செவ்வாய், 10 அக்டோபர், 2017

கூடங்குளம் ஹைட்ரஜன் கசிவு விபத்து அதிர்ஷ்டவசமாக தப்பியது அணுவுலை பேராபத்து இன்பாக்ஸ் x

பெரும் கோபத்திலும் வருத்தத்திலும்
இதை பகிர்கிறேன்:

இன்று காலை இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்து
ஓய்வு பெற்ற திரு.கோபாலகிருஷ்னன் அவர்களுடன் நீண்ட நேரம் தொலைபேசியில்
உரையாடினேன்.

கூடங்குளம் அலகு இரண்டில் ஏற்பட்ட "ஹைட்ரஜன் கசிவு" குறித்து மேலும்
தகவல்கள் தருமாறு கேட்டேன்.
அவர் சொன்ன விசயங்கள் அதிர்ச்சியை தருகின்றன.

ஹைட்ரஜன் வாயு அதிகமாக இருந்தால் (ஓர் அளவிற்கு மேல்), சின்ன தீப்பொறி
பட்டாலே வெடித்து சிதறி விடும் என்றும் அதுவும் இப்போது ஹைட்ரஜன்
concentration நடைபெற்ற இடம், மின்னுற்பத்தி (generation side) நடைபெறும்
பகுதி என்பதால் "எலக்ட்ரிக் ஸ்பார்க்" சர்வசாதாரணமாக வரும் என்றும்
தெரிவித்தார். மேலும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது அதிர்ஷ்டவசமானது
என்று தெரிவித்தார்.

இதைப்போன்ற கசிவுகள் சோதனை ஓட்டங்களில் மற்றும் டெஸ்ட் (test) phase
போன்ற நிலைகளில் கண்டறியப்பட வேண்டும், அல்லது அணு உலைகள் சில ஆண்டுகள்
ஓடிய பிறகு வந்தால் அவை உற்பத்தி சார்ந்த பிரச்சனையாக கூட இருக்கலாம்.
அணுசக்தி மின்னுற்பத்தி கழகம் (NPCIL) அவசரப்பட்டு அலகுகள் 1 மற்றும்
இரண்டிற்கும் பொறுப்பேற்று கொண்டது. இன்னும் சில ஆண்டுகள் ரஷிய
நிறுவனத்தை, குறிப்பிட்ட அலகுகளை ஓட்டிக்காண்பிக்க சொல்லி, பிரச்சனைகள்
ஏற்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்யச்சொல்லி ஒப்படைக்க சொல்லிருக்க
வேண்டும் என்று சொன்னார்.

அணு உலை பாகங்கள் அதிக நாட்கள் கடற்கரையில் வைத்திருந்ததாலும்
உப்புக்காற்றால் அரிப்பு (corrosion) ஏற்பட்டிருக்கலாம், மேலும் இந்த
வகையான "மென்னீர் உலைகள்" (light water reactors) இந்திய
பொறியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் புதிது, அதனால் அவர்களுக்கு
பழுதுகளும் அவற்றை சரி செய்யும் வழிமுறைகளும் தெரியாது என்கிறார்.

கூடங்குளம் அணு உலைகளுக்குள்ள உதிரி பாகங்களை மட்டும் நீங்கள் கொடுங்கள்,
கட்டிடங்கள் கட்டுவது, மின்னணு சாதனங்களை பொருத்துவது போன்ற வேலைகளை
நாங்களே செய்து கொள்கிறோம் என்று இந்திய அரசு
ரஷ்ய நிறுவனத்திடம் சொன்னது பெரிய தவறு என்று குறிப்பிட்டு சொன்னார்.

அவர் சொன்னதிலிருந்து
நான் தெரிந்து கொண்டது இது:

இந்திய அணுசக்தி துறைக்கு அலகுகள் ஒன்று மற்றும் இரண்டு #தோல்வி என தெரியும்.

அதனாலேயேதான்
அலகுகள் மூன்று மற்றும் நான்கிற்கான வேலைகளை துரிதமாக #செய்து வருகிறார்கள்.

Sundar Rajan

பேரழிவு திட்டம் நாசகார அணு எரிபொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக