செவ்வாய், 10 அக்டோபர், 2017

காவிரி நடுவர் மன்றம் இழுத்தடிப்பு பாஜக நடுவணரசு மெத்தனம்

ஒரு வருடம் ஆகிவிட்டது.
ஒரு முன்னேற்றமும் இல்லை....

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி..
சட்டப்பூர்வமாக போராடினால் இதுதான் நிலைமை என்றால், நீதிமன்றத்தின் மேல்
குடிமக்கள் நம்பிக்கை இழந்து போவார்கள்... ஏற்கனவே பொதுமக்களுக்கு
நம்பிக்கை போய்விட்டது. நீதிமன்றங்களுடன் தொடர்பில் இருக்கும் ஒரு
சிலருக்கு மட்டுமே நம்பிக்கை இருக்கிறது...
-----------------------------------------------------------------------
.
#அக்டோபர்_3_2016
.
"காவேரி மேலாண்மை வாரியத்தை" அமைக்கும் தைரியம் இந்திய மத்திய அரசுக்கோ,
இந்தியாவின் எந்தவொரு பிரதமருக்கோ கிடையாது என்பது ஏற்கனவே பலமுறை சொன்ன
விசயம்  தான்...

மூன்று நாட்களுக்குள் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று
இந்திய உச்ச நீதிமன்றம் #செப்டம்பர்_30_2016 அன்று  ஆணை பிறப்பித்தபோது,
ஊளு ஊளுன்னு பூம்பூம் மாடு மாதிரி இந்திய அட்டார்னி ஜெனரல்
தலையாட்டினார்.

அவருக்கு ஒத்து ஊதுவது போல "காவேரி மேலாண்மை வாரியம்" அமைப்பதற்கான
வேலைகளை மத்திய அரசு தொடங்கி விட்டதாக இந்திய நீர் வளத்துறை செயலாளர் சசி
சேகரும் அன்றே அறிவித்தார்....

இப்ப, திடீர்னு தூக்கத்தில இருந்து முழித்துக்கொண்ட இந்திய அட்டானி
ஜெனரல் (அட்டானி புழுகல்?), அரசியல் சாசனப் பிரிவு 262ன்படி இப்படி ஒரு
வழக்கை விசாரிக்க, உத்தரவு போட இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம்
இல்லை என்று வாதிட்டார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அவரை எல்கேஜி பையனை விட கேவலமான கேள்விகள் கேட்டு
வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்... அது மட்டும் இல்லாம, கர்நாடக மாநில
வழக்கறிஞரையும் மானங்கெட்ட கேள்விகள் கேட்டு வீட்டுக்கு அனுப்பி
இருக்கிறார்....

இந்திய அட்டார்னி ஜெனரலுக்கு இந்திய அரசியல் சாசனத்தில் பிரிவுகள் 141 to
145 ன்னு சில இருப்பது மறந்துருச்சு போல....

நாளை, 04 -10 - 2016 மதியம் 2 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி
மிஸ்ரா உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்....

ஏற்கனவே சொன்னது போல,
இந்தியா ஒரு இறையாண்மை உள்ள நாடா, அல்லது வெத்துவேட்டா என்பது இன்னும்
சில நாட்களில் தெரிந்துவிடும்.....

All the best இந்தியா....

http://m.thehindu.com/news/national/centre-seeks-modification-of-sc-order-to-set-up-cauvery-water-management-board/article9179481.ece

http://www.deccanchronicle.com/nation/current-affairs/300916/process-to-set-up-cauvery-management-board-has-begun.html

https://m.facebook.com/story.php?story_fbid=354889978285313&id=100012929417392

காவேரி வேளாண்மை விவசாயம் ஹிந்தியா மத்திய அரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக