வெள்ளி, 6 அக்டோபர், 2017

குணா ஆதங்கம் தப்பு தப்பட்டை தெலுங்கர் கொண்டுவந்தது மத்தளம் இருகட்பறை சாம்பவர் வடமொழி பெயர் பறையர் சாதி 3

பரையரில் ஒரு பிரிவினராய் எஞ்சி நின்றனர். பறைகள் பல வகை. அவ்வாறிருக்க,
ஏழிசையைப் படைத்தவரும் ஏழு சுரங்களை மீட்டவருமான பாணர் மரபையும்
உள்ளடக்கிய பரையரைப் தெலுங்கர் வடித்த “தப்பட்டை” எனும் பறையோடு
முடிச்சுப்போட்ட
ு அதனோடு அடையாளப்படுத்து
வது காலத்தின் கோலம். தப்பட்டையைக் காட்டி இதுதான் பறையெனக் குறுக்குவது
மிக மிகக் கொடுமை. ‘தப்பட்டை’யாகிய பறைதான் உம் இனத்து அடையாளமென
வடுகர்கள் சொல்லிவைத்ததை பரையரே நம்பிக் கிடப்பது அதைவிடக் கொடுமை.
சிவனுக்குரிய பறை, உடுக்கை. அம்மனுக்குமுரிய பறை, அதே உடுக்கை. பறையைக்
குறிக்கும் ‘சாம்பு’ எனும் சமற்கிருதச் சொல்லைவைத்துத் தாங்கள்
‘சாம்வர்கள்’ எனப் பறையரில் சிலர் சொல்லிக்கொண்டனர். தமிழ்ப்பெயரை
விட்டொழித்துச் சமற்கிருதப் பெயரைச் சூடிக்கொள்வது பெருமை எனக் கருதியது,
பரையர் சிலரிடம் எழுந்த சமற்கிருத மயக்கத்தைத்தான் காட்டும். ‘சாம்பவன்’
என்பது சிவனைக் குறிக்குமென்பதால் ‘சாம்பவர்’ ஆனோமென அவர்கள்
கூறுகின்றனர். சிவனுக்குரிய பறை உடுக்கை என்பதால், அவர்களின் சாதிப்பெயர்
‘உடுக்கையர்’ என்றுதானே இருக்க வேண்டும். சிவனின் உடுக்கையை முழக்கி
‘இதுதான் பறை இசை’ என்றுதானே அவர்கள் சொல்ல வேண்டும்? போதாமைக்கு,
‘நடுசென்டர்’ என்பதைப்போல் ‘சாம்பவப் பறையர்’ என்று வேறு சொல்லிக்கொள்கின
்றனர்.
“புது பறையர்கள்” (Neo-Paraiyar) இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க
மாட்டார்களா? இவர்கள் தம் தலையின்மேல் தாங்களே மண்ணை வாரிப்
போட்டுக்கொள்வது பேரவலம்.
கோலார்த் தங்கவயல் 1887ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக