இது எனக்குள் பெரிய மன அழுத்தத்தைத் தந்தது. அதனால், எனக்குள் எழுந்த
எண்ணங்களை அசைபோடலானேன்.
அம் மாநாட்டிற்குமுன் ‘நியூசு வீக்’ (News Week) எனும் அமெரிக்க ஏட்டின்
கடைசிப் பக்கத்திலிருந்த ஒரு கட்டுரையைப் படித்ததுண்டு. ஏழிசையை (ஏழு
சுரங்களை) உலகத்துக்கே தந்தவர்கள் ‘இந்தியர்கள்’ என்று அக் கட்டுரையில்
குறிப்பிடப்பட்டிருந்தது என் நினைவுக்கு வந்தது. உள்ளபடியே அது
‘தமிழர்கள்’ என்றே இருந்திருக்க வேண்டும்.
ஆ, ஈ. ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் ஏழு உயிர்நெடில் ஓசைகளைக் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் ஏழு சுரங்களாக்கி ஏழிசையை
உலகுக்கே தந்தவர்கள் தமிழ்ப் பாணர்கள்தாமே?
குரக்குமாந்தன் மாந்தனானபோது எதையெதையோ தட்டிப்பார்த்து அவற்றின்
அதிர்வுகளிலான முறைமைகளைக் கண்டறிந்ததால் வந்த தாளம், பண் (அராகம்) எனும்
வாய்ப்பாட்டுக்கு அடியெடுத்துக் கொடுத்த முன்னோடியானது. தாளத்தையும்
பண்ணையும் உருவாக்கி அவற்றை முதன்முதலில் முறைப்படுத்தியவ
ர்கள் தமிழ்ப் பாணர்களேயாவர். முழவிசைக் கருவிகள், ஊதிசைக் கருவிகள்,
நரம்பிசைக் கருவிகள் ஆகிய எல்லா இசைக்கருவிகளையு
ம் வழிவழியாக வடிவமைத்தவர்கள் தமிழ்ப் பாணர்கள்தாம்.
வெறும் பறையை மட்டுமா அப் பாணர்கள் இசைத்து வந்திருக்கவியலும்? பாணர்கள்
புல்லாங்குழலை இசைக்கவில்லையா? குழலுக்குப் பண்களை ஆக்கவில்லையா? அவர்கள்
யாழை இசைக்கவில்லையா? யாழுக்குப் பண்களை வகுக்கவில்லையா? யாழ்ப்பாணன்,
சிறுபாணன், பெரும்பாணன் என்றெல்லாம் பண்டைத் தமிழிலக்கியம் காட்டுகிறதே!
பண்டைய கிரேக்க அறிஞனான பித்தகோரசு தமிழகத்திற்கு வந்து இங்கிருந்த
ஏழிசையைக் கற்றுச்சென்றான் என்றும், பின்னர் ‘ஆக்டேவ்’ (Octave) எனும்
எட்டாவது நாணை யாழில் கட்டி ஐரோப்பிய இசைக்கு அடிகாலிட்டான் என்றும்
வரலாறு கூறுகிறதே! அந்தக் கிரேக்கனுக்கு ஏழிசையைச் சொல்லிக்கொடுத்தவன்
தமிழ்ப் பாணனாகத்தானே இருந்திருக்கவியலும்?
ஏழிசையை உலகுக்குத் தந்தவர்கள் பரனும் பரையும்தானே?
தமிழ் வேந்தர்களோடும் வேளிர்களோடும் குறுநில மன்னர்களோடும்
அணுக்கமாயிருந்த பாணர்கள், வடுகப் படையெடுப்புகளுக்குப்பின் வாழ்விழந்து
வலுவிழந்து பெயரிழிந்து தளர்ந்து பரையரில் ஒரு பிரிவினராய் எஞ்சி
நின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக