செவ்வாய், 10 அக்டோபர், 2017

கோனார் தமிழ் உரை புத்தகம் உரிமையாளர் செட்டியார்

தங்கராசு நாகேந்திரன் கம்மாளன் , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
பள்ளி படிக்கிற காலத்திலே பாடப் புத்தகங்கள் வாங்கிய கையோடு அடுத்து உடன்
வாங்குவது கோனார் உரைதான்
புத்தகத்தை விட கோனார் உரை படித்துதான் தமிழறிவு வளர்ந்தது என்று
சொன்னாலும் அது மிகையாகாது
கோனார் உரை என்பது 1940 ல் பதிப்பாளர் திரு பழனியப்ப செட்டியாருக்கும்
திருச்சி புனித சூசை கல்லூரி தமிழ் பேராசிரியர் திரு ஐயம் பெருமாள்
கோனார் இடையே ஒரு புகைவண்டி பயணத்தில் முடிவு செய்யப்பட்டது
புத்தகத்திற்கு கோனார் உரை எனப் பெயரிட்ட பழனியப்ப செட்டியார் சென்னை
ராயப்பேட்டையில் கட்டிய மாளிகைக்கும் கோனார் மாளிகை என பெயரிட்டார்
அதே போல் ஐயம்பெருமாள் கோனார் தனது வீட்டிற்கு பழனியப்பன் இல்லம் என பெயரிட்டார்
இருவரின் ஒற்றுமை இன்றும் அவர்களது வாரிசுகள் வரை தொடர்ந்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக