சனி, 7 அக்டோபர், 2017

ராமநாதபுரம் மரம் வெட்டி வறண்டது ஆங்கிலேயர் நெல் உற்பத்தி

Manoharan Arasappan > News for Awareness
சமூக அரசியல் பொருளாதர பார்வை புதிய பரிணாமம் பெறட்டும்
.....................................................
தென்மாவட்டத்தில் முக்கிய பகுதியான பிரிக்கபடாத இராமநாதபுர மாவட்டம்
வறட்சி பகுதி அல்ல வறட்சி பகுதியாக்கப்பட்
ட பகுதி எப்படி?
வெள்ளையர்கள் ஆக்கிரமிப்புக்கு முன்பாக செழிப்பான பகுதியாக இருந்தது,
இயற்கையின் சமநிலை பாதுகாப்பாக இருந்தது நமது முன்னோர்கள் சமநிலை
பாதிக்காத வகையில் வாழ்வாதரத்தை பெருக்கினார்கள்,
இந்த பகுதியில் ஏராளாமான குளங்களும் ஏரிகளும் உருவாக்கப்பட்டபொழுதும்
வாழ்வாதர அடிப்படை தேவைக்கு
உயிர் ஆதாரமான நீரை அறுவடை செய்யும் மரங்கள் ஏராளமாக பாதுகாத்து வளர்த்துள்ளார்கள்,
மரங்களின் வளர்ச்சிக்கு ஒத்திசைவான வரகு கேப்பை கிழங்கு பருப்பு வகைகள்
பிரதான உற்பத்தியாக இருந்தது
உயிரினங்களும் அதற்கு உகந்த உற்பத்திகளையும் இயற்கை அனுமதித்த சமநிலையை
பாதுகாத்து உலகம் செழித்து வளர்ந்து கதை,
எங்கே திசை திருப்ப பட்டது என்பதை நாம் ஆய்வு செய்வோம்
வெள்ளையர்கள் ஆக்ரமிப்புக்கு பிறகு தனது சுரண்டல் மற்று கொள்ளை
நோக்கங்களுக்காக தென்மாவட்டம செயற்கையாக அரிசி உற்பத்திக்கான பிரதான
மண்டலங்களில் ஒன்றாக மாற்றபட்டது
பயிர் விவசாய நிலத்தில் மரம் இருந்தால் பயிர் வளரும் ஆனால் அரிசி
இல்லாமல் கருக்காய் மட்டுமே இருக்கும்
ஆகவே நெல்பயிரின் எதிரி மரம் என்ற நிலை உருவானது
மரங்கள் அழிக்கப்பட்ட கதை இப்படிதான் துவங்கியது, மழையை அறுவடை செய்யும்
மரம் அழிந்ததால் மழை நீர் குறைந்தது
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வறட்சியில் பாதிப்பு தெரிய துவங்கியவுடன்
தற்காலிக நிவாரணமாக கருவேலமரம் கொண்டுவரபட்டு வறட்சி தீவிரமாக்கபட்டத

இயற்கையின் சமநிலையை உடைத்து நடந்த உற்பத்தியானது
வாழ்வாதர பரிவர்த்தனை செய்துகொண்ட எல்லா பகுதிக்கும் வெள்ளையர்களால்
விரிவாக்கம் செய்யபட்டதால் இதன் எதிர்வினையாக பஞ்சத்தின் வீரியம் கூடியது
மேலும் ஒரு தற்காலிக நிவாரணமாக பசுமைபுரட்சி என்ற பெயரில் இயற்கை வளம்
நஞ்சாக்கபட்டது இதன் எதிர்வினையாக மனித குலம் நோயின் பிடியிலும், மன
உளைச்சலும், ஆளும்வர்க்க அராசகத்திலும் சிக்கிக்கொண்டது
உலகம் முழுதும் இயற்கையின் சமநிலைக்கு எதிரான ஏகபோகத்தின் அகோர பசிக்கு
பலியாக்கபட்ட உண்ணதமான வாழ்வியலை தேட வேண்டிய நிலை வந்துள்ளது
அரசியல் பொருளாதரத்தின் மீட்புக்கான புதிய பரிணாமத்தின் சிறு பதிவு மட்டுமே இது
தேடுவோம் இயற்கையில் உயிரியல் உறவை......

விவசாயம் வேளாண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக