ற ஐயம்
எனக்கு உள்ளது.
BALA SUNDARAM KRISHNA on June 18, 2014 at 9:50 am
சமணர்களின் கழுவேற்றம் புனைவாக இருந்தால், ஏன் மதுரை மீனாட்சி கோயிலுள்
(தெப்பக்குளத்துப்படி) மற்றும் இங்கு காட்டப்படும் சிதம்பரத்திலும்
இருக்கும் கல்வெட்டுக்களை நீக்க கிருஷ்ணகுமார் போன்றோர் போராடக்கூடாது ?
கல்வெட்டுக்கள் இருக்கும் வரை கதைகளும் இருக்கும் வரும் தலைமுறைகள் நம்பும்.
Sadayarkoil-Subbu on June 20, 2014 at 8:44 am
சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என்.ராமச்சந்திரன் அவர்களின் மூன்றாவது
புதல்வர் தாம், இங்கு இடம் பெறுகின்ற பதிவாளர் திரு T. R. ரமேஷ் அவர்கள்.
க்ருஷ்ணகுமார் on October 5, 2014 at 9:34 pm
அன்பார்ந்த ஸ்ரீமான் *ஓர்* அரிசோனன்
நீங்கள் கருத்துப்பதிவது ஹிந்து அறிவியக்கத்தின் ஒரு அங்கமாக விளங்கும்
தமிழ் ஹிந்து தளத்தில் என்ற புரிதல் உங்களுக்கு இருக்கும் என
நம்புகிறேன்.
\\\\ ஆக, சேக்கிழார் எழுதியது பொய் என்றும், PAK சாரும், மதிப்பிற்கு
உரிய ஜடாயு அவர்களும் எழுத்துதானே உண்மையாகப் பட்டது. அதுதானே உங்கள்
வாதமாக இருந்தது! \\\\ சேக்கிழார் மிகைப்படுத்தி எழுதினர் என்று
வாதாடலாமே தவிர, அவர் பொய்யுரைத்தார் (கழுவேற்றத்தைப்பற்றி) என்று
என்னால் எடுத்துக்கொள்ள இயலவில்லை. \\\\ தகுந்த ஆதாரம் கிடைக்கும்
வரைகழுவேற்றப் பட்டவர்கள் சமணர்களா என்று நாம் வாதம் செய்துகொண்டு
இருக்கலாம். \\\\
நீங்கள் ஒரு விஷயத்தை *******சரித்ர பூர்வமானது******** என்று நிறுவ விழைந்தால்……….
யார் எழுதினார்கள் என்று உரத்துக்கூறுவதில் அர்த்தமே இல்லை.
என்ன கூறினார்……… அதற்குத் தரவுகள் யாவை என்பதில் தான் விஷயம்
இருக்கிறது…….. அதாவது நிர்த்தாரணம் செய்யப்பட வேண்டிய விஷயம்
*******சரித்ர பூர்வமானது****** என்றால்…………
சிறியேனைப்பொறுத்தவரை சிறியேன் பகிரும் கருத்துக்கள் நிர்த்தாரணம்
செய்யப்பட்ட அறுதி முடிபுகள் என்ற படிக்கு…… ஆழமான வாசிப்பு இருந்தால்
மட்டிலும்……. அப்படியான விஷயங்களைப் பற்றி மட்டிலும்…… நிஸ்ஸம்சயமாகக்
கருத்துப் பதிவது வழக்கம். அப்படி இல்லாத விஷயங்களில் சிறியேனின் புரிதல்
என்ன என்று பகிர்ந்த பின்னரே கருத்துப்பதிவது வழக்கம்.
சிறியேன் ஒரு கருத்தைத் தவறாகப் பதிந்திருந்தால் ……….. தள வாசகர்
யாரேனும் தகுந்த தரவுகளுடன் அதை மறுதலித்தால்…… சிறியேனுடைய கூற்று தவறு
என்று நிர்த்தாரணம் செய்யப்பட்டால்…… சிறியேன் அடையும் மகிழ்ச்சிக்கு
அளவாகாது. சரியான புரிதலை சிறியேன் மட்டிலும் பெறுவதில்லை. தளத்தின்
அனைத்து வாசகர்களும் பெறுவார்கள்.
தெய்வச் சேக்கிழார் பெருமான் எழுதியது பெரிய புராணம் – திருத்தொண்டர் புராணம்.
தளத்தின் பீஷ்ம பிதாமஹரான ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் புராணம் பற்றிக்
கூறிய இரு கருத்துக்களை உங்கள் கவனத்துக்கு வைக்கிறேன்.
கருத்து :- 1
http://www.tamilhindu.com/ 2011/08/tamils-and-vedanta-6/
\\\\ மீண்டும் சொல்லுகின்றேன். திருவிளையாடற்புராணம் போன்ற சைவபுராணங்கள்
அனைத்துக் கற்பனையே. சிவனுக்கு உமை என்ற மனைவியும் இரு பிள்ளைகளும்
என்பதெல்லாம் அகண்டப் பொருளை அனுபவத்திற்குக் கொண்டுவர, உருவுடைய மனுடப்
பிறவி அறிந்துகொள்ளப் பெரியவர்கள் மேற்கொண்ட உத்தியே. புராணக் கதைகளை
உன்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர். \\\\\
******* புராணக் கதைகளை உன்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர் *******
இந்த மேற்கண்ட வாசகத்தை அழுத்தம் திருத்தத்துடன் வாசிப்பீர்களாக.
கருத்து :- 2
http://www.tamilhindu.com/ 2013/10/sivadvaita-bhashyam/
சிறியேன் :-
\\\\ \\\\நீலலோஹித ருத்ராம்சத்துடன் மஹாகாளேஸ்வர ஸ்வாமி ஆசியுடன்
அவதரித்தார் என்று பெளராணிகத்தனமான நம்ப முடியாத செய்தி
கூறப்பட்டுள்ளது.\\\\
நம்ப முடியாத செய்தி என்று மட்டிலும் சொல்லியிருந்தால் கூட மேற்கண்ட
வாசகம் சரியான பொருள் தந்திருக்கும். அதற்கு பௌராணிகத்தனமான என்ற விகுதி
வருத்தத்தை அளிக்கிறது.
புராணங்களைத் தாழ்த்திச் சொல்ல வேண்டும் என்பது தங்கள் அபிப்ராயமாக
இருக்காது என்பது என் புரிதல். பின்னிட்டும் இந்த அபசப்தத்தை
தவிர்த்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.
அஷ்டாதச மஹாபுராணங்கள் யாவை என்பதில் அபிப்ராயபேதம் இருக்கலாம்.
புராணங்களில் இடைச்செருகல்கள் இருக்கலாம் என்பது சிஷ்டர்களும்
ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமே.
தசலக்ஷண புராணானி என…..ஸ்ருஷ்டி வர்ணனம் (facts as to cosmos and
creation) பூகோளககோள வர்ணனம் (Geographical descriptions) …..ரிது
வர்ணனம் (description of seasons) ….ராஜவம்சவர்ணனம் (facts about history
of kings)….என்றெல்லாம் கருத்துடன் ஸலக்ஷணமாக……. சாக்ஷாத்
விஷ்ணுஸ்வரூபியான வ்யாசரால் எழுதப்பட்ட புராணங்களில் ஆங்காங்கு காலக்ரமம்
சொல்லுதல் அல்லது இலக்கியச்சுவை கருதி மிகைப்படுத்தல்களும்
இருக்கலாமேயன்றி புராணங்கள் மிகப்பெரும்பகுதி தத்வார்த்தம் மற்றும்
மிகத்தேவையான தகவல்களின் கருவூலம் என்பது என் புரிதல். \\\
ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் :-
\\\\\ புராணங்கள் சைவசித்தாந்தத்திலும் பிரமாணமே. சில்ர் வரலாற்று
உண்மைக்குச் சற்றும் பொருந்தாமல் தாம் கருதியவற்றை மிக் உயர்த்திக் கூற
நிலை நாட்ட அவை ஏதோ புராணங்களில் உள்ளதாக எழுதிவிடுகின்றனர். அக்கற்பனை
மொழிகளைப் பிரமாணமாக எடுத்து ஆளுவோரின் கருத்து வலுவற்றதென
ஒதுக்கப்படும். புராணப் பிரசங்கம் செய்வோர் இத்தகைய கற்பனைகளில்
ஈடுபடுவர். ‘நீலகண்ட மஹா காவியம்’ எனும் நூல் அத்தகைய கறபனை என்பது என்
கருத்து. அவர்களின் கற்பனை மொழிகளையே இக்கட்டுரை ‘பெளராணிகத்தனமான’
என்னும் பிரயோகத்தால் ஒதுக்குகின்றது. தாங்கள் கூறுவதிலும் உண்மை உள்ளது
. என்கூற்றிலும் உண்மை உள்ளது. மீண்டும் என் வணக்கத்தையும் நன்றியையும்
தெரிவித்துக் கொள்கின்றேன். \\\\
******* சில்ர் வரலாற்று உண்மைக்குச் சற்றும் பொருந்தாமல் தாம்
கருதியவற்றை மிக் உயர்த்திக் கூற நிலை நாட்ட அவை ஏதோ புராணங்களில்
உள்ளதாக எழுதிவிடுகின்றனர். அக்கற்பனை மொழிகளைப் பிரமாணமாக எடுத்து
ஆளுவோரின் கருத்து வலுவற்றதென ஒதுக்கப்படும். *******
மேற்கண்ட வாசகத்தை அழுத்தம் திருத்தமாக வாசிப்பீர்களாக.
தெய்வச் சேக்கிழார் பெருமான் எழுதியது புராணம். புராணக்கதைகளை உண்மை
என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர் என்பது முனைவர் ஐயா அவர்களின்
கருத்து. அதற்கு மாறுபாடான கருத்தைக் கொண்டவன் சிறியேன்.
நிற்க.
1. புராணங்களில் ****இருந்தும் ***** வரலாற்றை கரந்துறையலாமேயன்றி
*****…………..புராணங்கள் சொல்வது எல்லாம் சரித்ரம்***** …………….என்பது அறிவு
பூர்வமான வாதம் ஆகாது………… ஆகவே ஆகாது……..
2. \\\\ ஆக, சேக்கிழார் எழுதியது பொய் என்றும், PAK சாரும், மதிப்பிற்கு
உரிய ஜடாயு அவர்களும் எழுத்துதானே உண்மையாகப் பட்டது. அதுதானே உங்கள்
வாதமாக இருந்தது \\\\ ………… PAK சாரோ ஸ்ரீமான் ஜடாயுவோ முன்வைக்கும் வாதம்
………. அதை வாசித்து சிறியேன் பகிர்ந்த கருத்து………. சேக்கிழார் பெருமான்
சொன்ன கருத்து பொய் என்பது அல்ல. மாறாக சரித்ர பூர்வமான ஆதாரம் கொண்ட ஒரு
கருத்து அல்ல என்பதே. தெய்வச் சேக்கிழார் பெருமான் சொல்லியது *பொய்* என
சிறியேன் எங்கு கருத்துப் பகிர்ந்துள்ளேன்? முனைவர் ஐயா பகிர்ந்த
கருத்துக்களை……….. நமக், மிர்சி, மசாலா கலக்காது ………. நேரடியாக சிறியேன்
கீழே பகிர்ந்தமையையும் கவனிக்க.
3. முனைவர் ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்கள் பகிர்ந்த கருத்திலும்
கூட ……. அவர்கள் ****பொய்*** என்ற வார்த்தையை நேரடியாக ப்ரயோகிக்கவில்லை
என்று கருத்துப்பகிர்வது தான் நேர்மையான செயற்பாடு.
******* புராணக் கதைகளை உன்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும் இலர்
************** சில்ர் வரலாற்று உண்மைக்குச் சற்றும் பொருந்தாமல் தாம்

4. ஆனால் இப்படியெல்லாம் புராணங்கள் பற்றிக் கருத்துப் பகிர்ந்த ஸ்ரீ
முத்துகுமாரசாமி மஹாசயர் அவர்கள் கூட………….
\\\\ திருஞானசம்பந்தப் பெருமானுடன் வாது செய்து கழுவேறியவர்கள் திகம்பர
சமணர்கல் \\\
என்று இங்கு கூறுவது எதன் ஆதாரத்தில் என்பது சிறியேனுக்கு விளங்கவில்லை?
*******புராணக்கதைகளை உண்மை என்று சாதிப்பார் சைவரில் ஒருவரும்
இலர்****** என்று மஹாசயர் கூறி விட்டதால் அவர்களுடைய ஆதாரம் பெரிய
புராணமாக இருக்கவியலாது என நினைக்கிறேன்……………
அப்படியானால் முனைவர் அவர்கள் ஸ்ரீமான் பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன்
அவர்களும் ஸ்ரீமான் ஜடாயு அவர்களும் முன்வைத்த தரவுகளில் முக்யமான
ஆக்ஷேபங்களுக்கு ……என்ன ப்ரதிவாதம் வைக்க விழைகிறார் என்று அறிய ஆவலாக
இருக்கிறேன்.
சரியான வாதங்களும் சரியான தரவுகளும் மட்டிலும் வரலாற்றை படியெடுக்க
முடியும் என்பதை ஸ்ரீ முத்துகுமாரசாமி மஹாசயர் ஏற்பார்கள் என்றே
எண்ணுகிறேன்.
வரலாற்றில் இருந்து நிச்சயம் பாடம் பெற வேண்டும் தான். ஆனால் அன்பையே
அறமாகக் கொண்ட சைவர்களை கொலைவெறி கொண்டவர்களாகச் சித்தரிப்பது
புராணம்…………….. அர்த்தவாதம் என்று மட்டில் முடித்து விடுவது மட்டிலும்
சரி………..சம்பந்தமே இல்லாத ஒரு கழுவேற்ற சிற்பத்தை ஆதாரமாக வைத்து
வரலாற்றை திரிக்க முனைப்பது ஏற்கவொண்ணாதது.
வரலாற்றில் கழுவேற்றம் என்ற தண்டனை இருந்திருக்கலாம். மறுப்பதற்கில்லை.
ஆனால் சைவர்கள் தம் சமயக்கருத்துடன் உடன்படாத மாற்றுச் சமயத்தவரான
சமணர்களை கழுவிலேற்றிக்கொன்றார்கள் என்பது வரலாற்றின் படி உண்மை இல்லை
என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது ஸ்ரீமான் பக்ஷிராஜன் அனந்த
க்ருஷ்ணன் மற்றும் ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் பகிர்ந்த கருத்துக்களும்.
இல்லை சமணர்கள் சைவர்களால் கழுவேற்றப்பட்டார்கள் என……இதை வரலாற்று
பூர்வமாக மறுக்க விழைந்தால் …… மாற்றுக்கருத்தினர் முன்வைக்கும்
ஆக்ஷேபங்களை கூர்ந்து கவனித்து ……………. சரியான ப்ரதி வாதங்களை முன் வைக்க
வேண்டும்.
தூர்வாச கௌசிக விரிஞ்சி மிருகண்டு புத்ரான்
தேவேந்த்ர பாண ஹரி சக்தி ததீசி ராமான்
கண்வாத்ரி பார்கவ பிரஹஸ்பதி கௌதமாதீன்
புண்யான் இமான் பரம பாசுபதான் ஸ்மராமி.
துர்வாசர், கௌசிகர், பிரம்மா, மிருகண்டு முனிவரின் புத்திரர்கள்,
தேவேந்திரன், பாணாசுரன், ஹரி, சக்தி, கண்வர், அத்ரி, ததீசி, பிருஹஸ்பதி,
கௌதமர் ஆகிய முனிவர்கள், ராமர்கள் (பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்),
ஆகியோர் பாசுபதர்கள் என்று கூறும் ஒரு சுலோகத்தைப் படித்திருக்கிறேன்.
(நன்றி – ஸ்ரீமான் ஜடாயு — ஆஷேபத்துக்காகத் தேடப்போனாலும் கூட
ஆடல்வல்லான் அடியார் பால் சேர்க்காமல் விடுவதில்லை என்று சங்கல்பம்
வைத்திருக்கிறான் போலும்) —
தமிழில் சம்ஸ்க்ருத ச்லோகத்தை எழுதுகையில் ஒற்றெழுத்துக்களை உள்ள படி
எழுதினாலேயே சந்தத்தை உள்ளபடி க்ரஹிக்க முடியும் அதன் படி மேற்படி
அருமையான ச்லோகம் ஓரிரு பிழை திருத்தத்துடன்.
தூர்வாச கௌசிக விரிஞ்சி ம்ருகண்டு புத்ரான்
தேவேந்த்ர பாண ஹரி சக்தி ததீசி ராமான்
கண்வாத்ரி பார்கவ ப்ருஹஸ்பதி கௌதமாதீன் (बृहस्पति)
புண்யானிமான் பரம பாசுபதான் ஸ்மராமி.
ஸ்ரீமான் ***ஓர்*** அரிசோனன் அவர்கள் முன்வைத்த சாரமில்லா சுஷ்க
தர்க்கங்கள் எவை என்பதனை அடுத்த உத்தரத்தில் பார்ப்போம்.
Ramesh on December 4, 2014 at 3:17 pm
தமிழ் மொழிக்கு சைவமும் வைணவமும் ஆற்றிய தொண்டுகள் ஏராளம். பௌத்தமும்
சமணமும் வட இந்தியாவை சேர்ந்தவை. தென் இந்தியாவில் புகுந்து பல
குழப்பங்கள் விளைவித்து மக்களை துயருக்கு அழைத்து சென்றதாக வரலாறு
சொல்கிறது. ஆனாலும் அவை தற்போது ஹிந்து மதத்தோடு கலந்து விட்டது. நம்
கலாச்சாரம் என்பது சைவம், வைணவம், சாகித்யம், காணபத்யம், கௌமாரம் & சௌரம்
என்பதே. தமிழும், பிரகிருதமும் ஆதி மொழிகளாகும். சமஸ்கிருதம் இரண்டும்
கலந்து வந்த பொதுவான மொழியாகும். பிராகிருதத்தை அழித்துவிட்டார்கள்,
தமிழையும் சமஸ்கிருதத்தையும் அழிக்க முயல்கிறார்கள்.அந்நிய மதங்களான
முஸ்லிமும் கிறிஸ்துவமும் அவர்கள் கலாச்சாரத்தை நம்முள் திணிக்க முயல்வதே
உண்மை.

நினைத்தேனென்றுவைத்துக்கொள்ளுங்
‘என்னிலும்பெரியவரைக்கேள்’ என்றுசொல்லவேண்டும்?
சரியென்று, எல்லாக்கடவுளர்க்கும் பெரியகடவுளாகிய
சிவபெருமானைவேண்டிக்கேட்டேன். அவரோ, ‘வெல்லம்’ என்று
ஒற்றைச்சொல்லில்விடைதந்தார்!
இந்த ஒற்றைச்சொல்லை எப்படி தலைப்பாய்வைப்பதென்றெண்ணி, தமிழ்க்கடவுளாகிய
முருகப்பெருமானைவேண்டிநின்றேன். அவரோ, ‘ஔவையைக்கேள்!’ என்றுசொன்னார்.
அதன்படி ஔவையாரைத்தொழுது ‘ஔவையாரே பெயர்சொல்லும்!’ என்றேன். அவரோ, ‘தாழி’
என்று சிவபெருமானைப்போல ஒற்றைச்சொல்லில்விடைதந்தார்.
‘வெல்லம்’ ‘தாழி’ என்ற இரண்டுசொற்களையும்வைத்துக்கொண்

http://www.tamilhindu.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக