செவ்வாய், 10 அக்டோபர், 2017

புலையர் ஈமச்சடங்கு பார்ப்பனர் புலமாடன் தென்புலத்தார் வழிபாடு குலதெய்வம் வெள்ளாளர் படி அளத்தல் சுடலைமாடன்

Rajasubramanian Sundaram Muthiah
ஈமச்சடங்கை செய்யும் புலையர் தாழ்ந்த சாதி.
அதையே பிராமணன் தர்ப்பணம் என்ற பெயரில் செஞ்சா ஒசந்த சாதியாம்.
எப்டியோ போங்க. புலையர்களை எல்லாம் மனநோயாளிகளா காமிச்சாச்சு. புலையர்
வளர்ப்பில் பிராமணன் வளர்ந்தாலும் அவர்களை ருத்ர வீணை கலைஞர்களாக
மாத்தியாச்சு. அதாவது பிராமணன் எங்க வளந்தாலும் பிராமணத்தன்மையோடு
இருப்பான் என வர்ணாசிரம தம்மத்தை நிலை நிறுத்தியாச்சு.
அப்புறம் என்ன? மின்சார சுடுகாட்டுல பிணத்த எரிச்சோமா அந்த சாம்பலை கடல்ல
கரைச்சோமா ஆண்டு தோறும் பிராமணனுக்கு காசு அழுதோமா முகநூலில் நினைவஞ்சலி
செலுத்துனோமானு இருக்கனும்.
------------
புலையர் என்னும் தமிழ்ப்பார்ப்பார்
https://m.facebook.com/Koorngotavar/photos/
a.271670679677938.1073741836.183454535166220/
978546962323636/?type=3&source=54
தமிழர்களின் குலதெய்வம் புலமாடன் ஒரு புலையர்
https://m.facebook.com/story.php?story_
fbid=1843885162563578&id=1725773541041408

கூர்ங்கோட்டவர்
நமது மரபு என்பது நாம் இன்று நகர்புறங்களில் வாழும் வாழ்க்கை முறை போல்
அல்லாது எதிர்பார்க்காத விதமாக பண்டைய பண்பாட்டு தாக்கத்தோடு சீறூர்களில்
இன்னும் நிலைத்து இருக்கும். அதை தேடி கண்டறியனும். நான் நாலாண்டுகளுக்கு
முன் என் முன்னோரை தேடி பழனி சென்ற போது அனைத்து தமிழ்க்குடிகளுக்குமே
இறப்புச்சடங்கை ஆண்டுதோறும் செய்து வரும் ஒரு தமிழ் பார்ப்பார்
குடியையும் (பிராமணர் அல்ல) கண்டு கொண்டேன். ஆனால் அந்த தென்புலத்தார்
கடனை தீர்த்து வைக்கும் அந்த தமிழ் பார்ப்பாரின் நிலையோ இன்று வரலாறு
இழந்து கிடக்கிறது. பிராமணர்கள் அந்த தமிழ் பார்ப்பார் வகுப்பு செய்து
வந்த தென்புலத்தார் கடன் தீர்க்கும் நெறி பழக்கத்தை அவர்களிடம் இருந்து
தர்ப்பணம் என்ற பெயரில் பறித்ததோடு அல்லாமல் அவர்களை இழி பிறப்பினனாக
திரித்து அடையாளப்படுத்தி அவர்கள் பார்ப்பார் என்ற வரலாற்றையே
அழித்துவிட்டனர்.
தென்புலத்தார் கடனை தீர்த்து வைக்கும் அந்த தமிழ்ப்பார்ப்பார் குடிக்கு
படியளப்பது (பார்ப்பனப்பணிக்காக நெல்லை பண்டமாற்றும் தற்சார்பு வாழ்வு
முறை. இங்கு பணப்பரிமாற்றம் இல்லை என்பதை கவனிக்கவும்.) இன்றும் இருந்து
வருகிறது. இன்று கார்காத்தார் குழு எரிக்கும் வழக்கத்துக்கு
நகர்புறங்களில் மாறிவிட்டாலும் தமிழ் பார்ப்பாருக்கு படியளப்பதை
கைவிடவில்லை. இதே போல் தான் அனைத்து தமிழ்க்குலங்களிலும் ஏதாவது ஒரு
பிணைப்பு அந்த தமிழ்ப்பார்ப்பார் குடியோடு இன்றும் இருக்கும். நான் என்
முன்னோரை தேடி சென்ற போது கிடைத்த தகவல் இது என்பதால் தான் என் குடியின்
வழக்கத்தை ஆவணப்படுத்திய நூலை மட்டும் இங்கு இணைத்திருக்கிறேன்.
ஆன்டுதோறும் நம்முன்னோருக்கு பெருஞ்சோற்றுப்படையலிட்டு கிடாவெட்டி
தென்புலத்தார் கடனை நினைவுக்கூர்ந்த அந்த தமிழ்ப்பார்ப்பார் வகுப்பு
யார்? '''புல'''மாடன் என்று தென்தமிழகம் முழுதும் வழிபடப்படும் அந்த
தமிழ்ப்பார்ப்பனர் யார்? சங்ககாலம் தொட்டு அனைத்து தமிழ்க்குடிகளுக்கும்
தென்புலத்தார் கடனை தீர்த்து வைத்த அந்த குடியின் பெயரென்ன? ஆன்டுதோறும்
பெருஞ்சோற்றுப்படையலிட்டு கிடாவெட்டி தென்புலத்தார் கடனை நினைவுக்கூர்ந்த
அந்த புலைநெறி கண்ட பார்ப்பனக்குழுவை தங்கள் தர்ப்பண வருவாயை
பெறுக்குவதற்காக இழிபிறப்பாளர் என்று சங்க இலக்கியங்கள் சொல்வதாக
திரித்து எழுதிய வரலாற்றுப்பெரும் புரட்டன் யார்? அதை கண்டறிந்து
விழித்துக்கொள்ளுங்கள். மொழிப்புலமை என்னும் முகமூடியை கொண்டே
தமிழர்களின் இனவுணர்வை மழுங்கடித்துவிட்டான் அந்த வரலாற்றுப்பெரும்
புரட்டன்.
தமிழர்களே. உங்கள் முன்னோர்கள் அனைவருமே புதைக்கும் நடுகல் பழக்கத்தையே
பண்டைய காலங்களில் மேற்கொண்டனர். உங்கள் பாட்டனிடம் கேட்டுப்பாருங்கள்.
உங்கள் முன்னோர்களை யாரையாவது புதைத்த வழக்கமுண்டா என்று. நிச்சயமாக ஒரு
சில முன்னோர்களையாவது புதைத்ததாக சொல்வார். புதைத்த போது ஆண்டுதோறும்
அந்த பதுக்கை மீது முன்னோர் கடன் செய்யும் குடி யாரென கேளுங்கள். நீங்கள்
அந்த தமிழ்ப்பார்ப்பார் வகுப்பை அடையாளம் காணலாம். மீண்டும் ஆண்டுதோறும்
பெருஞ்சோற்றுப்ப
டையலிட்டு கிடாவெட்டி தென்புலத்தார் கடனை நினைவுக்கூர்ந்த அந்த புலைநெறி
கண்ட பார்ப்பனக்குழுவ
ை இனிவரும் சாவுகளில் மீட்டெடுங்கள். ஆண்டுதோறும் உங்கள் முன்னோருக்கு
பெருஞ்சோற்றுப்படையலிட்டு கிடாவெட்டி தென்புலத்தார் கடனை
நினைவுக்கூர்ந்து அந்த பார்ப்பார் குழுவுக்கு படியளக்கும் வழக்கத்தை
மீட்டெடுக்கவும்.
உங்கள் மனதில் அந்த தமிழ்ப்பார்ப்பன குழுவை பற்றி தரக்குறைவான எண்ணத்தை
ஏற்படுத்திவிட்டனர் சிலர். அதன் விளைவால் உங்களின் தற்கால முன்னோர் (தாய்
தந்தையர்) ஆண்டுதோறும் பெருஞ்சோற்றுப்படையலிட்டு கிடாவெட்டி
தென்புலத்தார் கடனை நினைவுக்கூர்வதை கூட கீழ்த்தரமாக தற்காலத்தில்
கருதலாம். அவர்களுக்கு பேசி புரியவைத்து மீண்டும் நம் தென்புலத்தார் கடன்
தீர்க்கும் முறையை மீட்டெடுப்பது தற்கால தலைமுறையினரான உங்கள் கைகளிலேயே
இருக்கிறது. ஆண்டுதோறும் நடுகல்லில் கீழிருக்கும் மண்ணில் ஒரு
பானையெடுத்து உங்கள் வீட்டுத்தோட்டங்களில் உள்ள பச்சைகளுக்கு உரமாக
தூவிவிடுங்கள். தோட்டம் இல்லையேல் ஒரு பூச்சாடியில் ஒரு பிடிமண்ணையாவது
ஆண்டுதோறும் உரமாக இட்டு செடி வளர்க்கவும்.
கூமுட்டைகளை போல் கடலில் சென்று சாம்பலை கரைத்து உங்கள் முன்னோர்களை
உங்களிடம் இருந்து விளக்கி வைக்காமல் உங்கள் அருகிலேயே உங்கள் முன்னோர்
இருக்கும் உணர்வு வர இதுதான் சிறந்த வழி. தர்ப்பணம், திதி என்ற பெயரில்
ஆண்டுதோறும் பிராமணர்களிடம் நீங்கள் செய்யும் சடங்குகள் உங்கள்
தலைமுறைக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் ஆப்பாகும்.
நம் தமிழ்க்குடிகள் அனைவருமே ஒரு காலத்தில் போர்மரபினர் என்பதை மறந்துவிட
வேண்டாம். மீட்டெடுப்போம் நமது நடுகல் மரபை. - தென்காசி சுப்பிரமணியன்
(Rajasubramanian Sundaram Muthiah )

சுடலை மாடசுவாமி என்ற பெயரில் வணங்கப்படுபவர் ஒரு புலையர் ஆவார். அவர்
புலையர் எனத்தெரிந்தால் தாங்கள் தர்ப்பணம் கொடுத்து காசு சம்பாதிப்பதற்கு
ஆப்பு வந்துரக்கூடாது என திருட்டு வடுகப்பிராமணியம் சுடலை என பெயரை
மாற்றி சிவனின் சாம்பல் அம்சமாக மாற்றியது. தென்பாண்டி நாட்டில் நெல்லை
நகரப்பகுதிகளில் இவரின் பழைய பெயரான புலமாடன் என்ற பெயர் இருக்கிறது.
புலமாடசாமி என்ற பெயர் புலையமாடசாமி என்பதன் திரிபாகும்.
- Rajasubramanian Sundaram Muthiah


தர்ப்பணம் சுடுகாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக