வெள்ளி, 6 அக்டோபர், 2017

காசி கோவில் பிராமணர் கிடையாது ஔரங்கசீப் சகிப்புத்தன்மை முகலாயர்

Jose Kissinger
பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது
வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள்
வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது
குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து
செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை
ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல
அனுமதியளித்தார்.
தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில்
நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர்.
ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை.
இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த
அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது
விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும்
வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள
சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள
சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில்
முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம்
நடைபெற்றிருந்தது.
நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர்
ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத்
தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே
இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால்,
கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர்
சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.
இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக
ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த
பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and
Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.
மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு
வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. காவிகள்
ஷாகாவில் மூளைச்சலவை செய்வது வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல்
ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக
இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது
ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?
முனைவர் அ. தஸ்தகீர்.(கட்டு
ரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த
வரலாற்றாசிரியர்)
ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71
இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The
Feathers and the Stones) என்ற தனது நூலிலும் பாட்னா அருங்காட்சியகத்தின்
பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ள
னர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன
கூறுகிறார் என்று பார்ப்போம்.
P.N.Pande
“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his
senior officers to search for the Rani. Ultimately they found that the
statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When
the statue was moved. They saw a flight of stairs that led to the
basement. To their horror, they found the missing Rani dishonoured and
crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas
expressed their vociferous protests. As the crime was heinous the
Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred
precinets has despoiled. Lord Viswanath may be moved to some other
place. The temple be razed to the ground and the Mahant be arrested
and punished.”
P.N. Pande, Islam And Indian Culture, Page 55
5 மணிநேரம் · பொது
மேகநாதன் முனுசாமி மற்றும் 54 பேர்
த.க. நிதி
இன்றும் காசி விஸ்வநாதரை அர்ச்சிக்கும் உறிமை பார்ப்பனருக்கு இல்லை. பொது
மக்களே தொட்டுப் வணங்கலாம். இன்னொரு அவுரங்க சீப் வந்தால் இந்தியா
திறுத்தும் போலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக