செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஈ.வே.ரா மலையாளி ஆதிக்கம் எதிர்ப்பு

ஈ.வெ.ரா.,” மலையாளி”களைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார்...?
விடுதலையில் 15.11.72-இல் இவ்வாறு எழுதுகிறார் ஈ.வெ.ரா.
“அண்ணா செய்த தவறு என்னவென்றால், எம்.ஜி.ஆரைக் கட்சியில் சேர்த்ததாகும்.
எம்.ஜி.ஆர். நம்மவரும் அல்ல, நமது “இனத்தை”ச் சார்ந்தவரும் இல்லை.
05.11.72 கோவை பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேசுகிறார் ஈ.வெ.ரா,
” தமிழ் நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் ”தமிழர் அல்லாதோர்” ஆதிக்கமே
மிகுந்துவிட்டது. பாதிக்கு மேல் மலையாளிகளின் ஆதிக்கந்தான்
காணப்படுகிறது. இப்படியாக நாம் ”கவலை”ப் படுவதற்கு பல விஷயங்கள்
இருப்பதால் விரைவில் மாநாடு கூட்டி வேலைத்திட்டம் வகுக்கலாம்
என்றிருக்கிறேன்..”
1.12.72 இல் மதுரை பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.ரா:
”எல்லாத் துறைகளிலும் “மலையாளி”களின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட
வேண்டும். அதற்காக ஒரு திட்டம் வகுத்தாக வேண்டும்”
” அந்த திட்டத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிடர் கழகம் மாநாடு நடத்தும்”
Palani Deepan

Aathimoola Perumal Prakash
இதேபோல தன் இனமான தெலுங்கரை இவர் இப்படி குறிப்பிட்டு பேசியதே கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக