செவ்வாய், 10 அக்டோபர், 2017

தேக்கு விட பலம் ஆச்சா தமிழர்நாடு வீடு கட்ட சிந்தனை

தமிழர் நாடு, 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்..!
மருத்துவப் பயன்பாடு மற்றும் மரச்சாமான்கள் செய்யப் பயன்படக்கூடிய
ஆயிரக்கணக்கான மரவகைகள் காடுகளில் உள்ளன. அவற்றில் பலவற்றை நாம்
உபயோகப்படுத்துவதே இல்லை. அப்படி ஒரு வகை மரம்தான் ‘ஆச்சா’ மரம்.
இதன் ஆங்கிலப் பெயர் ‘ஹார்டுவிக்கியா பினாட்டா’ (Hardwickia Binata).
இம்மரத்தை நம்மில் பலர் இன்னமும் அறியாமல் இருக்கக்கூடும். இது மிகவும்
வலிமையான மரம். இந்த ஆச்சா மரத்தில்தான் நாதஸ்வரம் செய்யப்படுகிறது.
இந்த மரத்தின் வைரப்பகுதி கறுஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். இது தேக்கு
மரத்தை விடவும் கடினமானது. இதன் அடர்த்தி மிகவும் அதிகம். நீரில்
போட்டால் பாறையைப்போல மூழ்கிவிடும். ஒரு கன மீட்டர் மரத்தின் எடை சுமார்
1,150 கிலோ அளவில் இருக்கும்.
இவ்வளவு வலிமையாக இருப்பதால், தச்சர்கள் இம்மரத்தை உளி கொண்டு
செதுக்குவது கடினம். இப்படிக் கடினமாக இருப்பதால், இதை யாரும்
பயன்பாட்டுக்குச் சிபாரிசு செய்வதில்லை. இந்த மரத்தை ‘வேலைக்கு ஆகாது’
என்று ஒதுக்கி விடுகிறார்கள்.
ஆச்சா மரம், நீர் தேங்காத அனைத்து இடங்களிலும் வளரும் தன்மையுடையது.
மேலும் பாறை இடுக்குகள், இறுகிய மண் வகைகள் ஆகியவற்றிலும் வளரக்கூடியது.
திருச்சி மாவட்டத்தில் எம்.ஆர்.பாளையம், பாடலூர் ஆகிய பகுதிகளில்
வனத்துறை சார்பாக நடவு செய்யப்பட்ட ஆச்சா மரங்கள், தற்போது நன்றாக
வளர்ந்து நிற்கின்றன. 300 மில்லிமீட்டர் வரை மழையளவு உள்ள பகுதிகளில்
செழிப்பாகவும், 600 மில்லி மீட்டர் வரை மழையளவு உள்ள இடங்களில் மிகவும்
செழிப்பாகவும் ஆச்சா மரம் வளரும். மழை மறைவுப் பிரதேசங்களுக்கு
ம் ஆச்சா ஏற்ற மரம்.
இதன் கன்றை நடவு செய்ததிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை, வேர் வளர்ச்சி
இருக்கும். வேர் வளரும் காலங்களில் செடியின் வளர்ச்சிக் குறைவாகத்தான்
இருக்கும். நான்காம் ஆண்டிலிருந்து மரத்தின் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.
வறட்சிக் காலங்களில் இதன் இலைகள் உதிர்ந்திருந்தாலும், தண்டின்
வளர்ச்சிச் சிறப்பாக இருக்கும்.
பத்து அடி இடைவெளியில் ஆச்சா கன்றுகளை நடவு செய்தால், சர்வ சாதாரணமாக 70
அடி முதல் 80 அடி உயரம் வரை வளரும். இது நீண்ட நாள்கள் வளரக்கூடிய மரம்.
இசைக் கருவிகள், ரயில் தண்டவாளங்களில் பதிக்கப்படும் கட்டைகள்,
சுரங்கங்களின் தூண்கள், உத்திரங்கள், கடைசல்கள், பொம்மைகள் ஆகியவற்றைத்
தயாரிக்க ஆச்சா மரக்கட்டைகள் பயன்படுகின்றன.
1 மணி நேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக