செவ்வாய், 10 அக்டோபர், 2017

பள்ளர் மக்கட்தொகை 3.75% bc sc mbc மூன்றிலும் உண்டு பட்டியல் வெளியேற்றம் ஏற்படுத்தும் மாற்றங்கள்

Rajasubramanian Sundaram Muthiah தனது அட்டைப் படத்தை புதுப்பித்துள்ளார்.
தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் பட்டியல் பிரிவிலிருந்து தேவேந்திரர்
வெளியேற வாழ்த்துக்கள்.
தேவேந்திரர் ஏழு பெயர்களில் மூன்று பட்டியல்களில் பிரிந்துள்ளனர். அவை கீழே
தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
காலாடி, சீர்மரபினர் (எண் 28)
இதில் பட்டியிலிடப்பட்ட சமூகங்கள் நான்கின் மக்கட்தொகையும் 2001
கணக்கெடுப்பில் 23,35,224 ஆகும். இது 2001 மக்கட்தொகையில் 3.75
விழுக்காடாகும். அதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் தேவேந்திரர்
இணையும் போது பட்டியலில் இருந்து வெளியேறும் 4 தேவேந்திரப்பிரிவுகளால்
மட்டும் 4 விழுக்காடு அதிக ஒதுக்கீடு மிகவும் பிற்படுத்தப்பட்ட
பட்டியலில் சேர்க்கப்படனும்
.
அதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் ஒதுக்கீடு 24
விழுக்காடாகவும் பட்டியல் ஒதுக்கீடு 15 விழுக்காடாகவும் மாறும்.
ஏற்கனவே பிற்படுத்தப்பட்ட சீர்மரபினரிலுள்ள மூன்று
தேவேந்திரப்பிரிவுகளின் அதிகாரப்பூர்வ மக்கட்தொகை இல்லை. ஆனால் தோராயமாக
2017ல் 50 லட்சங்களை ஏழு பிரிவினரையும் சேர்த்து தொட்டிருக்கலாம்.
அதனால் பட்டியல் வெளியேற்றத்தோடு அதற்கான விழுக்காட்டையும் தேவேந்திரர்
மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் அதிகரிக்க வாழ்த்துக்கள்.
- தென்காசி சுப்பிரமணியன்

எண்ணிக்கை இடவொதுக்கீடு மள்ளர் தேவேந்திரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக