செவ்வாய், 10 அக்டோபர், 2017

கோசர் குடகு துளு திருநெல்வேலி வாழ்ந்தனர் 2

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
# செங்குந்தர்_கைகோளர் ..
# பதிவு_2 கோசர் யார்(பாவாணர் கட்டுரை),
கடைக்கழகக் காலத்தில், முத்தமிழ்நாட்டி
லும் ஆங்காங்கிருந்த குறுநில மன்னர் தத்தம் வலிமிக்க காலத்து, தத்தம்
வேந்தர் தலைமை யினின்று திறம்பியதொடு அவர் நாட்டையும் கைப்பற்றினர்
என்பதற்கு.
"வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி
நிலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி"
----(அகம். 205)
'தித்தன் உறந்தை"
---(அகம். 122)
என்பன சான்றாம்.
இம் முறையே, கொங்கும் துளுவும் கோசர் வயிற்பட் டிருத்தல் வேண்டும்.
இளங்கோவடிகள் "குடகக் கொங்கர்" என வரந்தருகாதையிற் குறித்தது, ஒருகால்,
குடகு நாட்டுக் கோசரை நோக்கியதா யிருக்கலாம்.
துளுவும், குடகும் ஒரு காலத்தில் குடகொங்குப் பகுதிகளாக விருந்தன.
"குடகக் கொங்கர்" என்று இளங்கோவடிகளும் கூறுதல் காண்க.
திருநெல்வேலி மாவட்டக் கல்லிடைக்குறிச்சித் திருமால் கோவி லுக்குக்
கோசர்குடி பெருமாள் கோவில் என்று பெயர். அதே மாவட்டத்துக் கழுகுமலையில்
ஒரு தெருவிற்குக் கோசர்க் குடித் தெரு என்று பெயர்.
கோசருட் பெருந்தமிழ்ப் பாவலரான நல்லிசைப் புலவரும் இருந்தனர் என்பதை,
"செல்லூர்க்கோசனார்" (அகம். 66).
"கருவூர்க் கோசனார்" (நற்றிணை, 214)
என்னும் பெயர்கள் காட்டும்.
இவையெல்லாம், கோசர் தமிழ்நாட்டிற் கொங்கில் மட்டுமன்றி எங்கும் வதிந்தவர்
என்றும், அவர் தமிழரே என்றும், தெரிவிக்கும்.
# வேத_ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன் நாவலந்தேய முழுவதும் தமிழரும்
அவர் இனத்தாரான திரவிடருமே பரவியிருந்ததினால், அகத்தியர் (காசுமீரத்)
துவராவதியினின்று பதினெண்குடி வேளிரைத் தென்னாடு கொண்டுவந்தனரென்பதும்,
காசுமீர நாட்டு வரலாறு கூறும் இராசதரங் கணியில் அந் நாட்டார் கோசம்
என்னும் ஒரு சூள்முறையைக் கையாண்டமை கூறப்பட்டிருப்பதும், கோசநாடு எனப்
பெயரிய சுனைத்தடம் காசுமீர நாட்டிலுண்மையும், உதயணன் தாய் சிவனடியார்
அறுபத்துமூவருள் ஒருவரான பேர்கோன் கலிக்காம நாயனாரின் குலமாயிருந்ததும்,
கோசர் வடநாட்டினின்று வந்தவர் எனக் காட்டும் சான்றாகாது.
( -----------தொடரும்-------------)
பதிவு 10 இலக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக