Aathimoola Perumal Prakash ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்
குமரி என்றால்? (கோள்களின் குறும்பு-மகாதேவன்)
வலை வனம்.
குமரிப்புதிர்:
தொல்காப்பியர் முதல் பாரதியார்
வரை தமிழகத்தின் தெற்கு எல்லையாகக்
குமரியைக் கூறிச் சென்றிருக்கின்றனர்.
இதைக் காணும் சிலர், இன்று இருக்கும்
தமிழகமே அன்று இருந்தது என
முடிவு செய்துவிடுகின்றனர்.
இது எவ்வளவு பெரிய
தவறு என்று தொடர்ந்து காண்போம்
பாரதியார் குமரி வேறு; தொல்காப்பியர்
குமரி வேறு:
பாரதியார் நீலத்தரைக் கடலோரத்தில்
குமரியைக் காண்கிறார். ஆகால்
தொர்காப்பியர் அப்படி காணவில்லை!
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்"
என்ற வரிகளுக்கு விளக்கம் தரும் எந்த
உரையாசிரியர்களும் குமரியை கடல்
என்று கூறவேயில்லை. அதற்கு மாறாகக்
குமரியை ஆறு என்றே கொள்கின்றனர்.
தெளிவான செய்தியில்லை:
இங்கு இரங்கத்தக்க செய்தி என்னவென்றால்,
பழந்தமிழ் இலக்கியத்தின் வரிகளெல்லாம்
'குமரி' என்று பொதுப்படையாகக்
கூறுகின்றனவேயன்றி ஆறு என்றோ, கடல்
என்றோ தெளிவுபடக் கூறுவதில்லை.
எடுத்துக்காட்டாக,
"வடவேங்கடம் தென்குமரி" - (தொல்.பாயிரம்)
"தென்குமரி வட பெருங்கடல்
குண குட கடலா எல்லை" -(புறம்-67)
என்பது போன்ற இடங்களில்
"குமரி ஆற்றினது பெரிய
துறையினிடத்து" என்று உரையாசிரியர்கள்
பொருள்படுத்துவதைக் காண்கிறோம். ஆனால்,
இளங்கோவடிகளாரோ, குமரியை கடல் என்று
"நெடியோன் குன்றமும்
தொடியோன் பௌவமும்"
என்ற வரிகளில் ஐயத்திற்கு இடமின்றித்
தெளிவாகக் கூறிச் செல்லுகிறார்! இதனால்
இன்று இருப்பது போன்றே இளங்கோவடிகள்
காலத்திலும் குமரிக்
கடலாவே இருந்தது என்ற
உண்மைவெளிபடுகிறது. இனி, ஆறாக
ஓடிக்கொண்டிருந்த குமரி எப்போது கடலாக
மாறிற்று என்ற கேள்வி நம் எண்ணத்தைக்
குழப்புகிறது.!
இளங்கோ கூறும் கடல்கோள்:
ஆனால் இளங்கோவடிகளே மற்றொரு இடத்தில்
தமிழகத்தின் தென்பகுதியை கடல்
கொண்டதென்ற செய்தியைக் கூறுகின்றார்.
அங்கு நாம் குமரிக்கடலையும் காணவில்லை.
குமரி ஆற்றையும் காணவில்லை. ஆனால்,
குமரி மலையைக் காண்கிறோம். இது வரையில்
குமரி என்பது கடலா, ஆறா, என்று மயங்கிய
நம் சிந்தனை, குமரி மலை என்ற செய்தியைக்
கேட்டதும் குழம்புகிறது.
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்பதே அவர் கூறும் வரிகளாகும்.
இங்கு குமரி மலை கடலால் கொள்ளப்பட்ட
செய்தி பேசப்படுகிறது. அதனுள்
'பஃறுளியாறு' என்ற ஒரு ஆறும் கடலடியில்
ஆழ்ந்த உண்மை பேசப்படுகிறது. ஆனால்
குமரி ஆறு கடலால் கொள்ளப்பட்ட
செய்தி தெரிவிக்கப்படவில்லை.
உண்மை என்ன?:
இவற்றையெல்லாம் ஒருங்கே வைத்துப்
பார்க்கும்போது நமக்கு ஒரு உண்மை புலப்படுகிறது.
இளங்கோவடிகளார் தொல்காப்பியர்
காலத்திற்குப் பின்னர் வாழ்ந்திருந்தாலும்,
அவர் காலத்தில் குமரியானது, தொடியோள்
பௌவமாக -கடலாக -காட்சி தந்தாலும், அவர்
குறிப்பிடுகின்ற கடற்கோள்
செய்தி தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர்
நிகழ்ந்த மிகப் பழைய செய்தி என்பதை நாம்
உணரவேண்டும். தெற்கிலிருந்த
பஃறுளியாறும், அதனையடுத்த
குமரி மலையும் கொள்ளப்பட்டு அழியவே,
அவற்றை ஈடு செய்வதற்காகப் பாண்டிய மன்னன்
ஒருவன் வடக்கே படையெடுத்துச்
சென்று கங்கையையும், இமயத்தையும் தன்
உடைமையாக்கிக் கொண்டான் என்ற பழைய
செய்தியையே இளங்கோவடிகளார்,
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்"
என்று கூறுகின்றார்.
எனவே இளங்கோவடிகளின்
கருத்துப்படி பார்க்கும்போது தெற்கே குமரி மலை ஒன்றும்,
பஃறுளியாறு ஒன்றும் இருந்திருக்கவேண
்டும். பஃறுளியாறு நெடியோன் எனும்
மன்னனுக்கு உரியது என்ற உண்மையை.
"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
என்ற புறநானூற்று வரிகளும்
வலியுறுத்துகின்றன.
பழங்காலத்தில் நிகழ்ந்த கடற்கோளில்
இளங்கோவடிகளால் கூறப்படும் கடற்கோளில்
பஃறுளி ஆறும், குமரி மலையும் அழிந்த
பின்னரும் குமரி ஆறு அழியாமல்
ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
இக்காலத்தில் தான் குமரியாற்றினைத்
தமிழகத்தின் தெற்கு எல்லையாகக் கூறும்
தொல்காப்பியம் தோன்றியிருக்கவேண்டும்.
தொல்காப்பியம் இடைச்சங்ககாலத்தில்
தோன்றியது என்பது வெளிப்படை. முதற்சங்கம்
குமரியாற்றுக்கும் தெற்கே இருந்த தென்
மதுரையில் இருந்ததென்றும், பின்னர்
பஃறுளியாற்றும், குமரி மலையும் கொண்ட
பகுதி அழிந்த போது தென்மதுரை யும்
கடலுக்கடியில் ஆழ்ந்தது எனவும்
முடிவு செய்யலாம்.
இதன் பின்னரே, குமரியாற்றைத்
தெற்கெல்லையாகக் கொண்ட தமிழகத்தில்
கபாடபுரம் என்ற இடத்தில் இடைச்சங்கம்
ஏற்பட்டுத் தொல்காப்பியமும் எழுந்தது.
இடைச்சங்கத்தின் இறுதியிலும் கடல் பொங்கி,
எழுந்து குமரியாற்றையும்
கபாடபுரத்தையும் அழித்தது. இந்த
கடல்கோலை இளங்கோவடிகள் சுட்டவில்லை.
ஏனெனில் பாண்டியனுக்கு இழப்பைத் தந்த
முதற் கடற்கோளைப் போல்
அவ்வளவு பெரியது அன்று இது என்பதும்
ஒரு எண்ணமாக இருக்கலாம்.
ஒரு வேலை 'மலி திரையூர்ந்து தன் மண் கடல்
வௌவலின்" என்று முல்லைக் கலியில்
காணப்படும் வரி, இந்த
இரண்டாவது கடற்கோலினைக் குறிக்கலாம். மண்
என்பது ஆகு பெயராக நாட்டைக்குறிக்க
ுமன்றோ? குமரியாறு பாயும் வளநாட்டைக்
கடல் கொண்டதனையே இவ்வரிகள் குறிக்கின்றன
என்பதில் இழுக்கொன்றுமில்லை. இந்த
இழப்பு சிறியதாக
இருந்ததாலேயே ,ஈடு செய்ய
வடநாடுவரை செல்லாமல் சேர
சோழர்களை வென்று "புலியோடு வில் நீங்கி"
அரசாண்டான் என்று முல்லைக்
கலி பாண்டியனை வாழ்த்துகிறது.
இரண்டாவது நிகழ்ந்த
கடல்கோலோடு இடைச்சங்கம் முடிந்தது.
பின்னர் இன்றுள்ள மதுரையில்
மூன்றாவது சங்கம் தொடங்கியது.
இளங்கோவடிகளார் மூன்றாம் சங்கமாகிய
கடைச்சங்கத்தின்
இறுதிகாலத்தினை அடுத்து வாழ்ந்தவர்
என்பதும், முன்னரே குமரிஆறும்
கபாடபுரமும் கடலால்
கொள்ளப்பட்டு அழிந்தன என்றும், அதன் பின்னர்
இளங்கோவடிகள் காலந்தொட்டு இன்று வரையில்
கடலே தமிழகத்தின் தெற்கு எல்லையாக
இருந்து வருகிறது என்பதும்
தெளிவாகிறது.
தமிழ் உள்ளம்:
குமரி மலை,
குமரி ஆறு முதலியவற்றை அழித்த
கடலுக்கே தமிழர்கள் 'குமரி'
என்று பெயரிட்டு அழைத்தனர்.
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
என்பது தமிழரின் கொள்கையன்றோ?
இன்று குமரிக் கடல் வருந்துகிறது. தான்
விழுங்கிய பொருளை எண்ணி, எண்ணிக் கண்ணீர்த்
துளிகளை அள்ளி வீசுகின்றது!
நீலத்திரை கடலாக நின்று நித்தம் தவம்
செய்கிறது. ஏன்? மீண்டும் குமரி மலையும்,
குமரி ஆறும் வெயிவந்து விரிந்த
தமிழகமாக மலராமன்றோ?
-கொண்டல் மகாதேவன்:கோள்களின் குறும்பு-21,
(110-113)
15 அக்டோபர் 2013, 08:17 PM ·
குமரி என்றால்? (கோள்களின் குறும்பு-மகாதேவன்)
வலை வனம்.
குமரிப்புதிர்:
தொல்காப்பியர் முதல் பாரதியார்
வரை தமிழகத்தின் தெற்கு எல்லையாகக்
குமரியைக் கூறிச் சென்றிருக்கின்றனர்.
இதைக் காணும் சிலர், இன்று இருக்கும்
தமிழகமே அன்று இருந்தது என
முடிவு செய்துவிடுகின்றனர்.
இது எவ்வளவு பெரிய
தவறு என்று தொடர்ந்து காண்போம்
பாரதியார் குமரி வேறு; தொல்காப்பியர்
குமரி வேறு:
பாரதியார் நீலத்தரைக் கடலோரத்தில்
குமரியைக் காண்கிறார். ஆகால்
தொர்காப்பியர் அப்படி காணவில்லை!
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்"
என்ற வரிகளுக்கு விளக்கம் தரும் எந்த
உரையாசிரியர்களும் குமரியை கடல்
என்று கூறவேயில்லை. அதற்கு மாறாகக்
குமரியை ஆறு என்றே கொள்கின்றனர்.
தெளிவான செய்தியில்லை:
இங்கு இரங்கத்தக்க செய்தி என்னவென்றால்,
பழந்தமிழ் இலக்கியத்தின் வரிகளெல்லாம்
'குமரி' என்று பொதுப்படையாகக்
கூறுகின்றனவேயன்றி ஆறு என்றோ, கடல்
என்றோ தெளிவுபடக் கூறுவதில்லை.
எடுத்துக்காட்டாக,
"வடவேங்கடம் தென்குமரி" - (தொல்.பாயிரம்)
"தென்குமரி வட பெருங்கடல்
குண குட கடலா எல்லை" -(புறம்-67)
என்பது போன்ற இடங்களில்
"குமரி ஆற்றினது பெரிய
துறையினிடத்து" என்று உரையாசிரியர்கள்
பொருள்படுத்துவதைக் காண்கிறோம். ஆனால்,
இளங்கோவடிகளாரோ, குமரியை கடல் என்று
"நெடியோன் குன்றமும்
தொடியோன் பௌவமும்"
என்ற வரிகளில் ஐயத்திற்கு இடமின்றித்
தெளிவாகக் கூறிச் செல்லுகிறார்! இதனால்
இன்று இருப்பது போன்றே இளங்கோவடிகள்
காலத்திலும் குமரிக்
கடலாவே இருந்தது என்ற
உண்மைவெளிபடுகிறது. இனி, ஆறாக
ஓடிக்கொண்டிருந்த குமரி எப்போது கடலாக
மாறிற்று என்ற கேள்வி நம் எண்ணத்தைக்
குழப்புகிறது.!
இளங்கோ கூறும் கடல்கோள்:
ஆனால் இளங்கோவடிகளே மற்றொரு இடத்தில்
தமிழகத்தின் தென்பகுதியை கடல்
கொண்டதென்ற செய்தியைக் கூறுகின்றார்.
அங்கு நாம் குமரிக்கடலையும் காணவில்லை.
குமரி ஆற்றையும் காணவில்லை. ஆனால்,
குமரி மலையைக் காண்கிறோம். இது வரையில்
குமரி என்பது கடலா, ஆறா, என்று மயங்கிய
நம் சிந்தனை, குமரி மலை என்ற செய்தியைக்
கேட்டதும் குழம்புகிறது.
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்பதே அவர் கூறும் வரிகளாகும்.
இங்கு குமரி மலை கடலால் கொள்ளப்பட்ட
செய்தி பேசப்படுகிறது. அதனுள்
'பஃறுளியாறு' என்ற ஒரு ஆறும் கடலடியில்
ஆழ்ந்த உண்மை பேசப்படுகிறது. ஆனால்
குமரி ஆறு கடலால் கொள்ளப்பட்ட
செய்தி தெரிவிக்கப்படவில்லை.
உண்மை என்ன?:
இவற்றையெல்லாம் ஒருங்கே வைத்துப்
பார்க்கும்போது நமக்கு ஒரு உண்மை புலப்படுகிறது.
இளங்கோவடிகளார் தொல்காப்பியர்
காலத்திற்குப் பின்னர் வாழ்ந்திருந்தாலும்,
அவர் காலத்தில் குமரியானது, தொடியோள்
பௌவமாக -கடலாக -காட்சி தந்தாலும், அவர்
குறிப்பிடுகின்ற கடற்கோள்
செய்தி தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர்
நிகழ்ந்த மிகப் பழைய செய்தி என்பதை நாம்
உணரவேண்டும். தெற்கிலிருந்த
பஃறுளியாறும், அதனையடுத்த
குமரி மலையும் கொள்ளப்பட்டு அழியவே,
அவற்றை ஈடு செய்வதற்காகப் பாண்டிய மன்னன்
ஒருவன் வடக்கே படையெடுத்துச்
சென்று கங்கையையும், இமயத்தையும் தன்
உடைமையாக்கிக் கொண்டான் என்ற பழைய
செய்தியையே இளங்கோவடிகளார்,
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்"
என்று கூறுகின்றார்.
எனவே இளங்கோவடிகளின்
கருத்துப்படி பார்க்கும்போது தெற்கே குமரி மலை ஒன்றும்,
பஃறுளியாறு ஒன்றும் இருந்திருக்கவேண
்டும். பஃறுளியாறு நெடியோன் எனும்
மன்னனுக்கு உரியது என்ற உண்மையை.
"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
என்ற புறநானூற்று வரிகளும்
வலியுறுத்துகின்றன.
பழங்காலத்தில் நிகழ்ந்த கடற்கோளில்
இளங்கோவடிகளால் கூறப்படும் கடற்கோளில்
பஃறுளி ஆறும், குமரி மலையும் அழிந்த
பின்னரும் குமரி ஆறு அழியாமல்
ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.
இக்காலத்தில் தான் குமரியாற்றினைத்
தமிழகத்தின் தெற்கு எல்லையாகக் கூறும்
தொல்காப்பியம் தோன்றியிருக்கவேண்டும்.
தொல்காப்பியம் இடைச்சங்ககாலத்தில்
தோன்றியது என்பது வெளிப்படை. முதற்சங்கம்
குமரியாற்றுக்கும் தெற்கே இருந்த தென்
மதுரையில் இருந்ததென்றும், பின்னர்
பஃறுளியாற்றும், குமரி மலையும் கொண்ட
பகுதி அழிந்த போது தென்மதுரை யும்
கடலுக்கடியில் ஆழ்ந்தது எனவும்
முடிவு செய்யலாம்.
இதன் பின்னரே, குமரியாற்றைத்
தெற்கெல்லையாகக் கொண்ட தமிழகத்தில்
கபாடபுரம் என்ற இடத்தில் இடைச்சங்கம்
ஏற்பட்டுத் தொல்காப்பியமும் எழுந்தது.
இடைச்சங்கத்தின் இறுதியிலும் கடல் பொங்கி,
எழுந்து குமரியாற்றையும்
கபாடபுரத்தையும் அழித்தது. இந்த
கடல்கோலை இளங்கோவடிகள் சுட்டவில்லை.
ஏனெனில் பாண்டியனுக்கு இழப்பைத் தந்த
முதற் கடற்கோளைப் போல்
அவ்வளவு பெரியது அன்று இது என்பதும்
ஒரு எண்ணமாக இருக்கலாம்.
ஒரு வேலை 'மலி திரையூர்ந்து தன் மண் கடல்
வௌவலின்" என்று முல்லைக் கலியில்
காணப்படும் வரி, இந்த
இரண்டாவது கடற்கோலினைக் குறிக்கலாம். மண்
என்பது ஆகு பெயராக நாட்டைக்குறிக்க
ுமன்றோ? குமரியாறு பாயும் வளநாட்டைக்
கடல் கொண்டதனையே இவ்வரிகள் குறிக்கின்றன
என்பதில் இழுக்கொன்றுமில்லை. இந்த
இழப்பு சிறியதாக
இருந்ததாலேயே ,ஈடு செய்ய
வடநாடுவரை செல்லாமல் சேர
சோழர்களை வென்று "புலியோடு வில் நீங்கி"
அரசாண்டான் என்று முல்லைக்
கலி பாண்டியனை வாழ்த்துகிறது.
இரண்டாவது நிகழ்ந்த
கடல்கோலோடு இடைச்சங்கம் முடிந்தது.
பின்னர் இன்றுள்ள மதுரையில்
மூன்றாவது சங்கம் தொடங்கியது.
இளங்கோவடிகளார் மூன்றாம் சங்கமாகிய
கடைச்சங்கத்தின்
இறுதிகாலத்தினை அடுத்து வாழ்ந்தவர்
என்பதும், முன்னரே குமரிஆறும்
கபாடபுரமும் கடலால்
கொள்ளப்பட்டு அழிந்தன என்றும், அதன் பின்னர்
இளங்கோவடிகள் காலந்தொட்டு இன்று வரையில்
கடலே தமிழகத்தின் தெற்கு எல்லையாக
இருந்து வருகிறது என்பதும்
தெளிவாகிறது.
தமிழ் உள்ளம்:
குமரி மலை,
குமரி ஆறு முதலியவற்றை அழித்த
கடலுக்கே தமிழர்கள் 'குமரி'
என்று பெயரிட்டு அழைத்தனர்.
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
என்பது தமிழரின் கொள்கையன்றோ?
இன்று குமரிக் கடல் வருந்துகிறது. தான்
விழுங்கிய பொருளை எண்ணி, எண்ணிக் கண்ணீர்த்
துளிகளை அள்ளி வீசுகின்றது!
நீலத்திரை கடலாக நின்று நித்தம் தவம்
செய்கிறது. ஏன்? மீண்டும் குமரி மலையும்,
குமரி ஆறும் வெயிவந்து விரிந்த
தமிழகமாக மலராமன்றோ?
-கொண்டல் மகாதேவன்:கோள்களின் குறும்பு-21,
(110-113)
15 அக்டோபர் 2013, 08:17 PM ·
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக