செவ்வாய், 10 அக்டோபர், 2017

சன் டிவி குறுக்குவழி முன்னேற்றம் 1

சன் டிவி வரலாறு
சன் டிவி வரலாறு
கொஞ்சம் அத்தியாவசிய அரசியல்.....
சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய சன்குழுமம்
சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகப் புரிந்து விட்டது. சன்
தொலைக்காட்சிகுழுமத்தின் அசுரமான ஊடக பலம் கழகவளர்ச்சிக்கு
கைகொடுக்கும் என்பது கனவானது. அது கட்சியை கபளிகரம் செய்யத்துடிக்கிறது
என்பது நிருபணமாகிவிட்டது.
கருத்துகணிப்பு என்பதாக தினகரன் திணித்து வந்த கருத்தாக்கங்கள்,
தமிழ்நாட்டில் தயாநிதியை தனிப்பெரும் தலைமை சக்தியாக அடையாளப்படுத்த
எடுக்கப்பட்ட சூட்சும திட்டங்கள் என்பது சுளீரென உரைத்தது
கருணாநிதிக்கு!காலங் கடந்து இதை கண்டுணர்ந்தார் கருணாநிதி எனினும், 'தன்
காலம் முடிந்து போகும் முன்பே சுதாரித்து கொண்டார்தலைவர்' என்பது தான்
கழக உடன் பிறப்புகளிடம் மட்டுமல்ல குடும்ப உறவுகளிடமும் நிம்மதியை
உருவாக்கியது.
தமிழ் நாட்டிலிருந்து மத்திய அமைச்சர் ஆனவர்களில் சிறப்பாக செயல்படுபவர்
யார்? என்ற கருத்துகணிப்பில் தயாநிதிக்கு 66 மதிப்பெண்ணும்,
ப.சிதம்பரத்திற்கு 24மதிப்பெண்ணும் , அன்புமணிக்கு 2மதிப்பெண்ணும் தந்து,
கூட்டணிக்குள் குழப்பம் உண்டானாலும் பரவாயில்லை தம்பி தயாநிதியின்
தகுதியை முன் நிறுத்த வேண்டும் என்று கலகத்திற்கு தயாரானார் கலாநிதி.
தனக்குதானே கிரிடம் சூட்டிக்கொள்வது என்பது ரத்தவழியாக தாத்தா
கருணாநிதியிடம் கண்டுணர்ந்த பால பாடம் அல்லவா? .ஆக, இன்னும் கூட புரிந்து
கொள்ளதவர்களுக்கு இப்போதாவது உணர்த்த வேண்டாமா...? இன்னும் எத்தனை
காலம் தான் அன்புப் பிள்ளை ஸ்டாலினை தூக்கி, கக்கத்தில் இருத்தி, 'இவன்
தான் அடுத்தவாரிசு' என அறிவிக்க முடியாமல் அறிவுறுத்திக்
கொண்டிருப்பார்.
அவரோ பாவம் முப்பது வருட பயிற்சிக்குப்பின் கருணாநிதியின்
முழங்காலளவுக்குத்தான் வளர்ந்திருக்கிறார்.... ஆனால் மூன்றே ஆண்டுகளில்
தயாநிதி கருணாநியின் கழுத்திற்குமேல் வளர்ந்து விட்டார். இந்தியாவே
போற்றும்இளம் அமைச்சர் தமிழ்நாட்டிற்கு தலைமை தாங்கக் கூடாதா...? என்று
'கார்பரேட் தாதா' கலாநிதிபோட்ட அவசர கணக்கில் உருவான கருத்துகணிப்பு
எல்லாவற்றையும் அலங்கோலமாக்கிவிட்டது.
கருணாநிதியின் வாரிசாக மு.க ஸ்டாலினுக்கு 70 சதவிகிதமும் மு.க அழகிரி,
கனிமொழிக்கு தலா 2 சதவிகிதமும், மற்றவர்கள் என்பதாக 20சதவிகிதமும்
வழங்கப்பட்டிருந்த கருத்துகணிப்பில் அந்த மற்றவர்கள் என்ற பெயரில்
மறைந்து கொண்டிருப்பது தயாநிதிமாறன் என்பதை தயக்கமின்றி
புரிந்துகொண்டார்கருணாநிதி.
இந்தப்பின்ணணியில் தான் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு பத்திரிகைகளை
எரித்து, பஸ்களை உடைத்து செயல்படும் செய்தி காலை 9.30க்கே மணிக்கே
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபின்பும், காவல் துறைக்கு தலைமைதாங்கும்
அமைச்சரான அவர், காவல் துறையினருக்கு நிலைமைகளை கட்டுப்படுத்தும்
கட்டளைகளை பிறப்பிக்கவில்லை, பிறகு 11மணியளவில் தான் தினகரன் அலுவலகம்
தீயிட்டு கொளுத்தப்பட்டு, மூவர் மூச்சு திணறி இறந்தனர்.
கருணாநிதி உயிரோடு இருக்கும் போது அவரது அடுத்த வாரிசு குறித்த
விவாதத்தை 'தினகரன்' மக்களிடம் நடத்தியது. அவரது நீண்ட ஆயுளை வேண்டி
அவரது மனைவியும், துணைவியும் நித்தநித்தமும் பல பூஜை புனஸ்காரங்கள்,
யாகங்கள், வேள்விகள் நடத்தி கொண்டிருக்கும் சூழலில் குடும்பத்தினரிடம்
கோப உணர்வே மேலோங்கியது.
இந்த சூழலில் தான் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் கொண்டு
நர்த்தனமாடியதை அமைதியாக வேடிக்கை பார்த்தது காவல் துறை. மதுரையில்
கலவரம் ஆரம்பித்தவுடன் முதல்வர் கருணாநிதி அழகிரியை தொடர்பு கொண்டு
பேசினார் என்றும் பத்திரிக்கைகளில் செய்தி அடிப்பட்டது இதற்கு பிறகு தான்
மீண்டும் தினகரன் அலுவலகத்திற்கு திரும்பிய தி.மு.க வினர் தீவைத்தனர்.
கலவரம் திசை மாறி போனது. ஆக காவல் துறையினரிடமும், அழகிரியிடமும்
முதல்வர் தொடர்பு கொண்டபிறகே விபரிதங்கள் நடந்தேறின.
இதனால் தான் அவ்வளவு அத்துமீறல்களுக்குபிறகும் அவமானப்பட ஏதுமின்றி
அழகிரியை சிறப்புபாதுகாப்புடன் சென்னைக்கு வரவழைத்ததும், முதல்நாள்
பிரதமர் நிகழ்ச்சியில் பிரதானமாக முன் வரிசையில் அமரவைத்ததும், அடுத்த
நாள் சட்டமன்றத்திற்குள்ளேயே, அழகிரி சகஜமாக வந்து சென்றதும்,
நடைப்பட்டுகொண்டிருப்பது சன், தினகரன் குழுமத்திற்கும், அழகிரிக்குமான
பிரச்சினையல்ல. இது கட்சிதலைவரான கருணாநிதிக்கும், ஊடக செல்வாக்கில்
ஓங்கிநிற்கும் சன், தினகரன் குடும்பத்திற்குமான பிரச்சினை என்பதே
பிரதியட்ச உண்மையாக வெளிப்பட்டது.
கருணாநிதியின் கசப்புணர்வை புரிந்து கொள்ள வேண்டுமெனில் மாறன்
குடும்பத்தின் பின்னணி, சன், தினகரன் குடும்பத்தின் அசுர பலத்திற்கு
அச்சாணியாக விளங்கிய கருணாநிதியின் அரசியல் பலம் போன்றவைகளை
பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நியாயங்களை புரிந்து கொள்ளலாம்.
*மணம் வீசாத பூமாலை*
1989-ஆம் ஆண்டு- 13வருட வனவாசத்திற்கு பிறகு மீண்டும் தி.மு.க அரியனை
ஏறிய- அந்தகாலக்கட்டத்தில் தான் 'பூமாலை' என்ற வீடியோ இதழை விற்பனைக்கு
கொண்டுவந்தனர் மாறன் சகோதரர்கள். இதற்கு முன்பு ஏக்நாத் என்பவரின்
திரைபட செய்திகளை கூறும் வீடியோ இதழ் ஒன்று விற்பனையில் இருந்தது.
பூமாலை இதழுக்கென்று புதிதாக யாரையும் வேலைக்கு அமர்த்தாமல் குங்குமம்,
முத்தாரம், வண்ணத்திரையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்களையே
சம்பளமில்லாத செய்தியாளர்களாக, பேட்டியாளர்களாக பயன்படுத்திக்கொண்டனர்
மாறன் சகோதரர்கள்.
வீடியோ கடைகள் மற்றும் நூலகங்களின் வாயிலாக விற்பனைக்கு கொண்டு
செல்லப்பட்ட இந்த வீடியோ இதழை விரும்பி பார்க்க ஆளில்லை. ஆனால் ஆட்சி
அதிகாரம் தி.மு.க வசமிருந்த காரணத்தால் விற்க மறுத்த வீடியோ
நூலகத்தினர், 'வில்லங்கத்தில் மாட்டநேரிடும், ரெய்டு நடத்தி ஆபாச
கேசட்டுகள் இருந்ததாக வழக்குப்போட்டு லைசென்ஸ் ரத்தாகக் கூடும் ' என
எச்சரிக்கப்பட்ட சம்பவங்களெல்லாம் நடந்தேறியது.
1991ல் கருணாநிதி அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மாறன்
சகோதரர்கள் மௌனமானர்கள். மணம்வீசாத, யாரும் விரும்பிச்சூடாத இந்த
பூமாலை பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையாக, மண்ணோடு மண்ணானது.
காமாலைப்போல் கண்களை உறுத்திய - கலைநேர்த்தியற்ற- பூமாலை இதழ்
உதிர்ந்தது கண்டு உள்ளப்படியே உள்ளம் மகிழ்ந்தனர் வீடியோ
கடைக்காரர்கள்.அதன் பிறகு ஈராண்டுக்காலம் இருக்கும் இடம் தெரியாமல்,
செய்யக்கூடியத்தொழில் இன்னதென்று தெளிவில்லாமல் மாறன் சகோதரர்கள்
சும்மயிருந்தனர்.
*சன் தொலைக்காட்சியின் தொடக்கம்*
அக்டோபர் 1992ல் ஜூ தொலைக்காட்சி (Zee Tv) இந்திய தனியார் சேட்டிலைட்
தொலைக்காட்சிகளின் முன்னோடியாக களத்திற்கு வந்தது. அது முதல் மாறன்
சகோதரர்கள் தாங்களும் அதுபோல் தனியார் தொலைக்காட்சி ஆரம்பிக்க
வேண்டுமென தந்தையை நச்சரிக்க தொடங்கினர்.
பத்திரிக்கையாளர் சசிகுமார் மேனன் என்பவர்தான் முதன் முதலில் தனியார்
சேட்டிலைட் சேனல் பற்றிய அறிமுகத்தை முரசொலிமாறனுக்கு சொன்னவர். அவர்
அரபு நாடுகளில் வாழும் மலையாளிகளுக்காக தினசரி நான்கு மணி நேரம்
நிகழ்ச்சி தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றார் அதில் சுமார் அரை
மணிநேரம் தமிழ் நிகழ்ச்சிகளை தயாரித்து தாருங்கள்' என மாறன் சகோதரர்களை
அணுகினார். அப்போது அவரிடம்,'எப்படி இந்த வாய்ப்பு உங்களுக்கு
கிடைத்தது' என தோண்டித்துருவி விசாரித்த முரசொலி மாறன் அவரிமிருந்து
பெற்ற தகவல்களைக் கொண்டு, சசிகுமார் மேனனுக்கே தெரியாமல் அவரை முந்தி
சென்று, சம்பந்தபட்டவர்களிடம் பேசி நேரடி வாய்ப்பை உருவாக்கிக்
கொண்டார்.
சசிகுமார் மேனன் 'ஏசியானெட்' என்ற மலையாளச் சேனலை ஆரம்பித்த அதே
நேரத்தில் தான் - ஏப்ரல் 1993ல் -சன் தொலைக்காட்சியை தமிழகத்தில்
தோற்றுவித்தார் முரசொலி மாறன். அப்போது மாதமாதம் சேட்டிலைட்
ஒளிப்பரப்பிற்காக செலுத்த வேண்டிய பணம் ஒரு பெரும் சுமையாக இருந்தது.
எனவே மாறன் மாற்று வழிகளை ஆராய்ந்தார்.
'சன்' சேனலை நடத்த பெரும் பணம் தேவைப்பட்டநிலையில், அதற்காக இந்தியன்
வங்கியை அணுகியபோது இணக்கமான பதில் கிடைக்கவில்லை இதனால் கட்சி சொத்தை
-ஆயிரமாயிரம் உடன் பிறப்புகள் திரட்டி தந்த நிதியை- மந்தை வெளியிலுள்ள
கும்பகோணம் சிட்டி யீனியன் வங்கியில் போட்டு, பெரியதொரு நிதி உதவி
வங்கியிடமிருந்து வாங்கப்பட்டது .
1967 தொடங்கி தொடர்ந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும், அடுத்து
வி.பி.சிங் ஆட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாகவுமிருந்த
முரசொலிமாறன், தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை
நிறைவேற்றித்தந்து நெருக்கமாக உறவுகொண்டிருந்தார். மேக்னம் டாட்டியா
என்ற தொழிலதிபர் பல ரிசார்டுகளை நடத்திவந்தார். அவருக்கு உலகின்
பெரும்செல்வந்தரான புருனே சுல்தான் ரஷ்ஷிய சேட்டிலைட் காரிஜான்டரின்
டிரான்ஸ்பான்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார். அதை எப்படி பயன்
படுத்துவதென யோசித்து கொண்டிருந்த டாட்டியாவிடம், முரசொலிமாறன் தனக்கு
தரும்படி கேட்க, அவரும் தந்துவிட்டார். இப்படியாக கிடைத்த சேட்டிலைட்
ஒளிப்பரப்பு உதவியுடன் தான் மாறன் சகோதரர்கள் சன் தொலைக்காட்சி
ஒளிபரப்பை சங்கடமின்றி சமாளித்தனர். முரசொலி வளாகத்தில் இயங்கிய
சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகளே சன் தொலைகாட்சிக்கும்
பொறுப்பேற்றனர். அதன்படி சன் தொலைக்காட்சியை முரசொலிமாறனை
சேர்மனாகவும், மல்லிகா மாறன் மற்றும் தயாளு அம்மாளை இயக்குநர்களாகவும்
கொண்டு ஆரம்பித்தனர். மேலும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன்,
மு.க.ஸ்டாலின் போன்றோர் பங்குதாரர்களாகப்பட்டனர். அப்போது
கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்திலேயே சன்தொலைகாட்சி செயல்பட்டது.
குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் பத்திரிகையாளர்கள் சிலரையே கூடுதலாக
500 ரூபாய் சம்பளம் தந்து சன் தொலைக்காட்சிக்கு பணிபுரியும் படி
கட்டாயப்படுத்தினர்.
*பிரகாசிக்கமுடியாத 'சன்*'
நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சன் தொலைக்காட்சியை நிமிர்ந்தும் பார்க்காத-
விளம்பரத்தாரர்கள் பொருட்ப்டுத்தாத- அந்த நேரம் தூர்தர்ஷன் மட்டுமே
தூள்கிளப்பிக் கொண்டிருந்தது.மாறன் சகோதர்களுக்கு படைப்பற்றல்
கிடையாது. நிர்வாகத் திறமையும் இல்லை. பார்வையாளர்களை கவரமுடியவில்லை
எவ்வளவோ அனுகூலங்கள் அமைந்தும் முதலிரண்டு ஆண்டுகள் மூச்சுத் திணறி
நஷ்டப்பட்டது சன் தொலைக்காட்சி.
*அதிகாரத்தால் அமைந்த வளர்ச்சி*
மீண்டும் 1996-ல் கருணாநிதி ஆட்சிக்குவந்தார். உதயசூரியனின் அதிகாரச்
சுடர் சன் தொலைக்காட்சியின் சாம்ராஜ்ஜியத்திற்கு வழிகோலியது. அப்போதைய
தூர்தர்ஷன் இயக்குநராயிருந்த நடராஜன் கருணாநிதிக்கு உதவியாக பல
கைங்கரியங்களைச் செய்து அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவலத்திற்கு
ஆளாக்கினார். மத்திய அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு மாறன் மகன்களுக்கு
மதியூகியாகச் செயல்பட்டார்.
அப்போது ஒவ்வொரு பண்டிகை நாளிலும் தூர்தர்ஷன் ஒளிபரப்பில் சிக்கல்
வரும். பார்வையாளர்கள் வீட்டிலிருந்தபடியே தொலைப்பேசி வழியாக
பங்கேற்கும் பல பிரபலநிகழ்ச்சிகளின் போது தொலைப்பேசி வயர்கள்
துண்டிக்கப்படும். இப்படியாக சன் தொலைக்காட்சி பக்கம் மக்களை திருப்ப பல
சதிதிட்டங்கள் அரங்கேறின. தூர்தர்ஷன் விளம்பரதாரர்களுக்கு தூண்டில்
விரிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரமும் பல அனுகூலங்களை தந்தது. மத்தியில்
வாஜ்பாய் அமைச்சரவையில் மாறனுக்கு தொழில், வர்த்தகத் துறை கிடைத்ததும்
சன் தொலைக்காட்சிக்கு யோகம் அடித்தது. அப்பாவின் அதிகாரப் பலத்தால்
மிகப்பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் சரசரவென வந்தது.
சன் தொலைக்காட்சிக்கு! மளமளவென்று வெவ்வெறு மொழிகளில் சேனல்களைத்
துவங்கினர். 2000ஆவது ஆண்டில் தி.மு,க ஆட்சியிலிருக்கும் போது,
'சுமங்கலி கேபிள் விஷன்' என்ற கேபிள் நெட்வொர்க் தொழிலை தயாநிதிமாறன்
ஆரம்பித்தார். அது நாள் வரை சென்னையில் கேபிள் நெட்வொர்க்கின்
60சதவிகித்தை 'ஹாத்வே' என்ற வட இந்திய நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது.
40சதவிகிதம் ஆங்காங்கே சிறிய கேபிள் உரிமையாளர்கள் வசமிருந்தது.
தயாநிதிமாறன் தடாலடியாக சென்னைகேபிள் ஆபரேட்டர்களை அழைத்து சொந்த
முயற்சிகளை, ஒளிபரப்புகளை அப்படியே கைவிட்டு, சுமங்கலி கேபிள் விஷனின்
கமிஷன் ஏஜென்டாகும் படி நிர்பந்தித்தார். மறுத்த கேபிள் ஆபரேட்ட்ர்கள்
மிரட்டப்பட்டனர். சென்னை மாநகராட்சி ஸ்டாலின் வசமிருந்த காரணத்தால்
கேபிள் ஆபரேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தந்த தொல்லைகள் அவர்களை
மண்டியிடச் செய்தன மாறன் சகோதரர்களிடம்!
'ஹாத்வே'யின்கேபிள் ஒயர்கள் ஆங்காங்கே அறுத்தெறியப் பட்டன. இந்நிறுவனம்
பைபர் கேபிள் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு பலமான ஏற்பாடுகள் செய்துவிட்ட
நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்தது. மறுபுறம் தயாநிதி தந்த
நெருக்கடிகளால் ஹாத்வேயின் கீழ் இருந்த கேபிள் ஆபரேட்டர்களில்
90சதவிகிதத்தினர் எஸ்.சி.வி வசம் மாறினர்.
*இந்தியாவில் வேறெங்கும் இல்லை*
இந்தியாவில் மும்பை, டெல்லி, ஹைதராபாத், கல்கத்தா உள்ளிட்ட எந்த
நகரத்திலுமே இதுபோல் ஒட்டுமொத்த கேபிள் ஆபரேட்டர்களும் ஓரே குடையின்
கீழ் சென்றதில்லை. குறைந்தது மூன்று,நான்கு நிறுவனங்களாவது ஒவ்வொரு
நகரத்திலும் செயல்பட்டன. ஆனால் தனது அதிகாரபலத்தால் போட்டியாளர்களை
அழித்தொழிக்கும் வேலையை அசராமல் செய்தது சன் குழுமம்.
தமிழகத்தின் பிரதான நகரங்கள் அனைத்திலும் இன்று எஸ்.சி.வியை எதிர்க்கவே
ஆளில்லை . இதனால் தான் தமிழன் தொலைக்காட்சி, விண்தொலைக்காட்சி,
தினத்தந்தியின் ஏ.எம்.என். நியூஸ் சேனல் உள்ளிட்ட தமிழ் சேனல்கள்
தரக்குறைவான அலைவரிசைகளில் ஒளிப்பரப்பட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக