Palani Deepan
பரிமேலழகர்.
இன்று புதிது புதிதாக அவர் இல்லையென்றால் திருக்குறளே யாவருக்கும்
தெரிந்திருக்காது என பீதியை கிளப்புகின்றனர்.
அடுத்து, பரிமேலழகர் உரையை தொட்டுகூட பார்த்திருக்க மாட்டார்கள்.
மனுநெறியில் அவர் உரை எழுதியிருப்பதாக கிளிப்பிள்ளை போல கூறியதையே
கூறிக்கொண்டிருப
்பார்கள்.
ஒரு சில குறட்பாக்களில் மட்டுமே அவர் தவறான உரை கண்டுள்ளார். அது அவரின்
காலச்சூழலின் பிடி எனலாம். ஆனால் திருக்குறளின் முழுமைக்கும் அவரது
காலச்சூழலையும் கடந்துதான் தமிழ் மரபை மீறாமலும் ஒட்டியுமே
உரைகண்டுள்ளார்.
எளிமையும், கருத்தாழமும் இவரின் தனிச்சிறப்புகள்.
உரையில் இவரைப்போல, தமிழ் இலக்கியப்பரப்பிலும் இலக்கணப்பரப்பில
ிமிரு்நது மேற்கோள் காட்டியவர்கள் மிகக்குறைவு.
சங்க இலக்கியங்களுள் அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, நற்றிணை,
நெடுநல்வாடை, பட்டினப்பாலை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு போன்ற
இலக்கியச் செல்வங்களை ஏறக்குறைய 300-இக்கும் மேற்பட்ட இடங்களில்
மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார் பரிமேலழகர்.
ஏறத்தாழ தமிழ் இலக்கிய வரலாற்றையே இவரது உரையில் அணிவகுக்க செய்துள்ளார் இவர்.
இவற்றுள் முதன்மை இடம்பெறத்தக்கது தமிழரின் வீரத்திற்கும் கொடைக்கும்
உலகினற்கு சான்றாக விளங்கும் புறநானூறேயாகும். ஏறக்குறைய முப்பதிற்கும்
மேற்பட்ட இடங்களில் புறநானூற்றுப்புலமை இவரது உரையில் காணக்கிடைக்கிறது.
காப்பியங்களில் அவரது உள்ளத்தைக் கவர்ந்தது சீவக சிந்தாமணியும், சிலம்பும் ஆகும்.
இவரிடம் என்னை மிகவும் கவர்ந்தது இவரது உரையின் நடை அழகு. தமிழின் நளின
நடை இவருடையது. நான் அறிந்தவரையில் அந்த நடைக்கு இணையான இனிமையான ஓர்
உரைநடையை இன்றுவரை யாரும் எழுதவில்லை என்றே கருதுகிறேன்.
உரைஎழுந்தபோது அன்றைய காலச்சூழல் வடமொழியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள
நடை வழஙகி வந்த காலம். இவரும் அதில் ஒன்றி அந்த நடையை கையாண்டிருக்கலாம்.
ஆயினும் அதன்பாற் அவரது மனம் செல்லவில்லை. மணிப்பிரவாள நடையை கைகொள்ளாது,
தூயதமிழ் நடையை கையாண்டது போற்றற்குரியது ஆகும்.
ஆக உரைநடையில் தனித்தமிழின் இனிமையை உணரவைத்த தூயதமிழின் ஆதிநாயகன்
பரிமேலழகர் எனலாம்.
ஆகையால்தான் தமிழின் தரமான இலக்கியங்களை அடுக்கிய உமாபதி சிவனார்
பரிமேலழகரின் உரையும் ஒரு தரமான படைப்பிலக்கியமாகவே கண்டார்.
”வள்ளுவர் நூல் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தஉரை - ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்
தண்தமிழின் மேலாம் தரம்”
என புகழ்ந்துரைத்தார்.
அடுத்த தொண்டை மண்டல சதகத்தில் வரும் மேற்கோள் பாடலும் இவரின் புகழை
புகழ்ந்துரைக்கும்.
”பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ- நூலிற்
பரித்த உரையெல்லாம் பரிமேல் அழகன்
தெரித்தஉரை யாமோ தெளி”
என்கிறது அப்பாடல்.
இப்பாடலின் இன்னொரு செய்தி, யாவரும் கேட்டு மகிழ்ந்த கண்ணதாசனின்,
”கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா...
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா....”
திரைப்படப்பாடல் இப்பாடலின் எதிரொலியே ஆகும்.
2 மணிநேரம் · பொது
Arutchelvan Thiru மற்றும் 24 பேர்
Arutchelvan Thiru
பரிமேலழகர் காலத்திற்குப்பின் உரை வரைந்தவர்களில் 98% பேர் அவரைப்பின்பற்றி
யே உரை வரைந்துள்ளனர்.பாவாணர் உரையில்கூட 90% பரிமேலழகர் உரைவழித்தான்
உரை வரையப்பட்டுள்ளத
ு.எனினும் பரிமேலழகரும் சாகாக்கலைசார்ந்த குறள்களுக்கு சரியான உரை
வரையவில்லை என்பதே உண்மை.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
லெச்சு மி
அவசியமான செய்திகள்
பிடித்திருக்கிறது · பதிலளி · புகாரளி · 1 மணிநேரத்திற்கு முன்பு
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை · நண்பர்களைக் குறிப்பிடவும் விரும்பு உணர்ச்சி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக