செவ்வாய், 10 அக்டோபர், 2017

வைகோ ஐநா வில் செய்த கூத்து பித்தலாட்டம் மதிமுக



இனவிடுதலை கோரிக்கை அரங்கும் , 23 ஆம் புலிகேசி வைகோவும்...!

செத்த பாம்பை அடிக்க தேவையில்லை என எல்லோரும் சொல்வதுண்டு, ஆனால் பாம்பு
செத்தாலும் பல்லில் விசமிருக்கும் என்ற பழமொழியும் உண்டு. நம்ம வைகோவின்
ஜெனிவா பயணமும் அவரின் கோமாளிக்கூத்தும் அரசியல் செல்வாக்கில் இறந்த
பிறகும் திராவிட பாம்புகளுக்கு தமித்தேசியத்தின் மீதான பகை குறையாது
தெளிவுபடுத்தி உள்ளார்.

சரி விடயத்திற்கு வருவோம். வைகோ யார் ? அவர் ஈழத்திற்காக கொடுக்கும்
குரல் அசலானதா ? இந்தியாவை எதிரிக்கும் குரல் அசலானதா ? என்ற விவாத
உணர்வை உங்களிடமே விட்டுவிடுகிறேன். விசா வழங்கப்பட்டு கனடா சென்ற
சீமான், விமான நிலையத்திலேயே மறிக்கப்பட்டு திருப்பி அனுப்ப படுகிறார்.
ஒருமுறை ஜெனிவாவில் கலந்துகொண்ட பிறகு அடுத்தமுறை சீமான் அவர்களின்
கடவுசீட்டு இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்ட இன்றுவரை
விடுவிக்கப்படவில்லை. நாம்தமிழர் கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட
தளபதிகளுக்கு கூட தொடர்ந்து விசா மறுக்கப்பட்டு போராடி வாங்குகின்ற
சூழலில் வைகோவிற்கு மட்டும் எந்தவித மறுப்பும் இல்லாமல் விசா கிடைப்பதில்
இருந்து வைகோ யாருக்கானவர் என்பதை நீங்களே உறுதி செய்துகொள்ளுங்கள்.

சரி ஐநா விடயத்திற்கு வருவோம். முதலில் இதுபோன்ற கூட்ட தொடர் ஜெனிவாவில்
,நடக்கும் போது, கட்சி தலைவர்கள், பெரிய ஆளுமைகள் என்றெல்லாம் அங்கெ
பாகுபாடு கிடையாது. இங்கிருந்து எவர் சென்றாலும் "தன்னார்வ தொண்டு
நிறுவனத்தின்" பிரதிநிதியாக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அந்த
வகையில் ஐயா வைகோ உள்ளே சென்றது மதிமுக பொதுச்செயலாளராக அல்ல, ஒரு
மனிதஉரிமை பேசுகின்ற தன்னார்வ தொண்டுநிறுவனத்தின் பிரதிநிதியாகவே. அங்கே
கலந்துகொள்ளும் எவராக இருந்தாலும் தன்னார்வ தொண்டுநிறுவனத்தின் மூலமாக
மட்டுமே உள்ளே செல்லமுடியும்.

ஐநா மன்றத்தை பொறுத்தவரை "முக்கிய அரங்கு" விவாதம், "கிளையரங்கு விவாதம்"
என்ற இரண்டு விவாதங்கள் நடக்கும். மெயின் ஹால் விவாதத்தில் பெரிய கேள்வி
விவாதங்களை எதிர்தரப்பு எழுப்ப முடியாது. ஆனால் கிளையரங்கு விவாதத்தில்
எவர் வேண்டுமானாலும் கேள்விகேட்கலாம். இதுதான் ஐநாவின் நடைமுறை.

வைகோ அவர்கள் கிளையரங்கில் விவாதித்து கொண்டிருந்த போது எதிர்தரப்பு
கேட்ட கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் நிதானமிழந்து நடந்துகொண்டுள்ளார்.
இதுதான் அங்கு நடந்திருக்கிறது. உடனே "சிங்களர்கள் என்னை தாக்க
வந்துவிட்டார்கள்" என்ற அளப்பறைகளை கூட்டி, தமிழக அரசியல் ஊடகங்களை
திசைதிருப்ப நினைத்தார். உண்மையில் அங்கு எதிர்தரப்பில் கேள்வி
கெட்டவர்களும் ஈழத்தமிழர்களே என்பது வேறு.

இந்த கூத்திற்க்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, ஐநாவில் வாயிலில் நிற்கின்ற
ஐநா சபை காவலர்களின் அருகே நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு "ஐநா
எனக்கு காவல்துறை பாதுகாப்பு; கொடுத்துள்ளது" என்று சொன்னது மிகசிறந்த
கோமாளித்தனம். ஜெனிவாவில் தனிநபருக்கு, அதுவும்  தனது நாட்டை சாராத
நபருக்கு தனி பாதுகாப்பு கொடுப்பது என்பது இருநாட்டு வெளியுறவு துறைகளும்
கலந்து பேசி முடிவெடுக்கவேண்டிய விடயம். அப்படி இருக்க வைகோ சொன்னது
மிகப்பெரிய பொய். மேலும் விவாதத்தின் போது ஒருவர் மீது இன்னொருவர்
கன்னியக்குறைவாக நடந்துகொண்டால், அப்படி நடந்துகொண்டவர் எந்த
தொண்டுநிறுவனத்தின் வழியாக வந்தாரோ அந்த தொண்டுநிறுவனத்தின் மீது சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே ஐநாவின் விதி. அதனால் இதுபோன்ற
நிகழ்விற்கு வாய்ப்பே இல்லை.

வைகோ கலந்துகொண்ட முதல்நாளே, இறந்துபோன அண்ணன் தமிழ்ச்செல்வன் அவர்களின்
மனைவி தனது சாட்சியங்களை பதிவுசெய்த போது, "எனக்கு சுயமரியாதை
இருக்கின்றது" என இருக்கையை காலிசெய்துவிட்டு எழுந்து வந்தது,

மற்றவர்கள் பங்குபெறுகின்ற கிளயரங்கு விவாதத்தில் அமராமல் திட்டமிட்டு
புறக்கணித்ததோடு இல்லாமல், அந்த அரங்கில் தமிழ்நாட்டில் இருந்து வந்த
எவருக்கும் இருக்கை போடக்கூடாது, எனக்குமட்டுமே இருக்கை இருக்கவேண்டும்
என்று ஐநா ஊழியர்களிடம் அடம்பிடித்து அசிங்கப்பட்டது,

மெயின்ஹால் விவாதங்களில் வந்து அமர்ந்து, மற்றவர்கள் பேசுகின்றபோது
அவமதிக்கும் படி உடல் அசைவுகளை வெளிப்படுத்தியது,

தமிழீழ விடுதலை வாதத்தோடு, அனிதா மரணம், ஜல்லிக்கட்டு கலவரத்தில் நடந்த
மனிதஉரிமை மீறல்கள், குர்திஸ்தான் விடுதலை, மியான்மர் கலவரம்,
இந்தியாவில் மொழிவழி தேசிய இனங்கள்மீது நடக்கும் மனிதஉரிமை மீறல் இவைகளை
தெளிவாக நாம்தமிழர் கட்சி பிள்ளைகள் ஐநாமன்றத்தில் எடுத்துவைத்த போது
இந்தியா-தமிழ் நாட்டின் அரசியலை நான் இங்கு பேசவிருமபிவில்லை என்று
தொடர்பற்ற முறையில் வாதத்தில் கூறியமை என எல்லாமே...

வைகோ ஒரு நச்சுப்பாம்பு என்பதை நமக்கு நியாபகப்படுத்தி சென்றுள்ளது.
ஆனால் செய்தி ஊடகங்கள் ஐநாவின் விதிமுறைகளை அறிந்தபோதும், வைகோ சொல்வது
காமிடி என்று தெரிந்தபோதும் ஐநாவில் வைகோவின் செய்திகளை மட்டுமே
திட்டமிட்டு வெளிப்படுத்தியது கொடுமையிலும் கொடுமை.

ஈழத்தமிழர்களிடம் இருந்து காசுவாங்குவது ஈனச்செயல் என்று சொல்கின்ற வைகோ,
தனது ஜெனீவா பயணத்திற்கான பயணச்சீட்டு, 10 நாட்கள் அங்கு தங்கி இருந்த
விடுதி செலவு இவைகளை யார் கவனித்துக்கொண்டார்கள் என்பதை வெளியிடுவாரா ?

இதெயெல்லாம் தாண்டி, தற்காலிக பந்தல் பிரித்துக்கொண்டு இருந்தபோது அதில்
ஒரு பைப்பை உருவி, பைப்பை சுழற்றி, அதை ஒரு ஈழத்தமிழரை வைத்தே
படம்பிடிக்க வித்து, இனவிடுதலை விவாத ஐநா அரங்கினை 23 ஆம் புலிகேசியின்
காமிடி தர்பாராக மாற்றி காட்டியுள்ளார்.  சுற்றிய விடயத்தில் வைகோவை
மன்னிக்கலாம், அதை பதிவு செய்த ஈழத்தமிழர் ஒருவர் முடியும் போது "இப்போ
சிங்களவர் வந்தால் தலைவர் கம்பினால் விரட்டிவிடுவார்" என்று சொல்லி அந்த
வீடியோவை முடிப்பார். அந்த கோமாளியைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன் (
https://www.youtube.com/watch?v=YxKdlG6LQzs) .

ஆகவே வைகோ எனும் நச்சு பாம்பு அரசியலில் இறந்துபோயிருந்தாலும் அதன்
பற்களில் விசமிருக்கத்தான் செய்கிறது. இதையெல்லாம்
தெரிந்திருந்திருக்கும் ஊடகங்களும் இதை  நோக்கி கேள்வி எழுப்பாமல்
இருப்பது கேலிக்கூத்து.

சமூகநீதி மாநாடு நடத்த வைகோ திட்டமிட்டு இருப்பதாக கேள்வி படுகிறேன்.
கலிங்கப்பட்டியில் இருந்து சரியாக 7 கிலோமீட்டர்  இருக்கும்
குறிஞ்சான்குளத்தில் சமூகநீதியை நிலைநாட்டிவிட்டு சமூகநீதியை மாநாட்டை
போடச்சொல்லுங்கள் .

--- செந்தில்நாதன் ///

https://m.facebook.com/story.php?story_fbid=448605258873688&id=100011726542858

ஈழம் ஐ.நா சர்வதேசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக