Gunaseelan Samuel
1992 செப்தம்பர் 10-12 ஆகிய நாட்களில் பாட்டாளி மக்கள் கட்சி சென்னையில்
‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை’ நடத்தியது.
தமிழர்களை வழிநடத்த ‘மருத்துவர்’ வடிவில் தலைவர் ஒருவர் கிடைத்துவிட்டார்
எனும் எண்ணம் உச்சியில் கூடுகட்டிக்கொண்ட காலம் அது. அம் மாநாட்டுப்
பணிகளைத் தலைமேல் தாங்கிகொண்டு பம்பரமெனச் சுழன்று பின்னிருந்து
பணியாற்றிவந்தவர்கள் மறைந்த முனைவர் ந. அரணமுறுவலும் கி.
வெற்றிச்செல்வனும் ஆகிய தனித்தமிழ் இயத்தவர்தாம். இந் நிலையில், எந்தக்
கட்சி மாநாட்டுக்கும் சென்றிராத நான், முன்கூட்டியே சென்னைக்குத்
தலைதெறிக்க ஓடிவிட்டேன்.
மாநாட்டின் முதல்நாள் இரவில் ‘நந்தனார் கதை’ நாடகமும், இரண்டாம் நாள்
இரவில் வெண்களூரிலிருந்த மறைந்த புலவர் மகிபை பாவிசைக்கோ எழுதி இயக்கிய
பாவேந்தரின் ‘தமிழச்சியின் கத்தி’ நாடகமும் அரங்கேற்றப்படுமென
அழைப்பிதழில் போட்டிருந்தனர்.
முதல்நாள் முடிவில் ‘நந்தனார்’ நாடகம் தொடங்கியது. மருத்துவர் ஐயா
அரங்கில் முன்வரிசையில் அமர்ந்து நாடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
‘நந்தனார்’ நாடகத்தின் தொடக்கத்தில் தப்பட்டை (பறை) இடியென
முழக்கப்பட்டது. அடுத்து ஒருவர் மத்தளம் வாசிக்க, பரதநாட்டியம் ஆடினாள்
ஒரு நங்கை. இசையில் எந்த இசை உயர்ந்தது - பறையிசையா அல்லது பிராமணியம்
தழுவிக்கொண்ட மதங்க இசையா - எனும் வினாவை எழுப்புவதாக அந் நாடகத்தின் கரு
இருந்தது.
மத்தளத்தின் பழைய பெயர் ‘இருகட் பறை’ என்பது அவர்களுக்குத் தெரியவில்லை போலும்.
[திருவாதவூரை ஆண்டுவந்த அரசன்தான் நந்தன் என்றும், ‘மேல்சாதிக் கடவுளான’
சிவனை வணங்க சிதம்பரம் கோவிலுக்குச் சென்றபோது அவனைத் தீயில் புகச்
செய்ததால் ‘திருநாளைப்போவார்’ ஆனான் என்று இட்டுக்கட்டி ‘நந்தனின் கதை’
என்றனர் என்றும் அயோத்திதாசர் சொல்லிவந்தது ஒருபுறம் இருக்கட்டும்.
(அயோத்திதாசர் சிந்தனைகள்-1, தொகுப்பாசிரியர்: ஞான அலாய்சியசு, 1995,
பக்கங்கள் 625-26, 644, 678.)]
மாநாட்டில் நந்தனார் நாடகத்தைக் கண்டு மனம் மகிழ்ந்து நெகிழ்ந்து அந்
நாடகத்தை அடுத்த நாளும் ‘ஒன்சு மோர்’ போட வேண்டுமெனச் சொல்லி மருத்துவர்
ஐயா அரங்கத்திற்கு வந்து அமர்ந்துவிட்டார். இவ்வாறு செய்வதால்
‘தலித்’தியரின் ஆதரவு தமக்குக் கூடுமென நினைத்திருப்பார் போலும்.
இரண்டாம் நாள் போட்ட நந்தனார் நாடகம் முடிய நள்ளிரவு ஆகிவிட்டது. புலவர்
மகிபை பாவிசைக்கோ புகைந்துகொண்டிருந்தார். அடுத்து ‘தமிழச்சியின் கத்தி’
நாடகம் ஒருவாறு தொடங்கியபோது, பெரிய அரங்கிலிருந்த அத்தனை பேரும்
தூக்கத்தின் அடிமடியில் கிடந்தனர். நாடகம் முடிந்தவுடன்,
வெண்களூரிலிருந்து சென்றிருந்த நாங்களெல்லாம் மேடை மீதேறித் ‘தமிழ்நாடு
தமிழருக்கே!’ என்று ஓங்கி முழங்கினோம். ஒருவர்கூட ‘தமிழ்நாடு
தமிழருக்கே!’ என்று மறுகுரல் கொடுக்கவில்லை. வெண்களூர்த் தமிழர்கள் விழி
பிதுங்கி நின்றோம்.
இது எனக்குள் பெரிய மன அழுத்தத்தைத் தந்தது. அதனால், எனக்குள் எழுந்த
எண்ணங்களை அசைபோடலானேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக