வெள்ளி, 6 அக்டோபர், 2017

பரதேசி படம் நாவல் தழுவி அதை எழுதியவர் பாதிரியார் தவறான சித்தரிப்பு தொழிலாளர் தேயிலை மதமாற்றம்

Ragesh Ð Antony
வாசுகி பாஸ்கர்
போன வாரம் கடவுள் இருக்கான்
குமார் படம் பார்த்து தொலைத்தேன்,
அதில் நாயகன் ஒரு பெண்ணை
காதலிக்கிறான், அந்த பெண்ணை
திருமணம் செய்ய வேண்டுமென்றால்
"குடும்பமாக கிருஸ்துவ மதத்திற்கு
மதம் மாற வேண்டுமென்று அந்த
பெண்ணின் அப்பா கோரிக்கை
வைக்கிறார்.
நாயகனும் இதை தன் நண்பரான
ஆர்ஜே பாலாஜியிடம் சொல்கிறார்,
அப்போ ஆர்ஜே ஒரு டயலாக்
சொல்றார் "பரதேசி படத்தில வர்ற
father மாதிரி பாக்குறவனை எல்லாம்
மதம் மாற சொல்றான்" என்று அந்த
வசனம் வருது.
ஷங்கர் படத்தை போல சமூக கருத்து
பேசும் ஆர்ஜே பாலாஜிக்கு இதன்
வரலாறு எல்லாம் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை,
ஆனால் பாலா என்கிற அயோக்கிய
அரசியல் பேசியவரால் இது
எங்கெங்கெல்லாம் எதிரொலிக்கிறது
என்று பாருங்கள்.
மதம் மாற்றும் கோமாளிகள் எங்கும்
உண்டு, அவர்களது
கோமாளித்தனங்களை யாரும்
நியாயப்படுத்த போவதில்லை, ஆனால்
பரதேசி படத்தில் டாக்ட்டராக
வருகிறவர் தான் அந்த நாவலையே
எழுதியவர், தேயிலை தொழிலாளரின்
நலம் சார்ந்து சிந்தித்தவர், அவர்
காலத்திற்கு பின்பு தான் யூனியன்
அமைகிறது, அவர் தான் பி.எச்.
டேனியல். தேயிலை தோட்ட
பிரச்சனைகள் அவரின் காலத்திற்கு
பின்பு தான் ஆவணப்படுத்த
படுகிறது, ஆனால் பாலா அந்த
கதையவே எடுத்து அந்த
எழுத்தாளரையே கோமாளியாக
சித்தரித்த அயோக்கியன்.
இது எங்கெங்கெல்லாம்
எதிரொலிக்கிறது என்று பாருங்கள்,
மதமாற்று விவகாரங்களை பேசுகிற
சமூகம், அதற்கான பின்னணியில்,
கிருஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக
மாறியதில் உளவியல் பின்னணியை
இதுவரை யாரவது பேசி
இருக்கிறார்களா? என்றால், ஆழமாக
இன்னும் யாரும் இல்லை.
மேலோட்டமாக தன் சொந்த
திரைக்கதைக்காக மாற்றியமைக்கப்ப
ட்ட காட்சிகள், அடுத்தடுத்து ஆர்ஜே
பாலாஜிக்களால் எப்படி முன்னெடுக்க
படுகிறது என பாருங்கள்.
இந்திய வரலாறு, பாலா போன்ற
அயோக்கியர்களால் இப்படியாக
உருவாக்கப்பட்டது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக