வெள்ளி, 6 அக்டோபர், 2017

மருதாணி நல்ல கதிரியக்கம் உள்வாங்குதல் உள்ளுறுப்பு சுத்தம் உடல் குளிர்ச்சி பௌர்ணமி மருத்துவம் இல்லறம் மெய்யியல்

தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர்
காரணம் ஆகும் .....
உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன்சுலினை சுரக்க இயலும்
உடலில் வெப்பம் அதிகமானால் இன்சுலின் சுரப்பு குறையும் என்பதை நாம்
அறிவோம் உடலில் உள்ள வெப்பத்தை பித்தத்தை குறைப்பதில் முதன்மையான மூலிகை
மருதோன்றி எனப்படும் மருதாணி இது ஓர் கற்பமூலிகையாகும் ......
இரத்த சீர்கேடுகள் தான் எயிட்ஸ் புற்றுநோய் சர்க்கரை நோய் என அனைத்து
வியாதிகளுக்கும் காரணம் என்பதையும் நாம் அறிவோம் அதனால் தான் பால்வினை
நோய் குஷ்டரோகம் போன்ற நோய்களுக்கு இதன் வேர் பட்டைகளை கசாயமாக
பயன்படுத்த காரணம் இது இரத்ததில் உள்ள கிருமிகளை அழித்து
உள்ளுறுப்புகளுக்கு ஊட்டத்தை வழங்குகிறது என்பதால் தான்
இதனை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உள்ளுறுப்புகள் வளமை
பெறுவதால் தான் இது கற்பமூலிகை....
மருதாணியை உள்ளங்கை உள்ளங்காலில் இடுவதற்கான காரணம் அங்கு
அமைந்திருக்கும் சக்கரங்கள் வழியாக ஊட்டச்சத்துக்கள் கடத்தபடுகிறது
குறிப்பாக காஸ்மிக் கதிர்களை உள்வாங்கும் சக்தி இந்த மருதாணிக்கு இருக்க
கூடும் ஏனெனில் பவுர்ணமி அன்று மருதாணி இட்டால் ஒருமணி நேரத்தில்
சிவக்கும் சிவப்பு பத்து நிமிடங்களில் சிவந்தும் போகும்(இது எனது சுய
அனுபவம் உணர்ந்த ஒன்று) காஸ்மிக் கதிர்வீச்சு பவுர்ணமி அன்று தான் அதிகம்
இருக்கும் என்று நவீன விஞ்ஞானம் ஒப்புகொள்கிறது நமது பண்டைய
திருவிழாக்கள் பெரும்பாலும் பவுர்ணமி இரவில் நடைபெறுவதற்கு காரணமே இந்த
காஸ்மிக் கதிரியக்கத்தை உணர்ந்த்தால் தான் அவ்வாறு செய்திருக்க கூடும்
மனநோய்க்கு மருதாணி சிறந்த மருந்து என்ற குறிப்புகளையும் உற்று
நோக்கியதால் உணர்ந்த ஒன்று இதை பற்றி பெறிய ஆய்வே செய்யலாம் சரி
விசயத்திற்கு வருவோம் ....
மருதாணியை ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்துங்கள் அதன் மூலம்
உடலில் உள்ள பித்தத்தை வெளியேற்றி நோய்கள் அண்டாத உடலை பேணுங்கள் ....
மருதோன்றி என்று பெயர் வரகாரணம் சித்தர்கள் இதை பயன் படுத்தி ஒரிடத்தில்
இருந்து இன்னோர் இடத்தில் தோன்றியதால் தான் என்ற செவிவழி செய்தியும்
உண்டு.....
இதன் அருமை பெருமைகளை உணர்ந்தவர்கள் மேலாதிக்க விபரங்களை தெரிவித்தால்
அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக