செவ்வாய், 10 அக்டோபர், 2017

மபொசி தனித்தமிழ்நாடு பிரிவினை எதிர்ப்பு தீபாவளி இந்தி ஆதரவு

Kasi Krishna Raja
"இப்படியெல்லாம் பேசிய ம.பொ.சி. எப்படி சில தமிழ்த் தேசியவாதிகளுக்க
ு வழிகாட்டியானார் என்பது மட்டும் எனது மரமண்டைக்குப் புரியவில்லை.
"தமிழகத்தை இழப்பதால், எஞ்சிய பாரதத்திற்கு நஷ்டமில்லை. பாரத்திலிருந்து
பிரிவதால் நஷ்டம் தமிழகத்திற்கே" என்கிறார் ம.பொ.சி. (செங்கோல் 28.10.62)
"நாட்டு மக்கள் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்றால் அதற்கு நாட்டைத்
துண்டாட தேவை இல்லை.... நாட்டைத் துண்டாடக் கோரிக் கூச்சலிடுவது மன்னிக்க
முடியாத மாபெரும் குற்றமாகும். பிரிவினைக் கோரிக்கை நாடு முழுவதையுமே
அழிக்கும் நஞ்சு என்பதை உணருங்கள்." (செங்கோல் 22-4-62)
“தீபாவளி போன்ற பண்டிகைகள் தோன்றியிராவிடில்; பாரத மக்களிடையே இன்றுள்ள,
அற்ப ஒருமைப்பாடும் இருந்திருக்க முடியாது. ஆகவே இதனை ஒரு தேசியத்
திருநாளாகவே கருத வேண்டும். வாழ்க பாரதம்” (22.10.1962 செங்கோல்)
“நான் ஒரு இந்துவாக இருப்பது குறித்து வருத்தமோ வெட்கமோ படவில்லை. மாறாக
மாபெரும் கலாச்சாரப் பாரம்பரியத்தை சார்ந்தவன் என்பதற்காகப்
பெருமைப்படுகிறேன். ஒரு இந்துவாக மட்டுமல்லாமல், தேச பக்தியுடைய
இந்தியனாகவும் இந்தக் கூட்டத்தில் பேசுகிறேன். நாம் இந்தியர் இந்தியா நம்
தாய் நாடு என்பதை மறந்து விடக் கூடாது”. (செங்கோல் 27-1-63)
“தனித் தமிழ்நாடு கோருவோர் இந்தியை அடியோடு வெறுக்கலாம். அவர்களின் நிலை
வேறு. இந்தியாவின் அய்க்கியத்தை ஏற்பவர்களாகிய நாம் (தமிழரசு கழகத்தினர்)
இந்தியை அடியோடு புறக்கணிக்க முடியாது. தமிழக மக்கள் இந்தி பயிலத்தான்
வேண்டும். குறைந்த பட்ச தேர்வுக்குரிய மதிப்பெண் பெறவேண்டும் என்ற
நிலையில் பாடத்தில் இந்தி இடம் பெறவேண்டும்” (செங்கோல் 3-3-63)
இவற்றில் எல்லாம் பெரியாரின் நிலைப்பாட்டை, ம.பொ.சி.யின் நிலைப்பாட்டோடு
நீங்களே ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்..."
நன்றி: Valasavallavan
ஹிந்தி காங்கிரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக