போட்டுக்கொள்வது பேரவலம்.
கோலார்த் தங்கவயல் 1887ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப்பட்ட
தொழில்நகரம்; இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதன்முதலில் தோன்றிய
பெருநகரம். 1891ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகை 7085; 1901ஆம் ஆண்டில் அது
38,204 என்றானது; 1920ஆம் ஆண்டில் தங்கவயலின் மக்கள்தொகை 90,000.
1940களில் அதன் மக்கள்தொகை ஓர் இலக்கத்தையும் தாண்டியது. அத்
தொழில்நகரத்திற்கு ஆங்கிலேயர்கள் பங்காருப்பேட்டையிலிருந்து தனித்
தொடர்வண்டிப் பாதையைப் போட்டனர். அவர்கள் காலத்தில் அந் நகருக்கு நான்கு
பெரிய தொடர்வண்டி நிலையங்கள் இருந்தன. கோலார்த் தங்கச் சுரங்கங்களுக்கெ
ன்றே சிவசமுத்திரத்தில் காவிரிக்குக் குறுக்கே 1902ஆம் ஆண்டில் புனல்மின்
நிலையம் கட்டப்பட்டது; இந்தியாவிலேயே முதன்முதலில் கட்டப்பட்ட புனல்மின்
நிலையம் அது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரையில் அத் தொழில்நகரத்தின்
மக்கள்தொகையில் 95% பேர் பரையர்களாயிருந்தனர்.
1942ஆம் ஆண்டில் அம்பேட்கர் தொடங்கிய ‘பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு’
(Scheduled Castes Federation) தங்கவயலில் காலூன்றியபின், சாவு உட்பட
எந்த நிகழ்வுக்கும் பரையர்கள் பறை கொட்டக் கூடாது எனும் தடை வந்தது.
யாராவது பறை கொட்டினால், ‘பெடரேசன்’ ஆட்கள் உடனே வந்து தடுத்து
நிறுத்திவிடுவர். பறை கொட்டும் வழக்கம் இங்குமங்கும் ஓர் எச்சமாக
நீடித்தாலும், பரையர்கள் பறை கொட்டுவது அங்குப் பெரும்பாலும்
நின்றுவிட்டது. அந்தப் ‘பெடரேசன்’, பொதுவுடைமைக் கட்சியின் செங்கொடி
சங்கத்தின் வளர்ச்சியால் தேய்ந்து குன்றியது; 1956ஆண்டில் அது
‘குடியரசுக் கட்சி’யானது. அப்போதும்கூடத் தங்கவயல் பரையர்கள் தங்களின்
நிகழ்வுகளுக்குப் பறை கொட்டுவது தவிர்க்கப்பட்டது. காலப்போக்கில் அத் தடை
மெல்லத் தளர்ந்தது.
ஆனால், தமிழகத்தில் அண்மையில் தோன்றிய ‘தலித்தியத்தால்’ பறை கொட்டுவது
இன்று ‘பறை இசை’யாகப் புத்துயிர் பெற்றுள்ளது. தலித்தியத்தின் குறியீடாக
இன்று அஃது உள்ளது. வரலாறு தலைகீழாகிவிட்டது!
“சாக்கிய முனி”கள் எனக்குள் உசுப்பிவிட்ட அறச்சீற்றத்தால்தான்
மேற்போந்தவற்றை யெல்லாம் எழுத நேர்ந்தது. (30.7.2017)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக