திங்கள், 9 அக்டோபர், 2017

அனிதா மூளைச்சலவை மூலம் தற்கொலை போராடுவோர் ஐஎஸ் தீவிரவாதிகள் கிருஷ்ணசாமி பேட்டி

தேசவிரோதிகள், ஐஎஸ் ஆதரவாளர்கள், தமிழ்த் தேசியவாதிகளால் தமிழகத்தில்
போராட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி
Updated: Thu, Sep 7, 2017, 13:10 [IST] டெல்லி: தேசவிரோதிகள், ஐஎஸ்
ஆதரவாளர்கள், தமிழ்த் தேசியவாதிகளால் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதாக
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:
அரியலூர் மாணவி அனிதா மூளைச் சலவை செய்யப்பட்டுதான் தற்கொலை
செய்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
சிபிஐ அல்லது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் அதன் முன்பாக இந்த
ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தயாராக உள்ளேன். என் மகளுக்கு மெடிக்கல் சீட்
கிடைத்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் எதிர்கொள்ளவும் தயாராக
இருக்கிறேன்.
தருமபுரி இளவரசன், டிஎஸ்பி விஷ்ணுபிரியா ஆகியோரது மரணத்தில் சந்தேகம்
இருப்பது போலவே அனிதாவின் தற்கொலையிலும் சந்தேகம் உள்ளது. இந்த
காலத்துக்கு தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கத்தக்கது அல்ல.
வீடியோ
News 7 Tamil இடுகையிட்டார்
தமிழகத்தில் தேசவிரோதிகள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ளவர்கள்தான்
போராடுகின்றனர். தமிழ்நாட்டை துண்டாட நினைக்கும் இந்திய தேசியத்துக்கு
எதிரான தமிழ்த் தேசிய குழுக்கள் தங்களது போக்கில் போராட்டத்தை கொண்டு
செல்ல முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
எம்.எல்.ஏவி

http://tamil.oneindia.com/news/india/dr-krishnaswamy-demands-cbi-probe-anitha-s-death-295146.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக