செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஆயுதபூசை வாண்மங்கலம் தமிழர் பண்டிகை இலக்கியம் விழா

ஆயுதபூசை மீள்பதிவு........
--------------------------------
ஆயுதபூஜை தமிழர் பண்டிகையா?முழுமையாக படிக்கவும்.....
ஆயுதங்களை கொண்டாடுவதும் பூசிப்பதும் தமிழர் மரபு! அதை ஆட்டையை போட்ட
ஆரியம்!இதை அலும்பு பண்ணும் திராவிடம்!
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்த சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் ஓவியங்கள்
இல்லை. இப்ப இருக்கும் ஓவியம் எல்லாம் இராஜ ரவி வர்மா ஐரோப்பிய மோகத்தில்
அதன் கலவையுடன் வரைந்த கிறுக்கு படைப்புகள் இவைகள் எப்படி நம்(தமிழர்)
கடவுள்கள் ஆக முடியும் ? அப்புறம் ஆயுத பூஜையின்ன இன்னா நைனா ன்னு
கேக்கறது புரியுது.
நம்ம ஔவை( சங்ககால ஔவை ) நம்ப தமிழ் வேந்தர் அதியமானுக்கும்
தொண்டைமானுக்கும் ஏற்பட்ட சண்டையை தவிர்க்கும் பொருட்டு
தொண்டமானிடம் தூது போற. போயி அங்கே உள்ள தொண்டமானின் ஆயுதசாலையை பார்கிறா
ஆயுதம் எல்லாம் பூசை போட்டு அலங்கரிச்சு இருக்கு. இத பாத்து ஒரு பாட்டும்
பாடுறா....
"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே."
அவ்ளோதான் ஒரே பாட்டு தொண்டமான் சமாதன கை கொடுத்துட்டான் தமிழுக்கு அவ்ளோ வலிமை !!
அப்புறம் சங்க இலக்கியம் புறப்பொருள் வெண்பா மாலை, இதுவும் சொல்லுது
மங்கலம் எதெல்லாம்ன்னு.
குடுமி களைந்த புகழ் சாற்று நிலையே,
மண மங்லமே. பொலிவு மங்கலமே,
நாள் மங்கலமே, பரிசில் நிலையே,
பரிசில் விடையே, ஆள்வினை வேள்வி,
பாண் ஆற்றுப்படையே, கூத்தர் ஆற்றுப்படையே,
பொருந் ஆற்றுப்படையொடு, விறலி ஆற்றப்படையே,
வாயுறை வாழ்த்தே, செவியறிவுறூஉக்,
குடை மங்கலமொடு , வாள் மங்கலமே,
மண்ணு மங்கலமே, ஒம்படை , ஏனைப்
புறநிலை>>>>...
மேல சொன்ன எல்லாம் தமிழன் கைகொண்ட மங்கலங்கள். அதாவது பூசைகள்.
கரூர் பக்கம் உள்ள ஒரு காவேரிக்கரை சிற்றூர்
வாள் மங்களம் !! அப்புறம் சமயபுரம் அருகில் வாளாடி என்றும் ஒரு ஊர் உள்ளது.
ஆக சங்ககாலத்திற்கு முன்பே போருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தும்
ஆயுதங்களை கொண்டாடுவதும் பூசிப்பதும் நமது தமிழ் மரபு. அது தற்போது
தொழிற்சாலைகளிலும் பின்பற்றப்படுகிறது.
சுமார் நூறு வருடங்களுக்கு முன்புவரை கிராமபுற வழிபாடுகளான குலதெய்வ,
காவல்தெய்வ, பழங்குடி வழிபாடுகளில் ஆயுதங்களை
(திரிசூலம்,வேல்கம்பு,வல்லயம்,வ
ீச்சருவாய்) மட்டுமே வைத்து தமிழர்கள் பூசை செய்து வந்தனர்.இங்கு சரஸ்வதி
லெட்சுமிக்கு எல்லாம் வேலையில்லை.இதில் எப்படி சரஸ்வதி லெட்சுமி போன்ற
கற்பனை பாத்திரங்கள் எல்லாம் கலந்தார்கள்.ஆக இது ஆரிய சூழ்ச்சி.
அதுபோன்று நம்முடைய கிராமபுற வழிபாடுகளான குலதெய்வ, காவல்தெய்வ, பழங்குடி
வழிபாடுகளில் வழிபாட்டு தலங்களில் இன்றைய(இன்று கொண்டாடும்) ஆயுதபூஜை
கொண்டாடுவது இல்லை.
தமிழிலேயே பெயரில்லாத தமிழர் பாரம்பரிய உணவு மரபுக்கு எதிரான தமிழர்களின்
சங்க இலக்கியங்களின் சொல்லப்படாத கடவுள்களை(சரஸ்வதி லட்சுமி)முன்னிறுத்தி
கொண்டாடப்படும் பண்டிகை எப்படி தமிழர் பண்டிகையாக இருக்கமுடியும்?
ஆகவே ஆயுதங்களை கொண்டாடுவதும் பூசிப்பதும் நமது தமிழ் மரபு இதை
மீட்டெடுத்து தமிழர் விழாவாக கொண்டாட வேண்டும்.# நாம்தமிழர் .
(சரவணன் சுந்தர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக