செவ்வாய், 10 அக்டோபர், 2017

மதுரை நாயக்கர் படையெடுப்பு தடுக்க 22 கிமீ சுவர் வேணாடு குமரி தடுப்புச்சுவர் திருவிதாங்கூர்

கன்னியாக்குமரி பெருஞ்சுவர்(திர
ுவிதாங்கூர் அரண்) :
இந்தியாவின் தெற்கு எல்லையான கன்னியாக்குமரிக்கு மேற்கே உள்ள
நிலப்பரப்பினை வேணாட்டரசர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர். 17 - ஆம்
நூற்றாண்டின் இறுதியில் குமரிவரையில் நீண்டிருந்த மதுரை ஆட்சியாளர்களின்
தொடர் அத்துமீறல்களைத் தடுத்திட வேணாட்டரசர்கள் தங்களது கிழக்கெல்லையில்
ஒரு பெருஞ்சுவரைக் கட்டி எழுப்புகின்றனர். குழைமணல் , பெருங்கற்கள்
மற்றும் சுடுசெங்கல் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட இந்த அரண்
பிற்காலத்தில் பராமரிப்பற்று செயலற்றுப் போய்விட்டது (18 - ஆம்
நூற்றாண்டுக்குப் பிறகு திருவாங்கூர் அரசுக்கு பிரிட்டீசாரின் பாதுகாப்பு
இருந்தமையால்).
கடுக்கரையிலிருந்து கன்னியாக்குமரி கோவளம் கடற்கரை வரையிலான 22
கிலோமீட்டருக்கும் மேற்பட்ட நீண்ட தடுப்புச்சுவரே குமரி அரணாகும்.
இப்பெரும் அரண் வரலாற்றில் பதிவுசெய்யப்படாதது நம்மின் பிழைகளே !
ஆரல்வாய்மொழி கணவாய்க்கு மேற்கே அன்னியரது உட்புகுதலைத் தடுத்திடவும்,
தொடர் கொள்ளைகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், படையெடுப்புக்களை
முறியடிக்கவும் இந்தச்சுவர் பேருதவியாக இருந்துள்ளது.
குளச்சல் போரின்போது , கன்னியாக்குமரியை ஆக்கிரமித்து கோட்டை
கட்டியிருந்த டச்சுப்படை குளச்சலை நோக்கிய நகர்தலுக்கும் இச்சுவர்
பெருந்தடையாக இருந்து திருவிதாங்கூரின் வெற்றிக்கு வழிவகை செய்தது.
சீனப்பெருஞ்சுவருடன் இப்பெருஞ்சுவரை ஒப்புமைப்படுத்திடக்கூடாதெனினும்
இதன் சிதிலங்களை இன்றும் கண்ணுறும்போது வரலாற்று எச்சங்களை அழித்தொழித்த
நம்மின் ஊனங்கள் கண்முன்னே விரிந்து செல்கிறது !!

Dhinakar Nd
ஐரோப்பியர்கள் இந்த சுவரை Travancore lines என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
வேல்முருகன் இதற்கு " கன்யாகுமரி பெருஞ்சுவர்"என்று பெயர் சூட்டி புதிய
வரலாறு படைத்திருக்கிறார்.!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக