வெள்ளி, 6 அக்டோபர், 2017

சோழர் நாடார் தொடர்பு

Rachinn Rachinn Rachinn
மலையாளத்து சாணார்களின்?!தி
ருமண வாழ்த்துப்பாடலில் இடம் பெற்றுள்ள செய்திகள் மிகுந்த வரலாற்று
முக்கியத்துவம் பெற்றவையாகும். இன்று பாடப்படுவது அரிது
என்றாகிவிட்டாலும் கடந்தகாலத்தில் பாடப்பெற்றன.ஒரு
கரையில் அவர்கள் குறித்து எதிர்ர்மறையாக சித்தரித்துக்கொ
ண்டிருக்கும்போதும் அ து கோவில்களில் விற்கவிதை வழியாகவும் திருமணத்தில்
வலங்கை வாழ்த்தாகவும் வரலாற்றை காற்றில் மிதக்கச்செய்தனர். //வளம்பெறும்
செம்பியர்க்கு வாய்த்த தம்பி நாடாக்கள்//என்று குறிப்பிடுகிறது.இதையே
கயத்தாருக்கு அங்கிருள் அமைந்த கி.பி.11ஆம் நூற்றா ண்டைய கல்வெட்டு
சுட்டுகிறது. //
தம்பித்துணை நாடன் என்கிறது.தம்பியின் பெயரில் சோழ வளநாடு ஒன்றை சோழன்
ஏற்படுத்தினான்.அது மதுராந்தகம் கல்வெட்டால் தெரிய வருகிறது.தம்பியின்
பெயரால் சோழன் ஏற்படுத்திய கோவில் //தம்பித்துணை விண்ணகர்//
தென்பாண்டி நாட்டில் திருவைகுண்டம் அருகில் இருக்கிறது.கி.பி.1595ஆம்
ஆண்டில் திருக்குற்றால தல புராணத்தைத் தமிழ்காசி நாடன் என்ற
தென்காசிப்பாண்டியன் பாடி அரங்கேற்றியுள்ளான். ''தாடாளன் சோழன் தனிச்
சோழன் தேசமதில் நாடாண்மை பெற்று நன்மை கிட்டிக்கொண்டவர்கள்//என்கிறது
நாடார்களின் திருமண வாழ்த்துப்பாடல் (இப்போது சமத்துவ உலகில் சினிமா
பாடல்கள்தான் பாடுகிறார்கள்).
தாடாளன் என்ப்து வைணவ வழக்காகும்.திரு விக்கிரமானாகிய (விஷ்ணு )மாபலி
இப்பூமிக்குள் தன தாளால் தாழ்சசெய்ததால் அவன் தாழ்தாளன் ஆவான்.அவனுக்கிண
ையானஆட்சியாளர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
(நாடன் நாடான் போன்ற சொற்கள் இது இன்றைய நாடர்களைக் குறிக்குமா என்ற ஐயம்
எழவியலாது (16ம் நூற்றாண்டு அந்தணர்களை குலகுருக்களாக கொண்ட தமது
மடங்களில் சோழவள நாடன் என்று கையெழுத்திட்டுள
்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டணம் அச்சம்பாடு கல்வெட்டில்
(கிபி.1645 )நாடாக்கள் நாடாவான் நாடன் நாடான் நடாத்தி நாடாக்கள் என
அவர்கள்தான் சுட்டப்பெறுகின்றனர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக