செவ்வாய், 10 அக்டோபர், 2017

கடம்பர் வேறு கடம்ப மரம் கொண்ட துளுவர் வேறு கடல் கொள்ளையர் கடல்துருத்தி தீவு கடம்பன்

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
# பதிவு_20 ..
@மயிலை_சீனு_வேங்கடசாமி..
தமிழர் சரித்திரம் நூலில்...
++++++++++
கடம்ப மரத்தையும் பிற்காலத்தில் இருந்தவரான கடம்ப குல அரசரையும் இணைத்து
இக் காலத்தில் சிலர் சரித்திரம் எழுதுகிறார்கள். அதில் உள்ள தவறான
கருத்தை இங்கே விளக்குவோம்...
கடல் துருத்தியில் இருந்தவர் துளுநாட்டைச் சேர்ந்தவர். அவர்கள்
துளுநாட்டு நன்னனுக்கு அடங்கியிருந்தவர்கள். அவர்கள் அத்தீவில் தங்கள்
காவல் மரமாகக் கடம்ப மரத்தை வளர்த்து வந்தார்கள்...
ஆனால், அவர்களுக்குக் கடம்பர் என்று பெயர் இருந்த தில்லை. இக்காலத்து
ஆராய்ச்சிக்காரர்களில் சிலர் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த
இத்தீவினரைக் கடம்பர் என்று தவறாகக் கருதிக்கொண்டனர்.
இவ்வாறு தவறாகக் கருதிக்கொண்டு, பிற்காலத்தில் பனவாசி (வனவாசி) நாட்டை
யரசாண்ட கடம்ப அரசர் களின் முன்னோர்கள் இத்தீவில் இருந்தவர் என்று
எழுதிவிட்டார்கள்.
கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த காரணத்தி னாலே அவர்களைப்
கடம்பர் என்று கூறுவது தவறு. சங்க நூல்களில் அவர்கள் கடம்பர் என்று
கூறப்படவில்லை. இதனை இவர்கள் சிறிதும் அறியவில்லை.
1.மோகூரிலிருந்த பழையன் சந்ததியார் வேப்பமரத்தையும்,
2.குறுக்கை என்னும் ஊரில் இருந்த திதியன் பரம்பரையினர் புன்னை மரத்தையும்,
3.நன்னன் பரம்பரையார் பாழி என்னும் ஊரில் வாகை மரத்தையும் காவல் மரமாக
வளர்த்து வந்தார்கள் என்பதைச் சங்க நூல்களில் காண்கிறோம்.
ஆனால், இவர்கள் முறையே வேம்பர்,புன்னையர்,வாகையர் என்று பெயர் கூறப்படவில்லை.
அது போலவே கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்தவர் கடம்பர் என்று
பெயர் பெறவில்லை...
இதனையறியாமல், இக்காலத்து ஆராய்ச்சிக்காரர்களில் சிலர்,
இத்தீவிலிருந்தவரைக் கடம்பர் என்று தவறாகக் கருதிக்கொண்டு.
பிற்காலத்திலிருந்த கடம்ப அரசரின் முன்னோர்கள் இவர்கள் என்று பிழையான
கருத்தைத் தவறாக எழுதிவைத்துள்ளனர்.
பனவாசி அரசராகிய கடம்பர்
கடம்ப மரத்தின் பெயரைக் கொண்டவர் என்றும் அந்தக் கடம்பமரம்
கடற்றுருத்தியில் இருந்த கடம்ப மரம் என்றும், ஆகவே இக்கடம்ப மரத்தை
வெட்டிய நெடுஞ்சேரலாதன் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரபலமாக
இருந்த கடம்ப அரசர் காலத்தில் இருந்தவன் என்றும் தம் மனம் போனபடி எல்லாம்
சான்று இல்லாமல் எழுதிவிட்டார்கள்..
+++++++
எனவே புறம் பாட்டில் வரும் "துடியன்,பாணன்,ப"றை"யன்,
கடம்பன்" இந்நாண்கும் இசை தொடர்புடையவர்களே என்பது தின்னம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக