சனி, 7 அக்டோபர், 2017

டெங்கு காய்ச்சல் உட்பட எல்லா வகை காய்ச்சலும் குணமாக

போனமாதம் அப்பா உடல்நிலை மோசமான நிலைமையில் குப்பம் PES மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருந்தோம்.
அப்போது பக்கத்து படுக்கையில் ஒரு இளைஞன் கடுமையான காய்ச்சலில் அட்மிட் செய்யப்பட்டான்.
நான்கு நாட்கள் தொடர் சிகிச்சை, குணமடையாத சூழலில் மருத்துவர்கள் இரத்த அணுக்கள் 27000 மட்டுமே உள்ளது, 50,000 வந்த உடன் சரியாகும் பொறுங்கனு அந்த பையன் வீட்டுக்கு சொன்னாங்க
ஐந்தாம்நாள் அந்த பையனோட பாட்டி அவனை பார்க்க வந்து மருத்துவர்களை திட்டிட்டு வெளிய போய் எங்கோ பப்பாளி கொழுந்து எடுத்து ஒரு ஸ்பூன் அளவு சாறு எடுத்து குடிக்க வைத்து போனார்.
தொடர்ந்து இரண்டுநாள் ஆறுவேளை குடித்த பையன் நலமாகி இரத்த பரிசோதனை செய்தபோது 90,000 வந்தது. டாக்டர்களே நம்ப முடியாமல் பார்த்தாங்க.
பையன்சொல்லாமல் கொள்ளாமல் வீடு போயிட்டான். பின் இதே மருத்துவத்தை அண்ணன் Chandraseker M மற்றும் பலர் கூறக்கேட்டேன்.
பப்பாளி சாறு அதிக கசப்பு இருக்கும் குடித்தவுடன் சுத்த தேன் ஒரு துளி சாப்பிட கசப்பு மறையுமாம். அதே பாட்டி சொன்னாங்க.
போக இன்னொரு மருந்து அண்ணன் Chandraseker M அவர்களின் பரிந்துரையில்
*_டெங்கு காய்ச்சல் உட்பட எல்லா வகை காய்ச்சலும் குணமாக_*
*நிலவேம்பு கசாயம்*
*தேவையான பொருட்கள்*
*1 - நிலவேம்பு பொடி - 1 தே.க*
*2 - பற்படாகம் - 1/2 தே.க*
*3 - விஷ்ணுகிரந்தை - 1/2 தே.க*
*4 - பூண்டு - 2 பல்*
*5 - சுக்கு - சிறிய துண்டு*
*6 - மிளகு - 1/2 தே.க*
*7 - திப்பிளி - 3 nos*
*இவை அனைத்தையும் 250ml நீரில் கொதிக்க வைத்து 100ml ஆன பிறகு வடித்து காலை மாலை உணவுக்கு அரைமணிநேரம் முன்பு குடித்து வரவும்.*
*இதனுடன் பப்பாளி இலை சாறு 2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
பிளாட்டிலெட்ஸ் அதிசயிக்கும் வண்ணம் அதிகரிக்கும்.
காய்ச்சல் வந்தால் அது என்ன காய்ச்சலாகவும் இருந்துவிட்டுப்போகட்டும்.
சோதனை செய்து பார்க்க மூக்கை நுழைத்துக்கொண்டு திரியவேண்டாம்.
காய்ச்சல் ரகத்திற்கு ஏற்ப 3 வேளைகளில் இருந்து 14 வேளைகளுக்குள் பூரண குணமாகிவிடும்.
காலை மாலை குறைந்தது ஒரு வாரம் சாப்பிடவும். கொசுக்கடி விசக்கடி,குடல் கிருமிகள், சக்கரை நோய், அறு சுவைகளில் கசப்பு சுவை குறைபாட்டால் உண்டாகும் சகல வியாதிகளும் குணமாகும்.
டாக்டர் ஃபீஸ் இன்றி, மருந்து மாத்திரை செலவு,ஆங்கில மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள்,பரிசோதனை செலவுகள், காத்திருக்கும் நேர இழப்பு இன்றி இனிதே வாழ்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக