வெள்ளி, 6 அக்டோபர், 2017

கவுண்டர் பட்டம் கொண்ட சாதி கொங்கு வேளாளர் முத்தரையர் வன்னியர் வேட்டுவர்

Rajasubramanian Sundaram Muthiah
கவுண்டர் பட்டம்
தமிழ்நாடரசு இடவொதுக்கீட்டு பட்டியலில் கவுண்டர் என்ற பெயர் உள்ள குழுக்கள்
பிற்படுத்தப்பட்ட சமூகங்கள்:
26. கவுண்டர்
27. கௌடா (கம்மாலா, கலாலி மற்றும் அனுப்பக் கவுண்டர்)
40. கல்வேலிக் கவுண்டர்
56. கொங்கு வேளாளர்கள்(வெள்
ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர், நரம்புக் கட்டிக் கவுண்டர், திருமுடி
வேளாளர், தொண்டு வேளாளர், பாலக் கவுண்டர், பூசாரிக் கவுண்டர், அனுப்ப
வேளாளக் கவுண்டர், குரும்பக் கவுண்டர், படைத்தலைக் கவுண்டர், செந்தலைக்
கவுண்டர், பாவலன்கட்டி வெள்ளாளக் கவுண்டர், பால வெள்ளாளக் கவுண்டர்,
சங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் ரத்தினகிரிக் கவுண்டர் உடபட)
94. பூலுவ கவுண்டர்
117. ஊராளிக் கவுண்டர்(திருச்
சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்
நீங்கலாக) மற்றும் ஒருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, தேனி,
திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர்,
பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் நீங்கலாக)
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள்:
26. வன்னிய குலச் சத்திரியர்(வன்ன
ியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி,
பள்ளி மற்றும் அக்னிகுல சத்திரியர் உட்பட)
30. புன்னன், வேட்டுவ கவுண்டர்
40. வேட்டுவ கவுண்டர்
சீர்மரபினர்:
48. புன்னன் வேட்டுவ கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர்
மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்)
61. ஊராளிக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும்
புதுக்கோட்டை மாவட்டங்கள்)
68. வேட்டுவக் கவுண்டர் (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர் மற்றும்
புதுக்கோட்டை மாவட்டங்கள்)
உட்பிரிவுகளாக:
1. முத்தரையரின் உட்பிரிவுகளில் உள்ள முத்தரைய ஊராளி கவுண்டர்
2. கொங்கு இடையர்களில் உள்ள கவுண்டர் பட்டம்
3. பழங்குடிகள் பிரிவில் உள்ள மலைவாழ் மக்களில் உள்ள மலையாளக்கவுண்டர்
இந்த பதிவில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் 27ஆம் எண்ணில் இருக்கும்
கவுடா மட்டும் பிறமொழியினர்னு நினைக்கிறேன். மற்றவர்கள் அனைவரையுமே
தமிழர் என்று குணா தன் "தமிழின மீட்சி" நூலில் கொடுத்துள்ளார். ஆக
கவுண்டர் பட்டம் கொண்டோரில் புன்ன வேட்டுவ கவுண்டர், வேட்டுவ கவுண்டர்
என்ற பெயரில் உள்ள நான்கு பிரிவுகள் வேட்டுவர் ஏன்று தெளிவாக தெரிகின்றன.
கொங்கு வேளாளர், வன்னியர் போன்றவர்களுக்கு உட்பிரிவுகளாக கவுண்டர்
இருப்பதால் அவர்களும் முறையே கொங்கு வேளாளர், வன்னியர் எனத்தெரிகிறது.
உட்பிரிவுகளில் பட்டம் போடுபவர்களும் முத்தரையர், இடையர், மலையாளிகள்
எனத்தெளிவாக தெரிகிறது.
ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் 26ஆம் எண்ணில் கவுண்டர் என்ற
பிரிவினரும், ஊராளிக்கவுண்டர், கல்வேலிக்கவுண்டர், பூலுவக்கவுண்டர் போன்ற
பெயர்களிலும் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை. அதை
தெரியப்படுத்தினால் நலம்.
மற்ற விவாதங்கள், தமிழர்களுக்குள் கவுண்டர் பட்டம் கொண்டு சிண்டுமுடியும்
நாரத வேலைகள் கருத்துக்களில் இருந்து உடனடியாக நீக்கப்படும்.
6 நிமிடங்கள் · பொது

Arunkumar P
பூலுவ கவுண்டர் வேட்டுவரின் பூவலியர் பிரிவான பூலுவ குல வேட்டுவரினம்.

14 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. வேட்டுவ கவுண்டர் இனத்தை சேர்ந்த பிரிவுகள் மாவிலுவர்,காவிலுவர்,பூவிலுவர்,வேடர்,வேட்டுவர். இதில் பூவிலுவர் மருவி பூலுவர் (பூலுவ கவுண்டர்) ஆனது...

    பதிலளிநீக்கு
  3. ஊராளி கவுண்டர் என்பவர்கள் திருச்சி மாவட்டம் கரூர் மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் சேலம் மாவட்டம் ஈரோடு மாவட்டங்கள் மற்றும் சில மாவட்டங்களில் உள்ளார்கள் மாமன்னர்கள் பொன்னர் சங்கர் கள் பொன்னிவள நாடு வீரப்பூர் ஆகிய கோவில்கள் இவர்களின் பூர் விய கோவிலாகும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னர் சங்கரை வணங்குவோம் ஆனால் எனக்கு தெரிந்தவரை யாரும் குலதெய்வம் என்று கூறியதில்லை.

      நீக்கு
  4. மலையமான் கவுண்டா்கள் இருக்கிறாா்கள்

    பதிலளிநீக்கு
  5. கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி அருகில் உள்ள புரவிபாளையம் ஜமீன் வகையறா எல்லோருமே பூலுவக்கவுண்டர்.இவர்களே கொங்குமண்டலத்தில் பூர்வீகமாக வாழ்ந்தவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊராளி கவுண்டர்கள் முத்தரையர் உட்பிரிவு இல்லை

      நீக்கு
    2. முத்தரையர் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

      நீக்கு
  6. கல்வேலிகவுண்டர் வேளாளகவுண்டரே உதாரணமாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் வாழ்பவர்கள் கொங்கு வேளாள கவுண்டர் என்றே சாதியை பயன்படுத்துகின்றனர்

    பதிலளிநீக்கு
  7. புரவிபாளைய பாளையப்பட்டு ஜமீன் கோபண்ண மன்றாடியாரின் பூலுவக்கண்டர் வம்சாவளி என்பதில் பெருமை கொள்கிறேன்.
    ஆதியில் கொங்கில் ஒரு பாதி பூலுவநாடக இருந்தது.வாளரச மரபினரான பூலுவக்கவுண்டர் ஒரு காலத்தில் கொங்கு இருபத்து நான்கு நாடுகளையும் கட்டி ஆண்டனர், பிறகு காணியாளர் பட்டம் பெற்றனர்.முதன்முதலாக காளைகட்டி ஏருபூட்டிய இனம் பூலுவக்கவுண்டரே,இந்த வரலாறுகள் அனைத்தும் திருடப்பட்டு விட்டது..
    பூலுவக்கவண்டர் காலமாற்றத்தாலும்,பிற சாதிகளின் அரசியல் வளர்ச்சி,வரலாற்று திருட்டு,படிப்பறிவின்மை போன்றவற்றால் தங்கள் காணிகளை இழந்து சமுதாயத்தில் பின்தங்கி விட்டனர்..
    காசு,பணம்,சொத்து மதிப்பில்
    எந்த சாதி வேண்டுமானாலும் பெரிய ஆளாக இருக்கலாம் ஆனால் சாதிசனத்தில் எங்களுக்கு இணை எவருமில்லை..

    பதிலளிநீக்கு
  8. பூலுவக்கவுண்டர், வேட்டுவக் கவுண்டர்,மாவலிக்கவுண்டர்,
    காவிலியக்கவுண்டர்,வேடர் ஆகிய ஐந்து சாதிகளும்
    ஒரு பிரிவினரே...

    பதிலளிநீக்கு