ஞாயிறு, 8 அக்டோபர், 2017

ஈ.வே.ரா ஆதரவு பெற மபொசி முயற்சி திமுக வந்ததால் தோல்வி மண்மீட்பு

சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் உடன் கதிர் நிலவன் .
தமிழக எல்லைகளை மீட்க அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட முன்
வந்தார் ம.பொ.சி
10.10.1955இல் தமிழக தெற்கெல்லை தொடர்பாக அமைக்கப்பட்ட பசல்அலி ஆணையம்
தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அவ்வாணையம் தேவிகுளம், பீர்மேடு,
நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, கொச்சி சித்தூர் பகுதிகளை தமிழகத்தோடு
சேர்க்க மறுப்பு தெரிவித்ததோடு, ‘தமிழ்நாடு’ என்னும் பெயரை ஏற்க மறுத்து
சென்னை ராஜ்யம் எனும் பெயரில் புதிய தமிழ் மாநிலம் அமைத்திடவும்
பரிந்துரை செய்தது.
அப்போது இதற்கு எதிராக தமிழகத்தில் எந்த கட்சியும் தனது எதிர்ப்பைக்
காட்ட முன்வரவில்லை. நேசமணியும், ம.பொ.சி.யும் மட்டுமே கடும் எதிர்ப்பை
தெரிவித்தனர்.
தமிழகத்தில் ம.பொ.சி. ஒருவர் மட்டுமே தன்னந்தனியாகப் போராடினார்.
தமிழரசுக் கழகம் சார்பில் தொடர்வண்டி மறியல், அமைச்சர்களுக்கு
கறுப்புக்கொடி, குடியரசு நாள் புறக்கணிப்பு என்று தொடர் போராட்டங்கள்
மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழக எல்லைகளை மீட்க
அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட முன் வந்தார்.
இந்தக் கூட்டணியில் பெரியார் தவிர மற்ற கட்சியினர் பங்கெடுக்க விருப்பம்
தெரிவித்தனர். இதற்கிடையில், நேரு அரசு மொழிவழி மாகாணம் அமைவதை தடுத்திட
தென் மாநிலங்கள் இணைந்த “தட்சிண பிரதேசம்” அறிவிப்பை வெளியிட்டார்.
ஏற்கெனவே தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்திற்கே சொந்தம் என்று
“தினத்தந்தி” (11.10.1955) ஏட்டிற்கு பேட்டி கொடுத்த பெரியார் திடீரென்று
தட்சண பிரதேசத்தை எதிர்த்து அறிக்கை விட்டது ம.பொ.சி.யை வியப்பில்
ஆழ்த்தியது.
பெரியாரை நேரில் சந்தித்து தமிழக எல்லை மீட்புக்கு நடைபெற உள்ள அனைத்துக்
கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். பெரியாரோ தமிழக எல்லை மீட்பு,
இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ்நாடு பெயர் மாற்றம், மாநிலத்திற்கு
அதிக அதிகாரம், தட்சிணப் பிரதேச எதிர்ப்பு என்று ஐந்து கோரிக்கைகளை ஏற்க
வேண்டும் என்றும், அக்கூட்டத்திற்க
ு தி.மு.க.வை அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனை போட்டார்.
மற்ற கட்சிகள் பெரியாரின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து விட்டன. இதனை
ம.பொ.சி. எடுத்துக் கூறியும் பெரியார் பிடிவாதமாக கூட்டத்திற்கு வர
மறுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக