செவ்வாய், 10 அக்டோபர், 2017

வணிகம் செழித்திருந்தது மகளிர் ஈடுபட்டனர்

மேகநாதன் முனுசாமி
தமிழர் வணிகத் திறன் அறிய இலக்கியங்கள் கைகொடுக்கின்றன. சங்க காலக்
கடைவீதிகளைக் காட்டும் மதுரைக்காஞ்சியும் தொடர்ந்து வரும் சிலப்பதிகாரப்
படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டின் வணிகச் செழிப்பை விளக்க வல்லன.
மதுரையின் பகல் அங்காடியும் அல்லங்காடியான இரவுக் கடைகளும் மலை, நிலம்,
நீரிடத்துப் பிறந்த பொருட்களால் நிறைந்திருந்தன. சிறு, பெரு வணிகர்கள் என
விற்பாரும் அவர்கள் கொண்டிருந்த பொருட்களை வாங்குவாரும் என அங்காடியின்
நான்கு தெருக்களிலும் கூட்டம் அலைமோதியது. மதுரைக் கடைவீதியின்
பெருஞ்சிறப்பே அங்கு
# மகளிரும்_கடை_வைத்து_வணிகம்_செய
்தமைதான் . ‘காழ் சாய்த்து நெhடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர் ஒள்ளிழை
மகளிர் பள்ளி அயர’ எனும் காஞ்சியடி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
தமிழ்ப் பெண்கள் வணிக ஈடுபாட்டுடன் இருந்தமை விளக்கும்.
# தமிழர்வணிகக்களம்
www.vanigarkalam.com
Facebook:தமிழர்வணிகக்களம்

பெண்ணுரிமை பொருளாதாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக