Suresh Pandiyan
மொஹஞ்சதாரோ ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஆர்.டி.பானர்ஜி,
‘மாடர்ன் ரெவியூ’ இதழில் ‘திராவிட நாகரிகம்’ என்ற தலைப்பில் எழுதிய
கட்டுரையில், ‘அண்மையில் சிந்து வெளியிலும், பலுசிஸ்தானிலும் நடைபெற்ற
கண்டுபிடிப்புகள் இந்தியாவில் மிக தென்கோடியில் உள்ள திருநெல்வேலி
மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரிலிருந்து அறுந்துபோகாத ஒரு சங்கிலித் தொடர்போல
திராவிடர்களின் பண்பாட்டுத் தொடர்பு உள்ளது’ என்று கூறி, ஆதிச்சநல்லூரில்
கிடைத்த முதுமக்கள் தாழி, சிந்துவெளித் தாழி போன்றவற்றையும் படங்களாய்
பிரசுரித்துள்ளார். எந்தரசும் இதில் கவலை கொள்ள விரும்பவில்லை..
..தமிழன் இணைந்தால் எழுந்தால் பாரதமே அவன் காலடியில்....
1876-லேயே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜாகோர் என்ற அறிஞர்
ஆதிச்சநல்லூரில் புதையுண்டு கிடக்கும் பழம்பொருட்களைத் தோண்டி எடுக்க
முடிவுசெய்தார். பெர்லின் நகரிலிருந்து கப்பலில் புறப்பட்டு, ரயிலில்
நெல்லை வந்து, பின்னர் மாட்டுவண்டியில் நீண்ட பயணம் மேற்கொண்டு,
ஆதிச்சநல்லூர் பரம்பிற்கு வந்து சேர்ந்தார். உள்ளூர் மக்கள் யாரும்
தடுத்துவிடக் கூடாது என்ற நோக்கில், வரும்போதே திருநெல்வேலி மாவட்ட
ஆட்சியர் பொறுப்பில் இருந்த ஸ்டூவர்ட் மற்றும் மாவட்டப் பொறியாளரையும்
உடன் அழைத்துக்கொண்டு வந்து, பறம்பில் உள்ள கல்லும் மண்ணும் கலந்த களர்
நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்.
அங்கு நிலத்திலிருந்து பல முதுமக்கள் தாழிகள், எலும்புகள், மண்டை ஓடுகள்,
பழைய மட்பாண்டங்கள், இரும்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் புதையல்போல
வெளிப்பட்டன. உட்கார்ந்த நிலையில் இருந்த எலும்புக்கூடுகளுடன், இறந்த
மனிதர்களின் விருப்பமான உணவாக இருந்த சாமை, தினை, உமி போன்றவையும்,
இற்றுப்போன துணிகளும் இருந்தன. தொட்டவுடன் அவை பொலபொலவென உதிர்ந்துபோயின.
தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களை எல்லாம் சாக்கு மூட்டைகளில் கட்டி
மீண்டும் மாட்டு வண்டி, கப்பல் உதவியுடன் தனது நாட்டில் பெர்லின் நகரில்
உள்ள வோல்கார்குண்டே என்ற அருங்காட்சியகத்தில் கொண்டு சேர்த்தார். ஜாகோர்
மேற்கொண்ட இந்த முயற்சியே இந்தியாவின் முதல் அகழாய்வு என்று கொள்ளலாம்.
1903-ல், இதுபற்றிக் கேள்விப்பட்ட பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயிஸ்
லாப்பிக்யூ என்பவர் இந்தியா வந்து, ஆதிச்சநல்லூர் பறம்பில் தோண்டி, அவர்
பங்ககுக்குச் சில பழம்பொருட்களை எடுத்துச் சென்று, பாரிஸ் நகர
அருங்காட்சியகத்தில் கொண்டுபோய் வைத்தார்.
இப்படித் திறந்த மடமாய், இந்தியா இருந்தது. யார் யாரோ வந்து இங்கே
இருக்கும் பழம்பொருட்களை எடுத்துச் செல்வதும், தங்கள் நாடுகளில் காட்சிப்
பொருட்களாய் வைப்பதும் தொடர்ந்தது. எனினும், நெல்லை மாவட்ட ஆட்சியராக
இருந்த ஸ்டூவர்ட், ஜாகோர் வந்து ஆய்வு செய்து பொருட்களை எடுத்துச் சென்ற
விவரம் குறித்தும், பிரெஞ்சு அறிஞர் லூயிஸ் லாப்பிக்யு கொண்டு சென்ற
பொருட்களைப் பற்றியும், கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு நீண்டதொரு
கடிதம் எழுதினார்.
அதன் பிறகே, விழித்துக்கொண்ட கிழக்கிந்திய கம்பெனி, அதிகாரபூர்வமாக
அலெக்சாண்டர் ரே என்பவரை, ஆதிச்சநல்லூர் அனுப்பி, ஆய்வு செய்யப்பணித்தது.
அவர் தலைமையில் ஒரு குழு அகழாய்வு செய்து, பல்வேறு பொருட்களை எடுத்தது.
இங்குள்ள புதைகுழிகளிலிருந்து மேலும் பல்வேறு எலும்புக்கூடுகள்,
இரும்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 30 வகை மட்பாண்டங்கள் நான்கு
அடி உயரம் கொண்டவையாக இருந்தன. இரும்பால் செய்யப்பட்ட போர்க் கருவிகள்,
கத்திகள், குறுவாள்கள், கைக்கோடரிகள் போன்ற பொருட்களும் கிடைத்தன. இங்கே
கிடைத்திருக்கும் இரும்பாலான ஆயுதப் பொருட்களைப் பார்க்கும்போது,
இரும்பின் பயனை உணர்ந்து, அதைப் பயன்படுத்தும் தொழில் நகரமாக
இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். முதுமக்கள்
தாழியில் உள்ள தானியங்களைப் பார்க்கும்போதும், இற்றுப்போன துணிகளைக்
காணும்போதும், சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பயிர்த் தொழில் மற்றும்
நெசவுத் தொழிலில் தமிழர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. இங்கு
கிடைத்த பொருட்களை எல்லாம் அலெக்சாண்டர் ரே, சென்னை அருங்காட்சியகத்தில்
கொண்டுபோய்ச் சேர்த்தார். ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின்
பட்டியல் ஒன்றை 13 படங்களுடன் 1913-ல் வெளியிட்டார்.....
சிந்து வெளி நாகரிகமும் ஆதிச்சநல்லூர் நாகரிகமும் சம காலத்தில் கண்டறியப்
பட்டும் நம் வரலாறு வெளி வரவில்லை....சமீப கால கீழடியையும் மூடி மறைக்க
மத்தியரசு சூழ்ச்சி.....தமிழா தமிழா அனாதை ஆகி போனாயோ....சகோதர பகையால்
நம்மை பிரித்தனரே...பிரித்தவரை வேர் அறுக்க எழுவாய்.
10 ஆகஸ்ட், 10:45 PM · பொது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக