செவ்வாய், 10 அக்டோபர், 2017

கருப்பையாறு கேரளா விற்கு கொடுக்கிறோம் நெய்யாறு வருவதில்லை விளவங்கோடு விவசாயம் பொய்த்தது மலையாளி இனவெறி

Vel Murugan, 8 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Ammandivilai இல்
Gabriel Raja மற்றும் 10 பேருடன் சூடாக உணர்கிறார்.
தமிழன் இழந்த தென்னக நீர் உரிமையின் திசைவழி ஆய்வுப் பயணம் :
தமிழகத்தின் தென்னெல்லைப்போர
ாட்டத்தின் இறுதி முடிவு நிலவளவுகளில் முடிவுற்றாலும் அதையொட்டிய
வடிகாலின் பிசிறுகள் பலநிலைகளில் மீட்டெடுக்கயியல
ா தேக்கநிலையிலேயே நிலைகொண்டுள்ளது.
குமரிமாவட்டத்தின் கடையாலுமூடு பஞ்சாயத்திற்குட்பட்ட மலைப்பகுதி
பத்துகாணி. இது உலக பாரம்பரிய சின்னமான மேற்குத்தொடர்ச்சி மலையின்
வால்பகுதி. நிலவடிவமைப்பில் மலைமுகடுகளும், பெரும் பள்ளங்களும் கொண்ட
வனப்பகுதி. பத்துக்காணி மலைப்பகுதியிலிருந்து பல நீர்க்கசிவுகள்
ஒன்றிணைந்து பல சிற்றோடைகளாக உருவெடுத்து 'அணைமுகம்' என்கிற பகுதியில்
கருப்பையாறு எனும் ஆறாக உருப்பெறுகிறது.
தமிழகத்தின் கருப்பையாறு, நிலவடிவமைப்பின் அடிப்படையில் தெற்கு மற்றும்
மேற்கு நோக்கிப் பயணித்து கேரளத்தின் நெய்யாறு அணையின் நீர்பிடிப்புப்
பகுதிக்கு வந்து சேர்கிறது.
நம்மண்ணில் உற்பத்தியாகிப் பாயும் ஆற்று நீரின் உரிமையடிப்படையில்
கேரளத்தின் நெய்யாறு அணையின் பாசனப்பகுதி இரண்டாக வகுக்கப்பட்டு 1963 ஆம்
ஆண்டு இடதுகரை சானல் எனப்படும் வாய்க்கால் வழியாக குமரிமாவட்டத்திற்கும்,
வலதுகரை சானல் எனப்படும் வாய்க்கால் வழியாக கேரளாவிற்கும் நீர்பாசனம்
ஒப்பளிப்பு செய்திடப்பட்டு 1964 ஆம் ஆண்டு இடதுகரை சானல் அப்போதய தமிழக
முதல்வர் காமராஜரால் திறந்துவைக்கப்ப
ட்டது. இதனால் குமரிமாவட்டத்தின் விளவங்கோடு தாலுகா விவசாயத்தில்
தன்னிறைவு பெற்றது.
2003 ஆம் ஆண்டுவரையில் சுணக்கமின்றி 182 கனஅடி நீர்பெற்றுவந்த நமது உரிமை
2003 ஆம் ஆண்டைய கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணியின் தன்னரசியலால்
தடைபெற்றது. இன்றுவரையில் மீட்டெடுக்க இயலாது விளவங்கோடு தாலுகாவின்
விவசாயம், நீராதாரங்கள் பொய்த்துப்போய்விட்டது. நெய்யாறு அணையின்
நீரென்பது ஒரு பன்மாநில நதியின் சேர்க்கையென்று கேரள அரசு 1958 - ல்
வெளியிட்ட 'கேரளாவில் நீர் ஆதாரங்கள்' என்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
ஆனாலும் நமது உரிமையான நீரினை நமக்கு அளிக்காமல் கேரள அரசு தொடர்ந்து
சண்டித்தனம் செய்துவருகிறது.
நாமும், 20% க்கும் அதிகமாக நமது ஆற்று நீரை கேரள அணைக்களித்துவிட்டு
கைகட்டி தவிப்புடன் வேடிக்கை பார்த்து வருவது பெரும் சோகமே !
நேற்றைய கருப்பையாறு ஆய்வுப் பயணத்தில் ... பல சிற்றோடைகளும் ...
அணைமுகத்தில் உள்ள பாலத்தின் வழியாக கருப்பையாறும் புகைப்படங்களாக !
12 மணிகள் · Kanyakumari, Kerala ·

அணை நதிநீர் எல்லை மண்மீட்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக