தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
ப"றை"யர் இசைக்குடி பதிவுகள் இலக்கு 50 ல் # பதிவு_32 ..
மூதின் முல்லை பதிவு 5 ல் இது 4...
+++++++
வாகை திணை மற்றும் மூதின் முல்லை விளக்கம்:
""பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம்
வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே;
வேந்துடன் றெறிந்த வேலே யென்னை
சாந்தா ரகல முளங்கழிந் தன்றே
உளங்கழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிறல்
ஓச்சினன் றுரந்த காலை மற்றவன்
புன்றலை மடப்பிடி நாணக்
குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே""" _புறம்_308,
++
திணை: வாகை.
துறை: முதின்முல்லை.
பாடியவர்: கோவூர்கிழார் பாடியது.
பொருள்:
சீறூர் மன்னன் ஒருவனுக்கும் பெருவேந்த னொருவனுக்கும் நடந்த போரொன்றைக்
கண்டார். சீறூர் மன்னன்
கோவூர்கிழார்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையனாதலோடு போர் புரிவதிலும்
பேராண்மை பெற்றவன்.
அவன் பெயர் தெரிந்திலது. அப்போரில் பெருவேந்தன் குன்றுபோ லுயர்ந்த
களிறொன்றின் மேலிருந்து போர் செய்யச் சீறூராரசன் நிலத்தில் நின்று
போரிட்டான்.
இருவரும் வேற்போர் பொருத காலையில், சீறூர் மன்னன் தன் வேலைச் சினந்
தெறிந்தான்; அது சென்று களிற்றின் நெற்றியிற் பாய்ந்து ஊடுருவியழுந்திற
்று. உடனே அவ் வேந்தன்
தன் வேலைச் சீறூர் மன்னன்மேல் எறிய, அஃது அவன் மார்பிற்பட்டுத்
தைத்தது.
அவன் அதனைத் தன் கையிலேந்திப் பெருவேந்தன் யானையை எறிந்தானாக, அவ்
யானைகள் அஞ்சிப் புறங் கொடுத்தோடின. இதனைக்
கண்டு மகிழ்ச்சி மிக்க கோவூர்கிழார் அச் சீறூர் மன்னனுடைய பாணனுக்கு
அவன் மனையோள் கூறம் கூற்றில் வைத்துக் கூறுவாராய் இப் பாட்டினனப்
பாடியுள்ளார்.
இந்த பாடலில் தொடக்கத்தில் மன்னனின் மனையாள் # பாணணை நோக்கி "பொற் கம்பியினை
யொத்த முறுக்கட்ஙகின் நரம்பினையும்
மின்னலைப்போலும் தோலினையும் வண்டிசைபோலும்
இசையினையுமுடைய சிறிய
யாழை இசைக்கும் புலமை நிறைந்த கேட்டார் நெஞ்சில் விருப்பம்
எழுவிக்கும் # பாணனே" என்பதால் மூதின் முல்லையில் வரும் பாணன் என்பான்
இசைக் கலைஞன் என்பதும்,
சில ஊரை ஏமாற்றி திரியும் மனுவாதிகள் கூறுவது போல் # மாவலி வம்சத்து
முதலில் வாணர் என்றும் பிற்காலத்து பாணர் என்று திரிந்து அழைக்கப்பெற்ற
அரச மரபினர் அல்லர் என்பதும் தெளிவு.
மேலும் இப்பாடல் மன்னனின் மனைவி மறத்தன்மையோடு கூறுதலால் மூதின் முல்லையாயிற்று.
++++
மூதின் முல்லை என்பதன் பொருள் மூத்த மறக்குடி & மறக்குடி பெண்டிர் என்பதே ஆகும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக