திங்கள், 9 அக்டோபர், 2017

சிவன் தமிழர் மதம் சைவம் பாவாணர் இலக்கியம் தட்சிணாமூர்த்தி

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன்
சிவமதம் தமிழர் மதம் என்பற்கு ஐயன் பாவாணர் கூறும் 12 சான்றுகள்..
# தமிழர்_மதம் நூலிலிருந்து....
+++++++
1. "சேயோன் மேய மைவரை யுலகமும்" என்று முருக வணக்கம் தமிழகத்து
குறிஞ்சிநிலத்திற் குரியதாக சொல்லப்பட்டிருத்தல் (அகத்.5),
2. சிவபெருமான் வெள்ளிமலை யிருக்கையும்,மலை மகள் எனும் பெயரும்,கொன்றை
மாலையும், காளையூர்தியும்,சூலப்படையும்,
அகம்கமனியும் குறிஞ்சித்தினைக் குரியனவாதல்...
3."தில்லையுட் கூத்தனே தெண்பாண்டி நாட்டானே"
"மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"
"மந்திர மாமலை மகேந்திர வெற்பன்"
"பாண்டி நாடே பழம்பதி யாகவும்"
"தெண்ணாடுடைய சிவனே போற்றி யெந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி"
என்று மாணிக்கவாசகர் கிபி 3 ஆம் நூற்றான்டிற் பாடியிருத்தல்....
4. சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும், செந்தமிழ்
பாண்டிநாட்டு தலை நகராகிய மதுரையில் நிகழ்ந்தமை....
5.சிவபெருமானின் என்(எட்டு) மறச்செயலகமும் (அட்ட வீரட்டம்)
தமிழ்நாட்டிற்குள்ளிருத்தல்...
"பூமன் சிரங்கண்டி யந்தகன் கோவல் புரமதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் குறுக்கை யமன்கட வூரிந்தக் காசினியில்
தேமன் னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே"
6.சிவன் நடஞ்செய்யும் அம்பலம் ஐந்தும் தமிழ்நாட்டிலிருத்தல்..
7.முருகனும் சிவனும் வேதத் தெய்வமன்மை..
8.உருத்திரன்,இந்திரன்,அக்கினி ஆகிய மூவற்கும் வேதத்தில் "சிவ" என்னும்
அடைமொழி, நல்ல அல்லது மங்கல என்றே பொருள் படுதல்...
9.வேத ஆரியர்,வடநாட்டு சிவனியரை, சிவக்குறி வணக்கம் பற்றி ஆண்குறி
வணக்கத்தார் (சிச்ன தேவா) என்று பழித்தமை...
10. ஆயிரத்தெண் சிவத்திருப்பதிகளுள் ஒரு சிலவே வடநாட்டிலிருத்தல்..
11. கல்லாலமர நிழலில் நால்வர்க்கு திருமறை கற்பித்த திருவாசிரியனை
தென்முத நம்பி (தக்ஷணாமூர்த்தி) எனல்....
12.சிவன் எனும் சொல் செவ்வண்ணன் என்று பொருள்படுதலும், சிவனுக்கு அழல்
வண்ணன், அந்திவண்ணன், மாணிக்ககூத்தன் என்னும் பெயர்களுன்மையும்......
++++++++++
சிவமத வழிபாட்டிற்கான அத்தனை வார்த்தைகளையும் வேர்சொல் வழி பிரித்து
மேய்ந்த பிறகு இறுதியாக ஐயன் பாவாணர் வைக்கும் 12 காரண உவமைகள் இவை....
சிவமதம் தமிழரின் முதல் மதம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக