செவ்வாய், 10 அக்டோபர், 2017

மாறன் சகோதரர்கள் கார்ப்பரேட் முதலைகள் தனி விமானம் முறைகேடு வரி சம்பளம் அம்பானி விட அதிகம் சன்

அபு ராஹினா
அம்பானி அதானியை மட்டும் அல்ல
சன் நெட்வோர்க் மாறன் சகோதர்ர்கள் என்ற கார்ப்பரேட் முதலைகள் பற்றியும்
தெரிந்து கொள்வோம்......
இன்று # SES அதாவது
Stakeholders Empowerment Services என்னும்
பங்குதாரர்
உரிமைநல அமைப்பு, சன் குழுமம் திரு. கலாநிதி மாறனிடம் கீழ்க்கண்ட
கேள்விகளைக் கேட்டுள்ளது.
1. சன் குழுமத்திற்கென என்று சொல்லி வாங்கப்பட்ட விமானத்தில் கலாநிதி
மாறன் மட்டும் பயணம் செய்வதேன்?.
ஏனைய பங்குதாரர்கள், அதிகாரிகள் ஏன் பயன்படுத்துவதில்லை.
2. கடந்த மழையின்போது பாதிக்கப்பட்ட இந்த விமானத்திற்காக ₹260 கோடி
இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகையாக பெறப்பட்டுள்ளது
...
3. பின் ₹ 365 கோடியில் மற்றொரு விமானம் வாங்கப்பட்டது. தனிப்பட்ட
ஒருவரான கலாநிதி மாறன் உபயோகத்திற்காக இவ்வளவு பெருந்தொகை
செலவழிக்கப்படுவது தேவையா?
4. சன் குழுமத்தின் 2015-16 ஆம் ஆண்டின் மொத்த வருமானம் ₹ 2019 கோடி.
நிகர லாபம் ₹ 979 கோடி.
5. சன் குழுமம் வழங்கும் மொத்த சம்பளத் தொகையில் கலாநிதி மாறனின் சம்பளம்
மட்டுமே 60%.
6. கலாநிதிமாறன், காவிரி கலாநிதி மாறன் இருவரின் ஆண்டு சம்பளம் ₹ 78 கோடி.
கவனிக்கவும் அம்பானி சம்பளத்தை விட மாறன் அவர் மனைவி சம்பளம் அதிகம்.,
( இந்தியாவின் பெரும் பணக்காராக உள்ள முகேஷ் அம்பானி கடந்த 9 ஆண்டுகளாக
ரூ 15 கோடி ஆண்டு வருமானத்துடனே உள்ளார்..இதில் 4.16 கோடி சம்பளம்..மற்ற
படிகள் 60 லட்ச ரூபாய்,ஒய்வூதிய பலன்கள் 71 லட்சம்,லாபத்திற்க்கான கமிஷன்
9.53 கோடி ரூபாய் அடக்கம்...)
இவ்வளவு வருவாய் ஈட்டும் சன் குழுமம் தன் வருவாயில், சட்டப்படி சமூக நல
நற்காரியங்களுக்காக செலவழிக்க வேண்டிய தொகை சுமார் ₹ 25 கோடியை செலவழிக்க
மனமில்லாமல் சுமார் ₹ 15 கோடி அளவுக்கே செலவிட்டது ஏன்?*
- Chandran Raja
சன் குழுமத்திற்க்கும் கருணாநிதி குடும்பத்திற்க்கும் சம்பந்தம் இல்லை
என்பது அதானிக்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லை என்பதை போன்றது தான்.
திமுகவின் அதிகார மீறலால் வளர்தெடுக்கப்பட்ட ஒரு நிறுவனத்திடம்
சட்டத்திற்க்கு உட்பட்ட நடைமுறைகளை எதிர்பார்பது என்பது முரண்.

பணக்காரர் திமுக முரசொலி தயாநிதி sun

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக