செவ்வாய், 10 அக்டோபர், 2017

யாசிதி மதம் முருகன் தொடர்பு

வியப்பூட்டும் தகவலா இருக்கு..!!!
-------
"ஐநாவின் இனப்படுகொலை விசாரணையும் தமிழக்கடவுள் முருகனும்!"
------------------------
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் ஈராக்கின் யாசீதி பழங்குடியினர் படுகொலை
செய்யப்பட்டது தொடர்பாக இனப்படுகொலை விசாரணை ஆணையத்தை அமைத்து ஐநா
பாதுகாப்பு அவை 21.9.2017-ல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஈராக்கின் யாசீதி பழங்குடியினரின் கடவுள் நம்பிக்கையும், மத
அடையாளங்களும் - தமிழ்நாட்டின் முருகக் கடவுள் நம்பிக்கை போன்றே இருப்பது
வியப்பளிக்கும் ஒற்றுமை ஆகும்.
------------------------
"யாசீதி பழங்குடியினர் யார்?"
------------------------
யாசீதிகள் (Yazidi) ஈராக்கின் வடக்குப் பகுதியில் வாழும் பழங்குடியினர்
ஆகும். உலகளவில் இவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7 லட்சம் பேர் மட்டுமே.
தமக்கென தனிப்பட்ட மத நம்பிக்கையையும் பண்பாட்டையும் கொண்டுள்ள இவர்கள்,
வரலாறு நெடுகிலும் 72 முறை இனப்படுகொலை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
கடைசியாக 73 ஆவது முறையாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
யாசீதி மக்கள் அதிகம் வசிக்கும் ஈராக்கின் சின்ஜார் மலைப்பகுதிக்குள்
2014 ஆம் ஆண்டில் புகுந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், 5000 ஆண்களை கொலை
செய்துவிட்டு, 7000 பெண்களை கடத்திச்சென்று பாலியல் அடிமைகளாக நடத்தினர்.
இப்போது கூட, ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரிடம் சுமார் 5000 யாசீதி பெண்கள்
பாலியல் அடிமைகளாக இருப்பதாக நம்பப்படுகிறது.
------------------------
"யாசீதிகளின் கடவுளும் முருகனும்"
------------------------
இறைவன் உலகை காப்பாற்ற ஏழு தேவதைகளை அனுப்பினார். அவற்றில் தவசி மாலிக்
எனும் மயில் கடவுளை தலைமை தேவதையாக நியமித்தார். மயில் கடவுள் தன்னை
படைத்த இறைவனையே எதிர்த்து கோபித்துக்கொண்டு சென்றார். பின்னர் மீண்டும்
கடவுளுடன் இணைந்தார் என்று யாசீதிகள் நம்புகின்றனர்.
(இதே நம்பிக்கை தமிழ்நாட்டிலும் உள்ளது. ஏழுகன்னிகள் எனும் வழிபாடும்,
முருகனின் தோற்றத்துடன் ஆறு கார்த்திகை பெண்களும் பேசப்படுகின்றனர்.
சிவனிடம் கோபம் கொண்டு முருகனும் தனியே சென்றார்).
------------------------
"யாசீதிகளின் லாலிஷ் மலைக் கோவில்"
முருக வழிபாட்டில் உள்ள பாம்பு, சேவல் உள்ளிட்டவற்றை யாசீதிகளும்
வணங்குகின்றனர். அவர்களின் முதன்மை வழிபாட்டு அடையாளமாக இருப்பது,
மயிலுடன் கூடிய குத்துவிளக்கு ஆகும். அவர்களின் முதன்மையான ஆலயமான லாலிஷ்
கோவிலில் தமிழகத்தின் குத்துவிளக்குதான் முதன்மையாக உள்ளது.
முருகன் கோவில்கள் மலைகளில் இருப்பது போல, யாசீதிகளின் இக்கோவிலும்
மலைமேல் உள்ளது. இக்கோவில் 4000 ஆண்டுகளாக இருப்பதாக ஆய்வாளர்கள்
கூறுகின்றனர். முருக வழிபாட்டில் 'ஓம் சரவண பவ' என்பதாகப்
பயன்படுத்தப்படும் அறு கோணச் சக்கரம் இந்த லாலிஷ் கோவிலிலும்
செதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை போன்றே தீப வழிபாட்டிலும் யாசீதிகள் ஈடுபடுகின்றனர்.
கோவிலில் திருநீறு பூசுவது போன்றே ஆசீர்வாதம் அளிக்கப்படுகிறது.
அவர்களின் புத்தாண்டு தினம் தமிழ்நாட்டின் சித்திரை முதல்நாளுக்கு பிறகு
வரும் புதன்கிழமை ஆகும்.
முஸ்லிம்கள் யாசீதிகளின் மயில் கடவுளை 'அல் கதிர்' என்று
குறிப்பிடுகின்றனர். யாசீதிகளின் கோவிலில் உள்ள சமாதியில் இருக்கும்
அவர்களின் மதத்தலைவரின் பெயர் ஷேக் ஆதி (ஆதி தலைவன்) ஆகும். (யாசீதிகள்
மயில் கடவுளை வழங்கினாலும் வளைகுடா நாடுகளில் மயில் இல்லை. மயில்
இந்தியாவின், தமிழ்நாட்டின் பறவை).
------------------------
"யாசீதிகளின் சாதியும் அகமண முறையும்"
யாசீதிகள் நான்கு சாதிகளாக பிரிந்துள்ளனர். நான்கு சாதிகளில்
மதத்தலைவருக்கான சாதியில் இருந்து மட்டுமே யாசீதி மதத்தலைவர் வரமுடியும்.
நான்கு சாதிகளும் அவரவர் சாதியில்தான் திருமணம் செய்ய முடியும். ஆனாலும்,
சாதிகளுக்கு இடையே யாசீதிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வோ, ஒதுக்குதலோ இல்லை.
மாற்று மதங்களை இவர்கள் வெறுப்பதும் இல்லை.
கடுமையான மதவெறி தக்குதல்களுக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டாலும், தங்களின்
மயில் கடவுள் நம்பிக்கையை யாசீதிகள் கைவிட மறுக்கின்றனர்.
------------------------
"ஐநாவின் இனப்படுகொலை விசாரணை"
------------------------
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் ஈராக்கில் யாசீதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட
இனப்படுகொலை ஆதாரங்களை திரட்டி பாதுகாக்கவும், குற்றவாளிகளை பன்னாட்டு
சட்டத்தின் கீழ் தண்டிக்கவும் ஐநா பாதுகாப்பு சபை உத்தரவிட்டுள்ளது.
இதற்கான விசாரணை ஆணையத்தை அமைக்கும் தீர்மானம் கடந்த வாரம் (21.9.2017)
ஐநா பாதுகாப்பு அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். யாசீதிகளின்
பாரம்பரியமும் பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டும்.
------------------------
படம்:
1. ஈராக் லாலிஷ் கோவிலில் குத்துவிளக்கு படம்
2. முருகனும் மயில் கடவுளும்
3. குத்துவிளக்கை வணங்கும் யாசீதிகள்
4. ஈராக் லாலிஷ் கோவிலில் முருகன் அறுகோணச் சக்கரம்
------------------------
காணொலி 1 - அமெரிக்காவின் முருகன் கோவிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில்
- யாசீதிகளின் மதத்தலைவர் பாபா ஷேக்: https://youtu.be/AHXLkDVnAuI
காணொலி 2 - யாசீதி மக்கள் மீதான வன்முறை: https://youtu.be/XDniN3k5aQ8
தகவலுக்கு நன்றி...Arul Rathinam
29 செப்டம்பர், 08:35 PM · பொது
Rajkumar Palaniswamy மற்றும் 43 பேர்
Jaya Prasad
இங்கிருந்து சென்றவர்கள் தான் எல்லா மண்ணிற்கும் பூர்வீக குடி
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · வெள்ளி, 08:42 PM க்கு
Rathish Athi பதிலளித்தார் · 1 பதில்
Rathish Athi
ஒரு காலத்தில் உலகில் உள்ள பல இன குடிகளை தமிழின(குமரிக்கண்டம்) குடிகளே தலைமை
தாங்கி வழிநடத்தி சென்று இருக்கவேண்டும். அதன் உடைய எச்சமே இந்த யசீதி
இனத்தின் வெளிப்பாடு.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · வெள்ளி, 09:12 PM க்கு
Rathish Athi
http://www.dailymail.co.uk/femail/article-2722800/
Haunting-photos-offer-glimpse-Iraqs-tragic-Yazidi-people-months-ISIS-onslaught.html
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · வெள்ளி, 09:12 PM க்கு
Krishna Tamil D
yazidi -> yachetti யின் திரிபுனு யாராவது சொல்லப்போராங்க பாஸ்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக