செவ்வாய், 10 அக்டோபர், 2017

தமிழர் வணிகம் ஈராக் நிப்பூர் சான்று களிமண் தட்டு தொடர்பு கடல்

மேகநாதன் முனுசாமி
கடல் கடந்த வணிகம்
இயேசு பிறப்பதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் மேற்குத்
திசையில் பபிலோனியா, எகிப்து, பாலஸ்தினியம், மெசபத்தோமியா, உரோமாபுரி,
கிரேக்கம் போன்ற நாடுகளுடனும், கிழக்கே சீனம் சாவகம், ஜாவா
போன்றவற்றுடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்திருக
்கின்றனர்.
ஏலம், இலவங்கம், மிளகு போன்ற தமிழகத்துப் பொருட்கள் பிற நாடுகளில் பெரும்
விலைக்கு வாங்கப்பட்டன. கி.மு.1490இல் யூதர்களின் தலைவராகிய மோஈசன் தமது
வழிபாட்டின் போது ஏலக்காயைப் பயன்படுத்தியிருக்கின்றார்.
மேற்காசிய நாடுகளான பபிலோனியா, மெசப்பத்தோமியா போற்றவற்றோடு தமிழர்
நெருக்கமான வணிகத் தொடர்புகளை வைத்திருந்தமைக்கான சான்றுகள் ஏராளமாகக்
கிடைத்துள்ளன. பபிலோனியாவில் நிப்பூர் இடத்தில் நாணயம் பரிமாறப்பட்டு
வணிகம் நடந்நதாகவும், களிமண் தட்டுகளில் வரவு செலவுக் கணக்குகள்
பதியப்பட்டிருந்
தததாகவும், அதில் தமிழ் வணிகக் கணக்குகளும் இடம் பெற்றிருப்பதாகவும்
முனைவர் அ. தட்சணாமூர்த்தி குறிப்பிடுகிகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக