வெள்ளி, 6 அக்டோபர், 2017

மம்மி டாம் க்ரூஸ் படம் சேரன் பெயர் பல்லவர் க்கு ஹாலிவுட் எகிப்து திரைப்படம்

Yuvaraj Amirthapandian
கொடும கொடுமய்யா...! படம் பாக்கலாம்ன்னு தி மம்மி இந்த டாம் குரூசு பய
நடிச்சத பாக்கலாம்ன்னு பாத்தா....!
எகிப்து இளவரசி, ஆச, பேராச, அப்பன போட்டுதள்றது, பேய்க்கருப்புட்ட
இருந்து கருப்பு ஆற்றல ஆட்டைய போட பலி கொடுக்குறது, அப்புறம்
மாட்டிக்கிறது, பாடம் பண்ணி புதக்கிறது, எங்க போயி? எகிப்துலர்ந்து
சுமேரியாவுக்கு (ஈராக்), அப்புறம் ஒரு உட்டாலக்கடி விட்டு லண்டனையும்
எகிப்தோட கோத்துவுடறது...! ச்ச்ச்சப்ப்ப்பா....!!!
இந்த எளவே வேணாம்ன்னு தமிழ் படம் பாக்கலாம்ணா...! மரகத நாணயமாம். பல்லவ
அரசனாம். அடடா! வரலாற்றுக்கதடோய்ன்னு பாக்க ஆரம்பிச்சா, பல்லவ அரசனோட
பேரு இரும்பொறையாம். போச்சா... சேரனெல்லாம் பல்லவனிலிருந்து தான்....!
தவிச்ச வாய்க்கு தண்ணி தரலன்னு குடவாசல் கோட்டைச் சிறைல மானம் பெருசுன்னு
உசிரவிட்ட கணைக்கால் இரும்பொறை ஆவி உங்கள சும்மா விடாதுடா!
அடப்போங்கடா! ஆனா ஒண்ணு தெரியுது. காஃலிவுட்டுக்கு நிகரா கோலிவுட்டு
வந்துடுச்சு. எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தான்...!
நல்லா பண்றீங்கடா பிளானு...! நல்லா பண்றீங்க.
# இரும்பொறை # பொணம் # பிணம்
# மம்மி # திமம்மி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக