செவ்வாய், 10 அக்டோபர், 2017

பிரிவினைபற்றிபொதுவுடைமை

பிரிவினை பற்றி பொதுவுடைமை என்ன கூறுகிறது?!
வெற்றிக் கனல்
தேசிய இனப்பிரச்சினையி ல் மார்க்சிய
அறிஞர்கள் என்னென்ன
நிலைபாடுகளை கொண்டிருந்தார்க ள்
என கீழ்கண்ட நாடுகளின்
எடுத்துக்காட்டி லிருந்து அறிவோம்.
1. அயர்லாந்து
2. நார்வே – சுவீடன்
3. போலந்து
4. இந்தோ - சைனா
5. செக் மக்கள், தென் ஸ்லாவியர்கள்
1. அயர்லாந்து
நிலப்பிரபுத்துவ த்திற்கு எதிரான
போராட்டத்தில் பிரான்சு, பிரிட்டன்,
இத்தாலி, செர்மனி போன்ற தேசங்கள்
மேற்கு அய்ரோப்பாவில் தோன்றின.
இவை தேசிய இன ஒருமை கொண்ட
அரசுகளாக அமைந்தன. ஆனால்
அயர்லாந்து இங்கிலாந்துடன்
(பிரிட்டனுடன்) இணைந்து பல்தேசிய
இன நாடாக தோன்றின. அதில்
இங்கிலாந்து அயர்லாந்தை
அடிமைப்படுத்தி வைத்திருந்தன.
இங்கிலாந்தில் ஜனநாயக
புரட்சி முடிவுற்று முதலாளித்துவ
நாடாக இருந்தது.
அயர்லாந்து நிலப்பிரபுத்துவ நாடாக
இருந்தது. இந்நிலையில்
அயர்லாந்து தனது அடிமைத்தனத்திற்
கு எதிரான போராட்டத்தை தொடுத்தது.
அப்போது மார்க்ஸ் கருதினார்,
இங்கிலாந்து முதலாளித்துவ நாடு.
அதில் தொழிலாளி வர்க்கம்
தோன்றியிருக்கிற து.
இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம்
புரட்சி நடத்தும்.
அப்படி தொழிலாளி வர்க்கம்
புரட்சி நடத்தினால் அதன் மூலம்
அயர்லாந்துக்கு விடுதலை கிடைக்கும்
என நம்பினார். காலங்கள் கடந்தன.
எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.
தனது ஆய்வை மறுஆய்வு செய்தார்.
இங்கில ாந்து முதலாளி வர்க்கம்
அயர்லாந்தை அடிமைப்படுத்தி சுரண்டி
இங்கிலாந்து ;தொழிலாளி வர்க்கத்தை
பிரபுத்துவ ;தொழிலாளி வர்க்கமாக
மாற்றியுள்ளதையு ம் அது ஊட்டம்
பெற்று போராட்ட குணம் இன்றியும்
இருப்பதையும் பார்த்தார்.
எனவே இங்கிலாந்தில்
தொழிலாளி வர்க்கம் புரட்சி நடத்த
வேண்டுமானால் அயர்லாந்தை முதலில்
விட்டுத் தொலைய வேண்டும் என
முடிவுக்கு வந்தார். எனவே மார்க்ஸ்
முதலாளிகளின் தலைமையிலான
அயர்லாந்து விடுதலைப்
போராட்டத்தை ஆதரித்தார்.இங்க ுள்ள
தனிச்சிறப்பான நிலைமை என்ன?
ஒரு ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள
தொழிலாளி வர்க்கம் போராட்ட
குணமின்றி ஊட்டம் பெற்று இருந்தால்
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின்
பிரிவினைக்
கோரிக்கையை ஆதரித்து அதன்
விடுதலைக்காக போராட வேண்டும்
என்பதையே அயர்லாந்து உதாரணம்
காட்டுகிறது.
2. நார்வே – சுவீடன்.
நெப்போலியன் போர்களின்
போது நார்வேயினரின் விருப்பத்திற்கு
எதிராக மன்னர்களால்
நார்வே ஸ்வீடனனுக்கு அளிக்கப்பட்டது.
நார்வே – சுவீடன் இரண்டும்
இணைந்து பல்தேசிய இன நாடுகளாக
இருந்தன. ஸ்வீடன் ஒடுக்கும் தேசிய
இனமாக இருந்தது. ஆகையினால்
நார்வே பிரி;ந்துபோக போராடியது.
அப்போது லெனின் சுவீடன்
தொழிலாளி வர்க்க கடமை என்ன?
நார்வே தொழிலாளி வர்க்க
கடமை என்ன? என வேறுபடுத்தினார் .
சுவீடன் நிலப்புத்துவ வர்க்கம்
நார்வேமீது போர்த்தொடுக்கவு ம்
எண்ணியிருந்தது. இந்நிலையில்
சுவீடன் தொழிலாளி வர்க்கம்
நார்வே பிரிந்து போவதற்கு ஆதரவு
அளிக்கவேண்டும். சுவீடன் ஆளும்
வர்க்கத்திற்கு எதிராக
போராடவேண்டும் என லெனின்
கூறினார்.நார்வே பிரிந்து போய்
ஒரு முடி அரசு அமைக்க
பெரும்பான்மையின ர்
எண்ணியிருந்தனர் . இந்நிலையில்
பெரும்பான்மையின ர் விருப்பத்திற்கு
இணங்கி முடி அரசை ஆதரிப்பது
அல்லது நார்வே தொழிலாளி வர்க்கம்
குடியரசுக்காக போராடுவதுடன்
நிலைமை பக்குவமாக இருந்தால்
நார்வே விடுதலைப் புரட்சிக்குத்
தலைமை தாங்க வேண்டும் என்றார்.
இங்குள்ள தனிச்சிறப்பான
நிலைமை என்ன? ஸ்வீடன்
தொழிலாளி வர்க்கம்
நார்வே தொழிலாளி வர்க்கத்தின்
கடமைகள் வௌ;வேறாக இருந்தன.
சுவீடன் தொழிலாளி வர்க்கமும்,
நார்வே தொழிலாளி வர்க்கமும்
இணைந்து புரட்சி நடத்துங்கள் என
வறட்டுத்தனமாக லெனின்
வாதிடவில்லை.
நார்வே பிரிந்து போவதை சுவீடன்
தொழிலாளி வர்க்கம் ஆதரித்ததால்
வர்க்கப் போராட்ட நிலைமைகள்
பாதுகாக்கப் பட்;டதாக லெனின்
பார்த்தார். தேசிய இனப்
பிரச்சினை ஸ்வீடன், நார்வே வழியில்
தீர்க்கப்பட வேண்டும் என்று லெனின்
வலியுறுத்தினார் .
3. போலந்து
போலந்து ருஸ்ய மன்னன் ஆட்சியின் கீழ்
அடிமைப்பட்டிருந ்த ஒரு தேசம்.
ருசியா என்பது பல்தேசிய இன
நாடு என்பது எல்லோருக்கும் தெரியும்.
ருஷ்ய புரட்சி பல தேசிய இனங்கள்
சேர்ந்து ஜார்
ஆட்சியை வீழ்த்தி புரட்சி நடத்தி தேசிய
இனங்களின் சுய நிர்ணய உரிமையுடன்
சேர்ந்து வாழ்ந்த நாடு. ஜார் ஆட்சியில்
ஒடுக்கும் தேசிய இனம் ருஷ்ய தேசிய
இனமாகவும் ; ஒடுக்கப்படும் தேசிய
இனம் பலவாகவும் இருந்தன.
போலந்து ருஷ்யாவிலிருந்த
ு பிரிந்து போவதற்கு விடுதலைக்கேட்டு
ப் போராடியது. அப்போது மார்;க்ஸ்
அதனை ஆதரித்தார்.மார் ;க்ஸ்க்குப்பின்
லெனின் காலத்திலும்
போலந்து போராடிக்கொண்டிர ுந்தது.
லெனி;ன் போலந்தின் சுய நிர்ணய
உரிமையை ஆதரித்தார்,
பிரிவினையை எதிர்த்தார்.
அதைப்பற்றி பேசும் போது ஸ்டாலின்
கூறுவார், மார்க்ஸ்
போலந்து பிரிவினையை ஆதரித்ததற்கும்
லெனின்
போலந்து பிரிவினையை எதிர்த்ததற்கும்
உள்ளடக்கம் ஒன்றுதான் என்றார். என்ன
உள்ளடக்கம்?
மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் ஒடுக்கும்
தேசிய இனமான ருஸ்ய
தொழிலாளி வர்க்கம் போராட்ட
குணமின்றி இருந்தது. போலந்து ஜார்
மன்னனின்; பிற்போக்கிற்கு எதிராக
போராடியது. அந்நிலையில் மார்க்ஸ்
போலந்து பிரிவினையை ஆதரித்தார்.
லெனின் வாழ்ந்தபோது ஒடுக்கும் தேசிய
இனமான ருஷ்யத் தேசிய இனத்தில்
தொழிலாளி வர்க்கம் லெனின்
தலைமையில் தேசிய இனங்களின் சுய
நிர்ணய அங்கீகரித்து ஜார்
மன்னருக்கு எதிராக போராடியது.
இந்நிலையில் நாங்கள் போலந்து சுய
நிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம ்,
எங்களுடன் சேர்ந்து போராடுங்கள்
என்றார் லெனின். இதைப்பற்றி ஸ்டாலின்
கூறும் போது மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில்
போலந்தின் தலைநகரமான வார்ச
புரட்சிகரமானதாக இருந்தது. லெனின்
வாழ்ந்த போது போலந்தின் தலைநகரான
வார்சாவைக் காட்டிலும் ருஷ்யாவின்
தலைநகரமான பீட்டர்ஸ்பர்க்
புரட்சிகரமாக இருந்தது என்பார்.
லெனின் கால ருஷ்யாவின் தனிசிறப்பான
நிலைமை என்ன? ஒடுக்கும் தேசிய
இனத்தில் பலமான தொழிலாளி வர்க்கக்
கட்சி இருந்ததும் அது ஒடுக்கப்படும்
தேசிய இனங்களின் சுய நிர்ணய
உரிமையை அங்கீகரித்து போராடியதுமே
. தேசிய இனப் போராட்டம் ஒடுக்கும்
தேசிய இனத்திலுள்ள ஆளும் வர்க்கத்தும்
ஒடுக்கப்படும.; தேசிய இனத்துக்குமான
போராட்டம் என்றேன் . இந்நிலையில்
ஒடுக்கும் இனத்திலுள்ள
தொழிலாளி வர்க்கத்தின் பலம் மற்றும்
அதன் நடத்தை முக்கியத்துவம்
பெறுகிறது. ஒடுக்கும் தேசிய
இனத்திலுள்ள தொழிலாளி வர்க்கம்
அதே தேசிய இனத்திலுள்ள ஆளும்
வர்க்கத்தை வீழ்த்துவதால் தேசிய இன
ஒடுக்குமுறையாளர ்கள்
வீழ்த்தப்படுகிற ார்கள் என்று அர்த்தம்.
இந்நிலையில் ஒடுக்கும் தேசிய இனத்
தொழிலாளி வர்க்கம் தேசிய இனங்களின்
சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து
போராடும்போது ஒடுக்கப்படும் தேசிய
இனம் பிரிந்து போய்தான் சுய நிர்ணய
உரிமையை பெற வேண்டும் என்ற
தேவை இல்லை. அதனால்தான்
போலந்தின் சுய நிர்ணய
உரிமையை அங்கீகரித்த லெனின்
போலந்து பிரிந்து போவதை எதிர்த்து
வாதிட்டு இருக்க முடிந்திருக்கும ்.
அதே நேரத்தில்
சேர்ந்து வாழ்வதா பிரிந்து போவதா
என்பதைத் தீர்மானிக்கும்
உரிமை போலந்துத் தேசிய
இனத்திற்கு மட்டுமே உண்டு.. ருஷ்ய
புரட்சிக்குப் பின்
போலந்து பிரிந்து போனது என்பது
தனிக் கதை.
4. இந்தோ – சைனா
வியட்நாம், லாவோஸ்,
கம்போடியா ஆகியவற்றைக் கொண்ட பல்
தேசிய இன நாடு இந்தோ – சைனா.
இது பிரெஞ்ச், ஜப்பான், இங்கிலாந்து,
அமெரிக்கா ஆகிய நாடுகளின்
ஆக்ரமிப்புக்கு உள்ளான நாடு.
கோசிமின் இந்தோ- சைனா கம்ய+னி;ஸ்ட்
கட்சியை கட்டினார் முதலில.;
பிறகு அதனை வியட்நாம் கம்ய+னி;ஸ்ட்
கட்சி என மாற்றினார். இந்தோ-
சைனா சமஷ்டிக்
குடியரசு அரசாங்கத்தை உருவாக்குவது
என்ற கட்சியின் முழக்கம் வியட்நாமிய
ஜனநாயகக்
குடியரசை உருவாக்குவது என்ற
முழக்கமாக மாற்றப்பட்டு வியட்நாம்
புரட்சியை சாதித்து காட்டினார்.
மூன்று தேசிய இனங்களுக்கும்
பொது எதிரியாக வல்லரசுகள்
இருந்தபோதிலும்
பொது எதிரிக்கு எதிரான தேசிய
இனங்களி;ன் ஒற்றுமை என அவர்
வாதிட்டுக் கொண்டிருக்கவில் லை.
5. செக் மக்கள், தென் ஸ்லாவியர்கள்
ஜாரிச ரஷ்யாவிலிருந்து போலந்தின்
தேசிய இன
விடுதலை இயக்கத்தை ஆதரித்த மார்க்ஸ்,
செக் மக்கள், தென் ஸ்லாவியர்களின்
தேசிய இன
இயக்கங்களை ஆதரிக்கவில்லை. ஏன்?
ஜாரிசம்தான் அன்று மிகப் பெரிய தேசிய
இன ஒடுக்குமுறை நாடாக இருந்தது.
ஜாரிசத்தின் வலிமையையும்,
செல்வாக்கையும் எதிர்த்து ஜரோப்பிய
ஜனநாயகம் நடத்திய போராட்டத்தில்
அதன் நலன்களை கருத்தில்
கொண்டு மார்க்ஸ்
போலந்து விடுதலைக்கு ஆதரவாக
நின்றார். அப்போதிலிருந்து 1890
வரையிலும்கூட
ஜாரிசமானது பிரான்சுடன் கூடிக்
கொண்டு ஏகாதிபத்திய தன்மை அற்ற,
தேசிய இன அடிப்படையில் அமைந்த
ஜெர்மனிக்கு எதிராக
ஒரு பிற்போக்கு யுத்தத்தை நடத்தும்
அபாயம்
இருந்தபோது ஜாரிசத்துக்கு எதிராக
போராட வேண்டிய முதல்
பணியென்று கருதினார் எங்கெல்ஸ். செக்
மக்கள், தென் ஸ்லாவியர்கள் ஆகியோரின்
தேசிய இன இயக்கங்கள்
ஜாரிசத்திற்கு ஆதரவாக நின்றன.
1848 ல் புரட்சிகரமான தேசிய இனங்கள்
சுதந்திரத்திற்க ாகப் போராடின.
அச்சுதந்திரத்தி ன்
முதன்மை எதிரி ஜாரிசம். செக் மக்களும்,
தென் ஸ்லாவியர்களும் ஜாரிசத்தின்
புறக்காவல் நிலையங்களாயிருந ்தனர்
என லெனின் கூறுவார்.
பொது நலனுக்கு சிறு நலன் கட்டுப்பட
வேண்டும் என்ற அர்த்தத்தில் மார்க்சும்,
ஏங்கல்சும் செயல்பட்டார்கள் .
எனவே ஒரு தேசிய இன இயக்கத்தின்
விடுதலைப்போராட்
டமானது ஒரு பெரும்
பொது எதிரிக்கு உதவும் பட்சத்தில்
அதனை நாம் ஆதரிக்கக்கூடாது . .
பொது நலனுக்கு சிறு நலன் கட்டுப்பட
வேண்டும் என்ற அர்த்தத்தில.;
ஒரு தேசிய இன
விடுதலையை முன்னிட்டு உலகப் போர்
தோன்றும் பட்சத்தில் அந்த தேசிய
இனத்தின் விடுதலை எதிர்க்கப்பட
வேண்டும்
என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
பேரழிவிலிருந்து உலகை காப்பாற்ற
வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
எனவே தோழர்களே இந்த நாடுகளின்
உதாரணங்களிலிருந ்து நாம் பெறப்படும்
முடிவு என்ன? ஒரு தேசிய இனத்தின்
பிரிவினையை மூன்று காரணங்களுக்காக
மட்டுமே எதிர்க்க வேண்டும்.
1. ஒடுக்கும் தேசிய இனத்தில் பலமான
தொழிலாளி வர்க்கம்
இருந்து அது ஒடுக்கப்படும் தேசிய
இனத்தின் சுய நிர்ணய உரிமைக்காகப்
போராடும் நிலையில் .
2. ஒரு தேசிய இனத்தின்
பிரிவினை பிற்போக்கு பெரும்
வல்லரசுக்கு உதவும் நிலையில்.
3. ஒரு தேசிய இனத்தின்
பிரிவினை உலகப்
போரை தோற்றுவிக்கும் நிலையில்.
மற்ற எல்லா நிலையிலும்
பிரிவினைக்கு தலைமை தாங்க
வேண்டு;ம்.

1 கருத்து: