செவ்வாய், 10 அக்டோபர், 2017

சிலப்பதிகாரம் 12000 ராகங்கள் பண் பற்றி கூறுகிறது தமிழிசை இலக்கியம்

Kasi Krishna Raja
தமிழ் பண் ஆராய்ச்சி:
"சிலப்பதிகாரஉரையில் 11991 பண்கள்குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்துதோன்றிய – பிங்கல நிகண்டு கூறும் 103 பண்களை தேவார
திவ்வியப்பிரபந்தப் பாடல்களில்கூறப்படும் பண்களுடன்ஒப்பிட்டு
ஆய்வுசெய்வதுடன் தற்காலத்தில் இப்பண்களுக்கு இணையான இராகங்களைக்
கண்டறிந்து அறிவிக்கும் பணியினை இப்பண்ணாராய்ச்சிக் குழு தன்
தலையாயபணியாக மேற்கொண்டு வருகிறது.
இதுவரை நடைபெற்ற பண்ஆராய்ச்சிக்க
ூட்டங்களின் வாயிலாகப் பின்வரும் பண்கள் ஆய்வுசெய்யப்பட்டு அவற்றிற்கு
இணையான இராகங்கள் எவை என பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன.
வ.எண். பண்களின்பெயர்கள் = இணையான கர்நாடக சங்கீத இராகம்
1 கொல்லி - நவரோசு
2 சீகாமரம் - நாதநாமக்கிரியை
3 செவ்வழி - யதுகுலகாம்போதி
4 கெளசிகம் - பைரவி
5 பஞ்சமம் - ஆகிரி
6 செந்துருத்தி - மத்தியமாவதி
7 வியாழக்குறிஞ்சி - செளராஷ்டிரம்
8 தக்கேசி - காம்போதி
9 காந்தரபஞ்சமம் - கேதாரகெளளை
10 பழம்பஞ்சுரம் - சங்கராபரணம்
11 சாதாரி - பந்துவராளி
12 புறநீர்மை - பூபாளம்
13 மேகராகக்குறிஞ்சி - நீலாம்பரி
14 அந்தாளக்குறிஞ்சி - சாமா
15 பழந்தக்கராகம் - ஆரபி
16 தக்கராகம் - சுத்தசாவேரி
17 நட்டபாடை - கம்பீரநாட்டை
18 இந்தளம் - மாயாமாளவகெளளை
19 நட்டராகம் - பந்துவாராளி
20 பியந்தை - நவரோசு
21 காந்தாரம் - நவரோசு
22 கொல்லிக்கெளவாணம் - நவரோசு
23 குறிஞ்சி - குறிஞ்சி
24 யாழ்முரி - அடாணா
25 பாலையாழ் - அரிகாம்போதி
26 வேளாவளி - வேளாவளி
25 சீராகம் - சீராகம்
28 மலகரி - மலகரி
29 நாராயணி - நாராயணி
30 பைரவம் - பைரவம்
31 வராடி - வராளி
32 தனாசி - தன்யாசி
33 இராமக்கிரி - இராமக்ரியா
34 சாளரபாணி - ஆனந்தபைரவி
35 படுமலை - நடபைரவி
36 முல்லை - மோகனம்"
---ராம் காமேஸ்வரன்
எப்போது தமிழிசைக்கு தமிழகக் கலாச்சாரம் சார்ந்த அடையாளம் இல்லாமலாயிற்று?
நா. மம்மது: சாரங்க தேவரின் ‘சங்கீத ரத்னாகரம்’ என்ற இசையியல் நுால் அந்த
அடையாள மாற்றத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளது. இந்தியா முழுக்கச்
சுற்றி பல அரண்மனைகளில் தங்கி விரிவான கள ஆய்வு செய்து சாரங்க தேவர் அந்த
நுாலை இயற்றினார். அது 13 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த படைப்பு என்று
சொல்லப் படுகிறது. தமிழ் பண்களை வட மொழி பெயர் சூட்டியும் வட மொழி
சொற்களால் இலக்கணம் அமைத்தும் தொகுத்தவர் சாரங்க தேவர். இது வெளிப்
படையாகவே தெரியும் விஷயம்.
சில ராகங்களுக்கு சாரங்க தேவர் ‘பாஷா ராகங்கள்’ என்று பெயர்
சூட்டுகிறார். பாஷா என்று அவர் கூறவது தமிழ் மொழியையேயாகும். தட்சிணம்,
தேவார வர்த்தினி என்று ராகங்களின் பெயருடன் பின் ஒட்டுச் சேர்த்து
சொல்கிறார். தென்னிந்தியாவை (அல்லது) தென்னாட்டை சேர்ந்தது என்றும்,
தேவாரத்திலிருந்து வந்தது என்றும்தான் அந்த சொற்களுக்குப் பொருள்.
‘நட்டபாஷா’ இது கம்பீர நாட்டை. கம்பீரமான ராகம் இது. சிந்து பைரவி
சினிமாவில் ஜேசுதாஸ் பாடும் ‘ஸ்ரீ மகா கணபதிம் …. ‘இந்த ராகத்தில்
அமைந்தது தான். பாரதி ரசித்து அடிக்கடி சொல்லும் ராகம் இது. இதை நட்ட
என்றும் நட்டு பாஷா என்றும் சங்கீத ரத்னாகரத்தில் எடுத்தாண்டு சாரங்க
தேவர் சொன்னதை நட்ட பாடை என்று திரும்ப தமிழுக்கு மொழி பெயர்க்கிறார்கள்
சிலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக