செவ்வாய், 10 அக்டோபர், 2017

திணை பெயர் பாலை சொல்லாய்வு வேர்ச்சொல் பாலைவனம் அல்ல

அழகன். விம , 9 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — தமிழன் சுரேஷ் அகம்படி
மறவன் உடன்.
பாலை திணையின் பெயர் காரணம்:
பால் - பாலை = இலையிற் பாலுள்ளசெடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணையினங்
கள், அவை (முது) வேனிலில் தழைக்கும்நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும்
முல்லைநிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில்தழைத்தும் கோடையில்
வறண்டும் இருக்கும்வன்னிலம்.
பகல் (பகுப்பு) என்னும் சொல்லின்மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும
்,பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும்தொடர்பில்லை.
(தமிழர் வரலாறு பகுதி1 பக்கம் 101)
பண்டைத்தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான
நிலத்திற் குடியிருந்தனர். இவை ஐந்திணை யெனப்படும். இவை நிலைத்திணையாற்
பெயர் பெற்றன (இடவனாகு பெயர்). இவற்றின் பெயர்களுள், பாலை மருதம் என்னும்
இரண்டும் மரப்பெயர்கள்; ஏனைய பூப்பெயர்கள்.
பாலை என்பது பிறநாட்டிலுள்ளத
ுபோன்ற வறண்ட மணல் நிலமன்று. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலுள்ள
நிலம் பாலைமரச் சிறப்பால் பாலையெனப்பட்டது. அது முதுவேனிற் காலத்தில்
வறண்டும் மற்றக் காலத்தில் செழித்துமிருக்கும்.
“வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
றானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்”
(சிலப். 11 : 12-16)
என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க. பாலையின் முது வேனிற்கால நிலையே,
பிரிவிற்குரியதாக அகப்பொருட் செய்யுள்களிற் கூறப்படும்.
(ஒப்பியன் மொழிநூல் பகுதி 2 பக்கம் 36).
பால் வடிவதால் இம்மரம் பாலை என்ற இயற்பெயர் பெற்றது.பாலை மரத்தின் பெயர்
அம்மரம் உள்ள இடத்துக்கு ஆகி வந்ததால் இது இடவனாகு பெயராகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக