தேவிகுளம், பீர்மேடு மீட்புப் போரில் பெரியாரின் இரட்டை வேடம்
பெரியாரைத் தோலுரித்து அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதம்
தமிழகத்தின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்பதற்காக ம.பொ.சி. நடத்திய
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பெரியார் கலந்து கொள்ள மறுத்து விட்டார்.
ஆனால் இக் கூட்டத்திற்கு மறுநாள் மத்திய அரசின் இந்தித் திணிப்பைக்
கண்டித்து இராசாசி நடத்திய போது பெரியார் கலந்து கொண்டார். அத்தோடு
ம.பொ.சி. கூட்டத்தில் கலந்து கொள்ள ஐந்து கோரிக்கைகளை முன்வைத்ததோடு,
தி.மு.க.வும் கலந்து கொள்ளக் கூடாது என்று நிபந்தனை விதித்தார். அதனை
அப்படியே இராசாசியிடமும் நிபந்தனை விதிக்க மறுத்து விட்டார். மேலும்,
இராசாசி கூட்டத்தில் பிராமணர்கள் பங்கேற்றதையும், இராசாசிக்கு பெரியார்
புகழராரம் சூட்டியதையும் எடுத்துக்காட்டும் வகையில் 29.1.1956 ல் அண்ணா
தம்பிக்கு மடல் தீட்டினார்.
தம்பி, தயார் தயார்!
எல்லா கிளர்ச்சியும் குண்டு கிளம்பும் வரையில் தான். முழக்கமிட்டவன் ஐயோ
என்று அலறிக் கீழே விழுந்து புரண்டு, பிணமாவது கண்டால், காக்கை குருவிக்
கூட்டம் கல் கண்டதும் கடுகிப்போதல் போதல் போல இந்த வீராதி வீரர்கள்
வீறிட்டழுதபடி ஓடோடிச் செல்வர் என்று சர்க்கார் எண்ணிற்று! துப்பாக்கி
முழங்கிற்று! எழுவது பிணங்கள், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர்.
ஆயிரக்கணக்கானக்கானவர்களுக்குத் தடியடி, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்
சிறையில், எனினும் எதிர்ப்புணர்ச்சி மடியவில்லை. எக்காளம் குறையவில்லை.
எமது உரிமையயாவது தாருங்கள் அல்லது உயிரையாவது பறித்துக் கொள்ளுங்கள்
என்று கூறி மார்காட்டி நின்றனர் மக்கள்.
தம்பி, இந்தத் திங்கள், உத்தரப்பிரதேசத்தில் உருவாகியுள்ள சர்வாதிகாரத்தை
எதிர்த்துக் கிளம்பிய, சூறாவளி, நேருவின் கண்ணையும் திறந்திருக்கும்.
மொழிவழி அரசு என்ற திட்டத்துக்காகவே, இத்துணை பயங்கர நிலை மூண்டது.
கதர் கட்டினாலே ஆபத்து என்று எண்ணிப் பீதி கொள்ளும் நிலை இன்னமும்
அங்கெல்லாம் நீங்கவில்லை.
பண்டிதரின் பவனியே சிறிதளவு தடைபட்டு போய் நிற்கிறது. புதிய போலீஸ்
படையும், துருப்புகளும், ‘கலகம்’ நேரிட்ட நகர்களில் வந்து குவிந்த வண்ணம்
உள்ளன.
பம்பாயில் உத்தரப்பிரதேச போலீஸ், ஒரிசாவுக்கு மத்தியப்பிரதேச போலீஸ்!
அருந்தமிழ்நாட்டில் மட்டும். தம்பி! அற்புதமான அமைதி நிலவுகிறது! யாதும்
ஊரே! யாவரும் கேளிர்! அக்கிரமத்தை உணர்ந்தோர் எத்துணை பேர் என்பதையும்
அறிய முடியவில்லை. மாணவர்கள் மட்டுமே இப்போது நாட்டு மானங்காப்போம் என்று
கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளனர்.
இதற்கிடையில், பெரியார் இந்தப் பிரச்சினை சம்பந்தமாகத் திருச்சியில்
பேசியதாகப் பத்திரிகைச் செய்தி கண்டேன்- கண்களை அகலத் திறந்து
பார்த்தேன்- ஆச்சரியத்தால் மூர்ச்சையாகி விடக் கூடிய நிலைமை- அவர்
நம்மையும் அழைத்து ஐரு பொதுத்திட்டம் தீட்டப் போவதாக பேசினார் என்று
ப்த்திரிகையில் இருந்தது, நாளை எதிர்பார்த்துக் கிடந்தேன் – நானாக அவரை
நாடுவது என்றாலோ, ‘வழிமறித்தான்களும்’ ‘இடம் அடைத்தான்’களும் புடைசூழ
அல்லவா அவர் நிற்கிறார்?
இந்நிலையில், அஞ்சற்க, அனைவரும் ஒன்று கூடுவோம், என்று கூறுவது போல,
நண்பர் ம.பொ.சி.யின் தந்தி எனக்குக் கிடைத்தது கலந்து பேசலாம் என்பதாக.
சென்னையில் அவர் என்னிடம் சுவையான தகவல்களைக் கூறினார்- எனக்குத்
தெம்பும் நம்பிக்கையும் ஏற்படும் விதமான தகவல்கள்.
‘பெரியாரும் நானும் கலந்து பேசினோம்’ என்றார் ம.பொ.சி. ‘பரவாயில்லையே,
இப்போது நாம் ம.பொ.சி.யைப் பார்ப்பது பாபமல்ல; இதற்கு எந்தப் பழியும்
பிறவாதல்லவா- முதலில் பெரியாரும் ம.பொ.சி.யுமல்லவா சந்தித்தனர்-
பிறகுதானே நாம். பராவயில்லை- என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு அந்த
மகத்தான சந்திப்பின் போது பேசப்பட்டவை பற்றி அவர் கூறக்கேட்டு
இன்புற்றேன்.
தமிழகத்துக்கு உரிமையான பகுதிகளை மீட்பதற்கான கிளர்ச்சி அவசியம்
நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கைக்குப் பெரியார் ஒப்புதலளித்துப் பேசினார்
என்று கூறினார் – களிப்புற்றேன் – அந்தக் களிப்புப் பன்மடங்கு வளரும்
வகையில், இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பெரியார் பல இடங்களில் பேசினார்.
எனினும், 27ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பெரியார் கலந்து
கொள்ளவில்லை; காரணம், முன்னாளே காட்டினார்.
அவர் காட்டிய காரணங்களின் தன்மை பற்றியோ, உண்மை குறித்தோ ஆராய்ச்சி
நடத்துவது தேவையுமல்ல, என் வழக்கமுமல்ல- ஆனால், ஒன்றுமட்டும் கூறுவேன்.
அவர் காட்டிய காரணங்கள் அன்றைய கூட்டத்துக்கு அவர் வராததற்குப் போதுமானவை
யாகாது.
மேலெழுந்தவாரியாக நான் கேள்விப்பட்டதும், ‘தினத்தந்தி’ ஆசிரியர் ஆதித்தன்
என்னிடம் நேரில் சொன்னதும் என்னைத் தூக்கி வாரிப் போட்டது. – நீ
வருவதால்தான் பெரியார் வரவில்லை என்றார் – நம்மிடம் சொன்னதாகச் சொன்னார்
– ஆனால், சொன்னவர் தினத்தந்தி!
நான் அவரிடம் சொன்னேன். நான் இங்கு வருவது தான் பெரியார் இங்கு
வராததற்குக் காரணம் என்று எப்படிக் கூற முடியும்? நாளைக்கு 28ல் வேறோர்
இடத்தில் மற்றோர் பொதுப் பிரச்சினை குறித்து நடைபெற இருக்கும் ஆலோசனைக்
கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்- பெரியாரும் பெருந்தன்மையுடன் அங்கு
வரச் சம்மதம் தந்திருக்கிறாரே, அதுமட்டும் எப்படிச் சாத்தியமாகிறது?’
என்று கேட்டேன்.
காரணம் அது மட்டுமல்ல, தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை பற்றி மட்டுமே
ம.பொ.சி.யின் கூட்டத்தில் கவனித்துக் கிளர்ச்சிக்கு வகை காண முன்
வருகிறார்கள். பெரியாரோ, தம்முடைய ஒத்துழைப்பும் துணையும் தரப்பட
வேண்டுமானால், வேறு சில பிரச்சினைகளையும் போராட்டத்துக்கானதாக உடனடியாக
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறார். அதன்படி இங்கே காரியம்
நடைபெறாது என்று எண்ணியே வரவில்லை என்று, என்னையும் பெரியாரையும் ஒரு
சேரத் தோழமை கொள்ளும் நண்பர் கூறினார்.
இதுவும் பொருத்தமாகப் படவில்லையே! நாளைய தினம் நடைபெற இருக்கும்
கூட்டத்திலும், ஒரே ஒரு பிரச்சினை மட்டும்தான் கவனிக்கப்பட இருக்கிறது.
அங்கு பெரியார், தம்முடைய மற்ற பிரச்சினைகளை வலியுறுத்துவதாகக் காணோமே
என்றேன். எனக்கென்ன தெரியும் என்றார் நண்பர். எனக்குப் புரிந்தது-
புன்னகையும் பிறந்தது.
தம்பி! 27ம் தேதி கூட்டத்தில் கலந்து கொண்ட மாபாவிகளிலே பலர், 28ம் தேதி
கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு பெரியார், தட்டாமல் தயங்காமல்
வந்திருந்து தமது சீரிய யோசனையை வழங்கினார்.
பெரியார் 27ல் வரவில்லை, 28ம் தேதிய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
27ம் தேதிய கூட்டம் தேவிகுளம், பீர்மேடு சம்பந்தமாக.
28ம் தேதிய கூட்டம் ஆங்கிலமே இந்திய யூனியனின் அதிகாரப்பூர்வமான மொழியாக
இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக. இந்த ஒரு பிரச்சினைக்காக
‘இது’ களோடு நான் கலந்து பேசுவதா என்று கேட்ட பெரியார், மொழிப் பிரச்சினை
மட்டுந்தான் என்று 28ம் தேதிய கூட்டம் நடத்தப்பட்ட போதிலும் அதிலே
‘இதுகள்’ இருந்தபோதிலும், வந்தார். நான் திகைத்துப் போனேன். உன் நிலை
எப்படியோ?
ஒன்று மறந்தேனே கூற…. 28ம் தேதிய கூட்டத்தில் இராஜகோபால ஆச்சாரியாரும்,
திருப்புகழ் மணி கிருஷ்ணசாமி ஐயரும், கே.எஸ்.ராமசாமி சாஸ்திரிகளும்,
வெங்கட்ராம அய்யரும் வந்திருந்தனர. 27ல் இந்த ‘ஜமா’ இல்லை!
27ல் தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை, மொழிவழி அரசுப்பிரச்சினை, அதை
வெட்டி வீழ்த்தக் கிளம்பும் தட்சிணப் பிரதேச யோசனையை வீழ்த்தும்
பிரச்சினை, சென்னைக்குத் தமிழ்நாடு என்று உரிய பெயர் பெறும் பிரச்சினை
இவைகளுக்கெல்லாம்.
தி.மு.க., தமிழரசுக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி,
திராவிட பார்லிமெண்டரி கட்சி, ஷெட்யூல் காஸ்ட் பெடரேஷன், வடக்கெல்லைப்
பாதுகாப்பு கமிட்டி, திருகொச்சி இணைப்பு கமிட்டி, எழுத்தாளர் சங்கம்,
புதுவை முன்னணி, ஜஸ்டிஸ் கட்சி ஆகிய இத்தனை அமைப்புகளின் தலைவர்கள்
ஒப்பளித்தனர். உடனிருந்து பணியாற்ற ஒருமனப்பட்டனர். செயலாற்றக் குழு
அமைக்கப்பட்டது. பி.டி.ராஜன் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்;
ம.பொ.சி. அமைப்புச் செயலாளராகவும், நமது என்.வி.நடராஜன், ப.ஜீவானந்தம்,
அந்தோணிப் பிள்ளை, சுப்ரமணியம் ஆகியோர் செயலாளர்களாகவும் உள்ளனர்.
இது போன்றதோர் கூட்டணி இதற்குமுன் எப்போதும் ஏற்பட்டதில்லை. தாயக
மீட்புக்கு, அவரவர் தத்தமது கடமையைச் செய்ய, காணிக்கை தர, தயாராகி
விட்டனர்.
இதிலே இடம் பெற்றுள்ள எந்தக் கட்சியின் உருவமோ முறையோ, வேலைத் திட்டமோ,
கொள்கைகளோ, இந்தக் கூட்டினால், குலையும் நிலையில் ஏதும் இல்லை.
தேவிகுளம், பீர்மேடு என்ற குறிச் சொல்லால் இன்று உணர்த்தப்பட்டு வரும்
மொழிவழி அரசுத் திட்ட வெற்றிக்கான வரையில் கூடிப் பணியாற்றுவது என்பதே
நோக்கம்.
இல்லையேல் பி.டி.இராஜன் தலைவர், ம.பொ.சியும் ஜீவானந்தமும் செயலாளர்கள்
என்று ஓர் அமைப்பு ஏற்பட்டிருக்க முடியுமா?
தம்பி! அன்று நான் அனைவரிடத்திலும் கண்ட உள்ளத் தூய்மை என்னை உவகைக்
கடலில் ஆழ்த்திற்று! ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவோ
ஏசினோம். ஏசப்பட்டிருக்கிறோம் எனினும், அன்று நாட்டுக்கு வந்துற்ற
பெருங்கேட்டினை நீக்கிட நாமனைவரும், ஓர் அணியில் நின்றாக வேண்டும் என்று
ஒவ்வொருவரும் பேசியது கேட்டு, உளம் பூரித்தேன்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என் உள்ளத்தில் எப்போதும் இருந்து வருபவர்.
நீண்ட நாட்களாகக் காணாதிருந்தேன். அவருக்குக்கூட அல்லவா என்னிடம் கோபம்,
கசப்பு. அவர் அன்று அங்கு அமர்ந்து, அரசோச்சும் மன்னருக்குப்
பழந்தமிழ்ப்புலவர்கள் பேராண்மையுடன் அறிவுறுத்திய பான்மை போல்,
அவையினருக்கு, ‘செயல்! செயல்! உடனடியாகச் செயல்! உரிமை காத்திடும்
செயல்!’ என்று பேசினதை நான் என்றும் மறந்திட முடியாது.
இந்தக் கூட்டு முயற்சியைக் குறை கூறிப் பேசுவோரும் எழக்கூடும் நாட்டிலே
எதற்குத் தான் வாய்ப்பு ஏற்பட வில்லை?
இந்தக் கூட்டணி அமைந்ததால் தத்தமது கட்சி கலைக்கப்பட்டுப் போகும்
என்பதல்ல. ஏமாளியும் அங்ஙனம் எண்ணத் துணிய மாட்டான். ஒவ்வோர் கட்சியும்
இந்தப் பொதுப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் தத்தமது சக்திக்கேற்ற
வகையிலும் அளவிலும் பணியாற்றி, அந்தக் கூட்டுச் சக்தியின் பலனாக,
நாட்டுக்கு வந்துற்ற கேட்டினை நீக்குவர் என்பதுதான் பொருள்.
தம்பி, ஏற்பட்டுள்ள உறவு, முன்னாளில் இருந்து வந்த கசப்புகளையும்
மறந்திடச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.
அப்படிச் செய்தவர்! இப்படிப் பேசியவர்! என்று இரு தரப்பிலும் பேசிடுவது.
அவரவர்க்கு தத்தமது அமைப்பினிடம் உள்ள பாசத்தை முன்னிட்டுத்தானே! இனிக்
கூட்டு முயற்சி மூலம், பல்வேறு அமைப்புகளும், பகையின்றிப் பூசலற்று, ஏசலை
விடுத்துக் கூடுமான போதெல்லாம் ஒன்றுபட்டுச் செயலாற்றவும், கருத்து
வேறுபாடு எழும் பிரச்சினைகளில் தனித்து நின்று, ஆனால் ஓர் அமைப்பை
மற்றோர் அமைப்புத் தாழ்த்திக் கொள்ளாமலும், அவரவர் துறை நின்று
பணியாற்றுதலே பண்புடைமை, அறிவுடைமை என்பது பற்றி, நானும் நண்பர்
ம.பொ.சி.யும் பேசிய போது, ஏன் அத்தகைய அன்புச் சூழ்நிலையை அமைத்தல்
கூடாது?
நீண்டகாலப் பகையும் ஒன்றை ஒன்று அழித்திடத்தக்க முறையும் கொண்ட திராவிடர்
கழகமும் கம்யூனிஸ்ட்டும், கடந்த பொதுத் தேர்தலிலே, காங்கிரசை முறியடிக்க
ஒன்றுபட்டுப் பாடுபட வில்லையா?
இன்று காமராஜர் நமது இனப் பாதுகாவலர் என்று காரணம் காட்டிப் பெரியார்
அவருக்குப் பெருந்துணைவராக இல்லையா?
அதே போல, மற்றவர்கள் பண்பறிந்து நடந்து கொள்ளவா முடியாது -நிச்சயம்
முடியும் என்றே எனக்கும் தோன்றிற்று.
27ம் தேதி ஆச்சாரியாரும் பெரியாரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட
‘அன்பினைப்’ பார்த்த போது இதன்றோ, தமிழம் காண வேண்டிய காட்சி என்று
தோன்றிற்று.
‘உலகத்திலே உள்ள அவ்வளவு பேதங்களும் எங்கள் இருவருக்கிடையில் உண்டு;
மறைத்துப் பயனில்லை; என்றாலும் இந்த ஒரு விஷயத்தில் நானும் அவரும்
ஒத்துப் போகிறோம்; ஒரே அபிப்பிராயம் தான்’ என்று பேசினார்.
பார்ப்பனச் சூழ்ச்சி என்று கூறிவிடலாம், அவர் மட்டுமே இப்படிப் பேசி
இருந்தால், பெரியார் பேசியது என்ன தெரியுமா, தம்பி!
என் அன்புக்குரிய ஆச்சாரியார்.
நண்பர்;
தலைவரென்றே சொல்லலாம்.’
இந்த ஒரு விஷயத்தில் நானும் அவர் கருத்தைப் பூரணமாக ஆதரிக்கிறேன் என்றார்.
28ல் ஏற்பட்ட கூட்டு, ஆங்கிலமே பொதுமொழியாக இருத்தல் வேண்டும் என்று
மத்திய சர்க்காருக்குப் பல கட்சியினர் கூறிக் கூறி, அதைப் பெறுவதற்கு வழி
காண ஏற்பட்டது.
27ல் ஏற்பட்ட கூட்டு, நாம் பெற வேண்டிய எல்லைகளைப் பெறவும், சென்னைக்கு
உரிய தமிழ்நாடு என்ற பெயர் கிடைக்கவும், தட்சிணப் பிரதேசம் என்ற பேய்த்
திட்டத்தை ஒழித்துக் கட்டவும் ஏற்பட்டது.
28ன் உடனடி விளைவு , ஆங்கிலமே பொது மொழியாதல் வேண்டும் என்று மத்திய
சர்க்காருக்கு தெரிவிப்பது. அதில் நாங்கள் அனைவரும் இசைவு
தந்திருக்கிறோம்.
27ம் தேதி செய்த முடிவு, தேவிகுளம் பீர்மேடு பிரச்சினை சம்பந்தமாக மத்திய
சர்க்கார் மேற்கண்ட போக்கினைக் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 20ல்
நாடெங்கும் பொது வேலை நிறுத்தம் செய்வது என்பதாகும்.
தம்பி! சர்க்கார் எத்தகைய கடுமையான ஒடுக்குமுறை கொண்டும் நம்மை ஒடுக்கத்
தயாராக இருக்கிறது. இப்போதே அறிவகத்தைச் சுற்றி போலீஸ் வட்டமிட்ட வண்ணம்
இருக்கிறது.
அந்தத் ‘தட்டும் குவளையும்’ துடியாய் துடிக்கின்றனவோ என்னவோ யார்
கண்டார்கள் – சிறையில்! எது எப்படி நேரிடினும் பிப்ரவரி 20, வெற்றிகரமாக,
அமைதியாக, பலாத்காரமற்ற வகையில் நடைபெற்றாக வேண்டும்.
தம்பி, தயார்! தயார்!
அண்ணன்
அண்ணாதுரை.
(முற்றும்)
(குறிப்பு: ம.பொ.சி. ஐந்து கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவர்
கூட்டத்தை புறக்கணித்ததாக கூறி வந்த பெரியார் 29.1.1956இல் வேலூரில்
நடந்த திராவிடர் கழக பொதுக் கூட்டத்தில், இராசாசி தட்சிணப் பிரதேசத்தை
ஆதரிப்பதால் ம.பொ.சி. மனம் மாறி போய் விட்டதாக திடீரென்று
குற்றஞ்சாட்டிப் பேசினார். அவரின் குற்றச்சாட்டில் துளியளவும்
உண்மையில்லை என்பதை அண்ணாவின் கடிதத்தை படிப்பவர் உணர்ந்திடுவர்.
ம.பொ.சி. நடத்திய கூட்டத்தில் தான் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை
தமிழகத்தோடு இணைத்தல், சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டுதல்,
ஆகியவற்றோடு தட்சிணப் பிரதேசம் அமைப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
நன்றி:கதிர் நிலவன்
தமிழ்தேசியன் வலை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக