செவ்வாய், 10 அக்டோபர், 2017

கிள்ளிவளவன் மலையமான் போர் குழந்தை கொலை செய்ய முயற்சி போர்க்குற்றம் இலக்கியம்

கிள்ளிவளவனும் மலையமான் மக்களும்
புறநானூறு:
நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை..
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்..
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த..
புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி..
விருந்தின் புன்கண் நோவு உடையர்..
கேட்டனை, ஆயின், நீ வேட்டது செய்ம்மே...
விளக்கம் :
கிள்ளிவளவனின் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன்.
ஆனால், செருக்குமிக்கவன்....
எவ்வளவு சொல்லியும் , எத்தனை பேர்கள் தடுத்தும், கிள்ளிவளவன் கருவூரை
கைப்பற்றினான்..
ஆம்....
சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே
கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்ச்சியைக்குறித்து பல நாட்கள் சிறப்பாகப் பேசுகின்றன. தனக்கு
பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது
என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க,
முயன்றவர் ஆலத்தூர் கிழார் .....
அட போங்கய்யா.... கோவூர் கிழார் சொல்லியே நான் கேட்கவில்லை......என்று
ஆலத்தூர் கிழாரை அலற வைத்தான் கிள்ளி வளவன்.....
பாவம் ஆலத்தூர் கிழார்...அவர் முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர்
வீழந்தது கிள்ளியிடம்.....
மூவேந்தர் கூட்டு சதியின் காரணமாக மலையமான் பெயர் பெற்று இருந்தான்....
இதை பற்றி வேறு ஒரு பதிவில் காண்போம்...இங்கு வேண்டாம்.....
மலையமானிடம் போர் புரிந்தான் கிள்ளிவளவன்....
இதில் படை வலிமை குன்றி பெருந் தோல்வியை
அடைந்தான் மலையமான்....
பாவம் மலையமான் ஏனோ இப்பெயருக்கு ஆளாகி விட்டான்.......
அவன் மகன்கள் மட்டும் கிள்ளிவளவனிடம் பிடிபட்டார்கள்..... சிறு
குழந்தைகள் அவர்களுக்கு என்ன தெரியும்.....
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கிள்ளிவளவனின் அரசவை கூடியது....
வெகு சினத்துடனும், பழி வாங்கும் எண்ணத்துடனும் கிள்ளி காணப்பட்டான்...
மலையமான் மீது உள்ள பழி உணர்ச்சி அவன் மக்களின் மீது திரும்பியது...
என்ன செய்வதென்றே பிடிபடவில்லை அவனுக்கு.... ஒரு கொடூர முடிவுக்கு
வந்தான் கிள்ளிவளவன்...
அதை கேட்ட அரசவையே பதறிப்போனது...
கோவூர் கிழாருக்கு கை கால் வெளவேலுத்து போயிடுச்சி... அய்யய்யோ. ....
இந்த படுபாவி பெரிய பாவத்திற்கு ஆளாக போறானே... வழிவழியாக வந்த
குலபெயற்கு களங்கம் ஏற்படுத்த போறானே...... என்று பேச முடியாமல் சிலையாக
காணப்பட்டார்....
அரசவை அதிர ஒரு இடியை போன்ற வந்து விழுந்தது அந்த செய்தி.....
அவர்களை யானையை வைத்து மிதித்துக் கொன்று விடுங்கள்...
கிள்ளியின் பழி உணர்ச்சி ஓங்கி மனித இயல்புகாண உணர்ச்சி மறைந்து போய்
கொண்டு இருந்தது.....
கொலை களத்திற்கு யானை கொண்டு வரப்படுகிறது.....
நடப்பது என்னவென்று அறியாத சிறு பிள்ளைகள்... அந்த களிறை கண்டு
கொண்டாட்டம் அடைந்தனர்....
இதனை கண்ட கோவூர் கிழார் நேராக கிள்ளிவளவனிடம் செல்கிறார்...
கிழார் மனம் படும்பாடு.....மிகவும் வேதனைக்கு உள்ளானது...
நான் இருக்கும் காலத்திலா இதெல்லாம் நடக்க வேண்டும்...நாளைய சரித்திரம்
இப்படியா பேசவேண்டும்....என்று எண்ணி
கிள்ளியிடம். முறையிடுகிறார்....
அரசே......
ஒரு புறாவின் துயரத்தைப் போக்குவதற்காகத் தன்னுடைய தோலையே அறுத்துக்
கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியுடைய சோழ மரபில் வந்தவன் நீ,
புறாவுக்குமட்டுமல்ல, எல்லா உயிர்களின் துன்பங்களையும் நீக்குகின்றவன்
நீ,
பாவம் இந்தச் சிறுவர்கள் அரச குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் இவர்கள்,..
நன்கு படித்தவர்களும் அறிஞர்களும் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்
தாங்கள் விளைவித்த பொருள்களைப் பகிர்ந்து கொடுத்து மகிழ்கிற மரபு
அவர்களுடையது,
நேற்றுவரை பாதுகாப்பான, குளிர்ந்த நிழலில் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிர
ுந்த இந்தச் சிறுவர்கள், இப்போது உன்முன்னே கைதிகளாக நிற்கிறார்கள்.
சுற்றி நிற்கும் உன்னுடைய அவையினரைப் பார்த்துப் பயந்து அழுகிறார்கள்,
இவர்களைக் கொல்வதற்காக, நீ இந்த யானையைக் கொண்டுவந்திருக்கிறாய். ஆனால்
இந்தக் குழந்தைகளுக்கு அது புரியவில்லை. ‘ஐ! யானை!’ யானை என்று அழுகையை
மறந்து சிரிக்கிறார்கள்
...
மகிழ்கிறார்கள்.....
நன்றாக பார் இந்தஅப்பாவிப் பிள்ளைகளை நீ கொல்லத்தான் வேண்டுமா...
பெருமையும் வீரமும் கொண்ட உன் குலபெருமை இப்படியா அழிந்து போக வேண்டும்....
நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன், நீயும் கேட்டுக்கொண்டாய், இனிமேல் உனக்கு
எது சரி என்று படுகிறதோ அதைச் செய்...
ஆனால் இந்த பழி பாவத்திற்கு நான் ஆளாக மாட்டேன்....என்று அங்கிருந்து
வேகமாக நடையை போடுகிறார்....
இதற்கு மேலும் கிள்ளி அந்த குழந்தைகளுக்கு கொள்ளி வைத்திருப்பான் என
எண்ணுகிறீர்களா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக