செவ்வாய், 10 அக்டோபர், 2017

குமரிக்கண்டம் எனது பதிவு விவாதம் படிமங்கள் இப்போதும் இருக்கும்

Aathimoola Perumal Prakash
குமரிக்கண்டக் கருத்தியல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குமரி என்பது மலையா? கடலா? கண்டமா? தென்முனையா?
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்"
என்ற வரிகளுக்கு விளக்கம் தரும் உரையாசிரியர்கள் குமரியை ஆறு என்றவாறே
உரையெழுதியுள்ளனர்.
ஆனால் குமரி ஒரு ஆறு என்று எங்கும் வரவில்லை.
"வடவேங்கடம் தென்குமரி"
(தொல்காப்பியம் பாயிரம்)
"தென்குமரி வட பெருங்கடல்
குண குட கடலா எல்லை"
(புறநானூறு: 67)
போன்ற இடங்களில் குமரி என்று மட்டுமே வந்துள்ளது.
ஆனால்,
சிலப்பதிகாரத்தில் குமரியை கடல் என்றவாறு
"நெடியோன் குன்றமும்
தொடியோன் பௌவமும்"
குறித்திருப்பதைக் காணமுடிகிறது.
ஆனால் அதே சிலப்பதிகாரத்தில் மற்றொரு இடத்தில் குமரி எனும் மலையை கடல்
கொண்ட செய்தி வருகிறது.
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள"
என்று பஃறுளி ஆற்றோடு குமரி மலை கடலில் மூழ்கிய செய்தி வருகிறது.
இளங்கோவடிகள் கடலில் மூழ்கிய மலையை குமரி என்று கூறுவது அவரது வரலாற்று
அறிவினால் ஆகும்.
அவரது காலத்தில் குமரி கடலில் மூழ்கி கடலுக்கு பெயராக இருந்திருக்கவேண
்டும்.
பஃறுளியாற்றுடன் குமரி மலையும் கடல்கொண்டபிறகு
அந்த இழப்பினை ஈடுசெய்வதற்காக பாண்டிய மன்னன் ஒருவன் வடக்கே
படையெடுத்துச் சென்று கங்கையையும், இமயத்தையும் தன் உடைமையாக்கிக்
கொண்டவரலாற்றையே இளங்கோவடிகள்
"பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்"
என்று கூறுகின்றார்.
பஃறுளியாறு நெடியோன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பகுதி என
"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
என்ற புறநானூறு மூலம் அறியலாம்.
[இதற்கு அடுத்தும் ஒரு கடற்கோள் ஏற்பட்டு தமிழ்ச் சங்கம் (இடை) இருந்த
கபாடபுரம் வரை கடலில் மூழ்கியுள்ளது.
இது இளங்கோவடிகள் காலத்திற்கு முன்பே நடந்திருந்தாலும் அவர் அதை ஏனோ
வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை.
ஆனால் "மலி திரையூர்ந்து தன் மண் கடல் வௌவலின்" என்று ஒரு கடற்கோளையும்
(அந்த நில இழப்பை ஈடுகட்ட) பாண்டியன் சேர சோழரை வென்று தனதாக்கியதை
"புலியோடு வில் நீங்கி" என்றும் முல்லைக் கலியில் மறைமுகமாக
குறிப்பிட்டுள்ளார்]
இந்திய துணைக்கண்டம் பெரிய தீவாக கடலில் தனித்து இருந்தது.
பிறகு அத்தீவு ஆசியாவுடன் மோதி இணைந்தது.
அந்த மோதலால் உருவானதே இமயமலை.
அப்படி இணையும் முன்பு (அதோடு குமரிக்கண்டமும் சேர்ந்திருந்தது) நாம்
அதில் வாழ்ந்திருந்தோம்.
அதற்கு நாவலன் தீவு என்று பெயரிட்டு அழைத்துவந்தோம்.
(மருதுபாண்டியரின் சுதந்திர பிரகடனத்தில் இந்தியாவை ஜம்புத்தீவு என்று
குறிப்பிட்டுள்ளனர்)
அப்படிப் பார்த்தால் மூழ்கியுள்ள கண்டம் நாவலந்தீவு என்றுதான் அழைக்கப்பட்டிரு
க்க வேண்டும்.
நாவலந்தீவின் தென்பாதியில் பெரும்பகுதியை குமரி மலை கொண்டிருக்கவேண்டும்.
மூழ்கிய பிறகும் பல காலம் அந்த மாமலையின் உச்சி வெளியே தெரிந்தபடி
இருந்திருக்கவேண்டும்.
அதனால் நிலப்பரப்பின் பெயரை விட மலையின் பெயரே அக்கடல் பகுதிக்கு
அமைந்திருக்கவேண்டும்.
மூழ்கிய அந்நிலத்தைப் பற்றி மேலைநாட்டார் விலங்கின ஆராய்ச்சியின் போது
கண்டறிந்தனர்.
லெமுர் எனும் உயிரினம் இந்தியா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று
நிலப்பரப்பிலும் கடலை ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்வதை வைத்து முன்பு
இம்மூன்றையும் தொட்டவாறு பெரிய கண்டம் இருந்திருக்கவேண்டும் என்று
கணித்து அதற்கு லெமூரியா என்று பெயரிட்டனர்.
இதை அறிந்த தமிழறிஞர்கள் மேற்கொண்டு இலக்கியங்களை ஆராய்ந்து லெமுரியா
என்பது 49 நாடுகள் இருந்த தமிழர் நிலமே என்று அறிவித்தனர்.
இது பற்றி 20ம் நூற்றாண்டில் முதன்முதலாக ( அதாவது பல நூற்றாண்டுகளுக்கு
பிறகு) 1903ல் எழுதியவர் பரிதிமாற் கலைஞர் (பார்ப்பனத் தமிழர்).
தமது 'தமிழ்மொழியின் வரலாறு ' எனும் நூலில் குமரிநாடு என்றே குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு அது 1930களில் குமரிக் கண்டம் என்று பெயர்பெற்றது.
(இப்பெயர் 15ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கந்த புராணத்தில் இருந்து
எடுக்கப்பட்டதாக கூறுவர்)
இதை பரப்புரை செய்து தமிழர் அனைவருக்கும் கொண்டுசென்று குமரிக்கண்டம்
தமிழர் பிறப்பிடம் என்றும் இந்தியாவில் மூத்தகுடி தமிழரே என்றும்
'குமரிக்கண்ட கருத்தியலை' உருவாக்கியவர் ஈழத்தமிழரான கனகசபை ஆவார்.
அதன்பிறகு பாவாணர் மேலும் ஆராய்ந்து குமரிக்கண்ட மாந்தன் இந்தியா
மட்டுமல்லாது உலகிலேயே தோன்றிய முதல் மாந்தன் என்று அக்கருத்தியலை அடுத்த
கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
அதற்காக 20 நூற்றாண்டுவரை தமிழர்கள் மூழ்கிய குமரியை மறந்துவிட்டதாகக் கூறமுடியாது.
ஈழத்தின் தென் பகுதி தமிழர் வசம் இல்லை.
ஆனால் அந்த கடல் பார்த்த தென்முனை தமிழகத்திடம் உள்ளது.
அந்த பகுதிக்கு தமிழ்மக்கள் குமரி என்றே பெயரிட்டு அழைத்தனர்.
ஆங்கிலேயர் அம்முனையை cape komarin என்றே குறித்துள்ளனர்.
மூழ்கிய குமரிநிலத்தின் நினைவாக குமரி அம்மன் கோவிலும் கட்டி வழிபட்டு வந்தனர்.
(மூழ்கிய முன்னோர் வழிபாடு தென்புலத்தார் வழிபாடு என்று பல காலம்
பின்பற்றப்பட்டு தமிழர்களால் வந்தது)
1956ல் தமிழ் மாநிலம் அமைந்தபோது மலையாளிகள் கையில் இருந்த தென்முனையை
பெரும்போராட்டம் நடத்தி தமிழகத்துடன் சேர்த்த நேசமணி (கிறித்துவ நாடார்)
அவர்கள்,
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை (வெள்ளாளர்) அவர்களின் கடைசி ஆசைப்படி
அம்மாவட்டத்திற்கே 'கன்னியாகுமரி' என்று பெயர் வைத்தார்.
ஆக, குமரி என்ற பெயர்
முதலில் மலைக்கும்
பிறகு கடலுக்கும்
பிறகு மூழ்கிய கண்டத்திற்கும்
பிறகு தென்முனைக்கும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
இமயமலை முதல் குமரிமலை வரை பரந்திருந்த ஒரு கண்டம் முழுவதும் வாழ்ந்த
தமிழர் இன்று ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவரைப்போல வாழ்கிறோம்.
'இந்தியா முழுவதும் நமதே' என்பதற்கான சான்றுகள் பெரும்பாலும்
அழிக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் பிறரறியா வண்ணம்
ஆக்கப்பட்டுவிட்டன.
ஆனால்,
மூழ்கிய குமரிக்கண்டம் நமது பழமையான நாகரீக சான்றுகளுடன் பாதுகாப்பாக
கடலுக்குள் இருக்கிறது.
நம் வரவை, தனது மக்களின் வரவை எதிர்பார்த்து அது கடலுக்குள் காத்திருக்கிறது.
எனவே இந்தியாவில் உள்ள மூடர்களிடம் எஞ்சியுள்ள சான்றுகளை காட்டி
'தமிழ் மொழியை வெறும் 5000 ஆண்டுகள் பழமையானது என்றாவது
ஏற்றுக்கொள்ளைங்கள்" என்று பேரம் பேசுவதில் குறியாக இருக்கும் நாம்,
இனியும் அந்த 'பாறையில் உழும்' முட்டாள்த்தனத்தைச் செய்யாமல்
கையில் இருக்கும் நிலத்தையாவது அரணமைத்து தனிநாடாக்கி
இனத்தை அழிவிலிருந்து காத்து
பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டும்.
அதன்பிறகு கடலில் இறங்கி (இன்று பாகிஸ்தானில் உள்ளதும் இந்திய
கண்டத்திலேயே பழமையான நாகரீகமும் ஆன ) சிந்துசமவெளி நாகரீகத்தை விட
பழமையான நமது குமரிக்கண்ட நாகரீகத்தை ஆராய்ந்து நமது பழமையை நாட்டுவதில்
சிந்தையைச் செலுத்துவோம்.
தனிநாடு அமைத்து அதன்மூலம் அமையும் நமது பொருளாதாரம் மூலம்தான் கடலில்
இறங்கி நமது பழமையை வெளிக்கொணரும் ஆற்றல் நமக்கு வரும்.
உலகத்தில் வாழும் எந்த இனத்தானும் நமக்காக இதைச் செய்யப்போவதில்லை.
நாம் தான் செய்யவேண்டும்.
அதன்பிறகுதான் தமிழரே மூத்தகுடி என்று உலகம் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ளும்.
நாம் அதைச் செய்யாததால் பாருங்கள் முழுக்க முழுக்க தமிழருக்கு மட்டுமே
உரிமையான அந்த கடலை அதனடியில் இருக்கும் நிலத்தை எவனெவனெல்லாமோ சொந்தம்
கொண்டாடுகிறான்.
(நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்தியாவின் பெயரில்) குமரிக்கடல்
இன்று 'இந்தியப் பெருங்கடல்' என்று அழைக்கப்படுகிறது.
நேற்று பிறந்த இந்துத்துவவாதிகள் அதை 'இந்து மகா சமுத்திரம்' என்கின்றனர்.
நாம் தனிநாடு அமைத்ததும் அக்கடலுக்கு குமரிக்கடல் என்றே பெயரிட வேண்டும்.
பிறரை முந்திக்கொண்டு நாம் முதலில் கடலில் இறங்கி விரிவான ஆராய்ச்சி நடத்தவேண்டும்.
குமரிக்கண்டத்தை ஆராய்ந்தால் நாமே பூர்வகுடி எனும் சான்று கட்டாயம் கிடைக்கும்.
அதன் பழமையை நிறுவிவிட்டால் இந்தியாவையே நாம் கைப்பற்றி ஆண்டாலும் யாரும்
கேள்விகேட்க முடியாது.
பாவாணர் கூறிய படி
'குமரிக்கண்டமே மாந்தன் தோன்றிய இடம்'
'தமிழரே மூத்தகுடி'
'தமிழே மூத்தமொழி'
என்ற உண்மையை உலகம் அறியும்படி சான்றுகளுடன் அறிவிக்கவேண்டும்.
இதுதான் குமரிக்கண்டக் கருத்தியல்.
இதற்கு ஒரே வழி தமிழ்தேசியம்.
நேற்று, 08:49 AM · தனியுரிமை: பொது
படங்களைச் சேர்
தமிழ் கஜேந்திரன் மற்றும் 73 பேர்
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/2016/07/blog-post_10.html?m=1
ஆதாம், ஏவாள் மற்றும் நோவா ஆகியோரும் தமிழரே
vaettoli.blogspot.com
4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · நேற்று, 08:59 AM க்கு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/2015/07/blog-post_93.html?m=1
இமயமலையில் தமிழர் சுவடுகள்
vaettoli.blogspot.com
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · நேற்று, 08:59 AM க்கு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/2017/04/17.html?m=1
குருதியில் நனைந்த குமரி -17
vaettoli.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · நேற்று, 08:59 AM க்கு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/2015/11/blog-post_28.html?m=1
குமரிக்கண்டத்து மன்னனின் சாதனைகள்
vaettoli.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · நேற்று, 09:00 AM க்கு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/2016/03/blog-post_17.html?m=1
இந்திய, திராவிட உணர்வு தவறா?
vaettoli.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · திருத்து · நேற்று, 09:01 AM க்கு
Kokilan Sachithananthan
நிலம் புதைந்து போனதற்கு இன்னுமொரு வலுவான சான்று குமரி-மன்னார் வளைகுடா
பகுதியில் கடலினடியில் 4000 அடி ஆழத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ள பல
லட்சம் கன அடி இயற்கை எரிவாயுவும் அதற்கும் கீழே காணப்படும் நிலநெய்
வளமும். அவை கடலின் அடியாழத்தில் புதைந்து இயற்கை எரிவாயுவாகவும்
நிலநெய்யாகவும் உருமாற பல லட்ச சதுர அடி நிலத்தின் தாவரங்களும் பல லட்சம்
விலங்குகளும்(?) நிலத்தில் புதையுண்டு போனதால் தானே இந்த புதைபடிவ
எரிபொருள் இப்போது கிடைத்திருக்கிறது.
8 · விரும்பு · பதிலளி · நீக்கு · புகாரளி ·
நேற்று, 09:34 AM க்கு
Kumar Kanakaraj
If it is true that some land area very beyond Kanniya Kumari submerged
as said in literature, How it would have happened ? Suddenly one day
water submerged the land or gradually water level increased over the
time which submerged. or sudden earth quake kinda natural disaster
happened which shifted land to water and water to land ? if it
happened in near to tamil nadu shore, it would have happened in the
other parts of the earth as well. polar ice melting may be reason and
what lead to polar ice melting ? we have to authenticate
scientifically this theory and prove it. then only it will become
valid point. we can not speculate based on poetry.

Kokilan Sachithananthan
Its not just based on poetry. Not based on mythology. Any person able
to dive in and reach sea bed can see the ancient artifacts. Few man
made mega structures still found away from southwest of Srilanka far
from 60 nautical miles. If permitted by Srilankan goverment, Indian
government and Maldives government, we can see the sunken land's
remaining. It may difficult to get permission from SL government to do
underwater research in the Indian-Arabian sea bed along with these
three countries. It may take little long. The other thing, do you know
about the fossil fuel and natural gas deposit in the gulf of Mannar?
To create natural gas and fossil fuel , either tons of forest or
millions of animals to be crushed or graved under soil for few
thousands years of time?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு ·
புகாரளி · நேற்று, 08:34 PM க்கு
Kumar Kanakaraj
You are saying that 60 nautical miles off from the shore and in the
4000 feet deep sea there are ancient artifacts available. Let us
assume that. ok Humans are living in the shore for thousands of years
and kings used to build many structures and temples on the shoreline.
these structures will ruin over the time and remains would have washed
away from shore to inside deep sea because of tsunami waves or giant
waves. Also the kings used to trade between countries via sea since
ancient times. artifacts and materials from boat or ship might have
fallen into sea. if we assume that 4000 feet deep sea where artifacts
available is a land area once and people used to live there, then the
current tamil land if existed that time and people lived here as well,
then this place would have been mountain for the place 4000 feet down.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · நீக்கு · புகாரளி · 10 மணி நேரம் முன்பு
Kumar Kanakaraj
Next thing is how this 4000 feet sea water level increased to the
current sea level ? if the sea level increased 4000 feet near Tamil
Nadu, then it would have increased across earth. because sea across
earth interlinked. it will not increase near Tamil Nadu alone. The
total content of earth water will remain more and less constant. It
may decrease because of usage but never increase until and unless
polar ice melted or water is poured from universe to earth. it is
possible only very small area might have submerged near shore line but
not huge land. science says that the continental plates moves over the
time in billions of years time line not in the 1000s of years. If it
happened millions or billions of years back how can tamil poets came
to know that ? may be only in their imaginations
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · நீக்கு · புகாரளி · 10 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
குமார் கனகராஜ்,
நீங்கள் கடலைப் பற்றி எதுவும் அறியாதவர் என்பது சுனாமி வந்தால்
கடலுக்கடியில் இருப்பது கரைந்துவிடும் என்பதிலிருந்தே தெரிகிறது.
சுனாமி கரையை நெருங்கும்போதுத
ான் பலமாக இருக்கும்.
கடலில் ஒரு அதன் அதிர்வலைகள் மட்டுமே ஏற்படுத்தும்.
பஃறுளி ஆற்றில் முந்நீர் விழா நடத்திய பாண்டிய மன்னன், குமரிக்கண்டம்
மூழ்கும்போது தமது கப்பல்களில் முடிந்தவரை மக்களை ஏற்றிக்கொண்டு மூழ்காத
பகுதிக்கு வந்துள்ளான்.
(இதுதான் நோவா கதையாக உழவுகிறது. அப்போது கரையோரம் வாழும் மீன்களின்
இடப்பெயர்வை பின்பற்றி அவன் பயணித்துள்ளான். அதனாலேயே பாண்டியருக்கு மீன்
சின்னம் வந்தது என்று கூறுவர்).
ஒரு மன்னன் மக்களைக்கூட்டி விழா நடத்தியதும் அதை இலக்கியங்களில் பதிவு
செய்ததும் அவன் கப்பல் வைத்திருந்ததும் தெரிகிறது.
என்றால் அவர்கள் நாகரீக முன்னேற்றத்தை ஓரளவு கணிக்கலாம்.
அவர்கள் பெரிய வீடுகள் கோட்டைகள் கட்டி வாழ்ந்த மக்களாகத்தான் இருப்பர்.
அந்த கட்டுமானங்கள் கடலில் மூழ்கியிருந்தால் இன்றும் அது அப்படியே
கிடக்கும் எங்கும் போய்விடாது.
அந்த இடத்தில் எரிமலை வெடித்தால் ஒழிய பெரிய மாற்றம் இருக்காது.
கரையோரம் மூழ்கியதை நாங்கள் கணக்கிலேயே எடுக்கவில்லை.
மாமல்லபுரம் அருகே பெரிய நகரமே மூழ்கி இருக்கிறது (எயிற்பட்டிணம்).
அதையெல்லாம் கணக்கில் எடுக்கவில்லை.
பெரிய நிலப்பரப்பு மூழ்கி கடலில் மிக ஆழத்திற்கு சென்றுவிடுவது புதிதாக
நடப்பதில்லை.
அமெரிக்க கண்டத்திற்கும் ஐரோப்பிய கண்டத்திற்கும் இடையே மு எனும் கண்டம்
மூழ்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை அடுத்த ஒரு கண்டம் மூழ்கியுள்ளது அதன் ஒரு
பகுதிதான் நியூசிலாந்து.
கட்டுக்கதைகளை நம்பி மனக்கோட்டை கட்ட நாங்கள் ஒன்றும் நம்பிக்கை
அடிப்படையில் கூடிய மதவாதிகள் இல்லை.
அற்புத நம்பிக்கைக்கு அடிமையாகி துவாரகாவை தேடுகிறோம் என்று கடலில் பல
கோடி நிதியைக் கேம்பே கடலில் கொட்டி குண்டீசி கூட கண்டுபிடிக்காதவர்கள்
பற்றி நீங்கள் அறியாதவர் போலும் ஆனால் நாங்கள் அறிவோம்.
திருத்தப்பட்டது · 1 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · திருத்து · 1 மணிநேரம் முன்பு
Kokilan Sachithananthan
Kumar Kanakaraj ,4000 feet from sea bed, not from the water level.
மாமல்ல புரம் தொட்டு இலங்கையைச் சுற்றி மாலைதீவு அந்தம் வரை 60 கடல்மைல்
தூரத்திற்குள் 4000 அடி நீராழம் இதுவரை அறியப்படவில்லை. நான்
குறிப்பிட்டது கடல் படுக்கையில் இருந்து கீழே 4000 அடி ஆழத்தில் ( 30
வருட தேடலுக்குப் பின்னர் ) இயற்கை எரிவாயுப் படிமங்களைக்
கண்டுபிடித்துள்ளனர் என்பதே. அரேபியப் பகுதியில் காணப்படும் விலங்குப்
புதைபடிவ எரிபொருள் போலல்லாமல் கனேடியப் பகுதியில் காணப்படும் தாவரப்
புதைபடிவ மூலத்தைக் கொண்ட இயற்கை எரிவாயுப் புதைமம் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக