Joseph Sathyan Kishore
5 மணிகள் ·
இடிந்தகரையும்....தைவான் கப்பலும்.
என் தாத்தாவின் வீடு இடிந்தகரையின் நடுபகுதில் கடற்கரை ஓரத்தில் அமைந்த
திண்ணை வீடு. கடலலைகள் அடிக்கடி வந்து அந்த திண்ணையை முத்தமிட்டு
செல்லும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீலம் வேய்ந்த கடலும், தூரத்தில்
அந்த மகா சமுத்திரத்தை வளைந்து முத்தமிடும் வானமும் பார்க்க பார்க்க
பிரமிக்க வைக்கும். அந்த பரந்த நீர்வெளியில் ஆங்காங்கே கட்டுமரங்கள்
பழுப்பேறிய பாய்களோடுி கரைநோக்கி அணிவகுக்கும். இங்கு திண்ணையில்
அமர்ந்திருக்கும் பெருசுகள் ஆழியில் தெரியும் பாயை வைத்தே யாருடைய
கட்டுமரம் வருகிறது, மரம் அசைந்து வரும் விதம், காற்று மற்றும் நீரோட்டம்
வைத்தே இன்று பாடு (மீன் பிடிப்பு) எப்படி இருக்கும் என்று ஆரூடம் கூறிக்
கொண்டிருக்கும். இடையிடையே அவர்கள் தொழில் செய்யும் போது நிகழ்த்திய
சாகசங்களையும் அவிழ்த்து விடுவார்கள். அதை கேட்டு கேலியும் கிண்டலும்
கலந்து இன்னொரு பெருசு காலை வாரிவிடும்.
ஆடி மாசம் என்றால் காற்று கடுமையாக இருக்கும். ஆழியில் பெரும் வெள்ளம்
உயர உயர கிளம்பி கரை நோக்கி வரும் கட்டுமரத்தை கவிழ்த்துவிடும்.
கவிழ்ந்து மிதக்கும் கட்டுமரத்தை பிடித்து கொண்டு உடைமைகளையும் உயிரையும்
காப்பாற்ற எம் உறவுகள் போராடும். அவர்களுக்கு உதவ பக்கதில் வரும்
கட்டுமரங்கள் விரையும், கரையிலிருந்தும் பலர் போய் உதவுவார்கள். நடக்கும்
நிகழ்வுகள் ஒரு சினிமா பார்ப்பது போல் இருக்கும். ஆனால் எம் உறவுகளோ இது
எதை பற்றியும் அலட்டாமல் அன்றாட நிகழ்வுகள் போல் கடந்து போய்க்கொண்டே
இருப்பார்கள். இதுதான் எம் நெய்தல்நில வாழ்க்கை. இன்று போல் அன்று
இயந்திரம் பொருத்திய பிளாஸ்டிக் படகுகள் இல்லை. பெருங்கனம் கொண்ட
கட்டுமரமும், பருத்தி நூலில் செய்த பாயும்தான். ஆனால் அவற்றை வைத்து
அவர்கள் செய்த சாகசம், வேறு எந்த இனத்தாலும் செய்ய முடியுமா என்பது
சந்தேகமே. தாத்தா வீட்டு திண்ணையில் அமர்ந்து இப்படி நடக்கும் நிகழ்வுகளை
வேடிக்கை பார்ப்பதுதான் பெரும்பாலான விடுமுறை நாட்களின் பொழுதுபோக்கு. பல
சமயங்களில் பெரிய பெரிய கப்பல்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
தூரத்தில் புள்ளியாக ஊர்ந்து செல்லும். அதோடு நம் கற்பனையும் ஊறும்.
1980 களின் துவக்கம். வருடம் சரியாக நினைவில்லை. கடலில் மீன்பிடிப்பதில்
பல வகைகள் உண்டு. சில வலைகள் அதிகாலையில் சென்று வலைவிரித்து சில மணி
நேரம் காத்திருந்து மீண்டும் அகப்பட்ட மீன்களையும் அந்த வலைகளை எடுத்துக்
கொண்டு கரை திரும்புவது. சில வலைகள் கடலில் கரைதெரியாத தூரத்தில் சென்று
விரித்து விட்டு, மறுநாள் போய் எடுத்து வருவது. இதில் கவனிக்க வேண்டிய
விஷயம் என்னெவென்றால் இன்று போல் அன்று எந்த GPS வசதிகளும் இல்லை.
கரையில் இருந்து புறப்பட்ட திசை, காற்றின் போக்கு, நீரோட்டம் மற்றும்
வானில் தெரியும் சில நட்சத்திரங்களை வைத்துதான் வலை வீசிய பகுதிக்கு
சரியாக சென்று, மீண்டும் அந்த வலையை எடுத்து வர வேண்டும். அந்த வலைகள்
ஏதோ ஒரு காரணத்தால் கிடைக்காமல் போனால் அது அந்த மீனவனுக்கு பெருத்த
வாழ்நாள் நஷ்டம். எப்படியாவது போராடி அவன் அந்த வலை மீட்டு வரதுடிப்பான்.
காற்றும் வலுத்த நீரோட்டம் இயற்கை அளிக்கும் சவால் என்றால், சக
மனிதர்களாலும் நட்டம் ஏற்படும் நிகழ்வுகளும் நடக்கும். பெரிய மீன் பிடி
விசை படகுகளும், பெரிய பெரிய கப்பல்களும் இவர்கள் வலை விரித்திரிக்கும்
பகுதிகளில் தவறி நுழைந்து வலைகள் அறுக்கப்பட்டுவிடும். அப்படி
அறுக்கப்பட்டால் அந்த வலைகளை மீண்டும் கண்டு பிடிப்பது கடினம்.
கிடைத்தாலும் சேதம் ஈடுகட்ட முடியாததாக இருக்கும். அதனால் பெரிய விசை
படகுகள் துறைகளை சேர்ந்த படகுகளுக்கு குறிப்பிட்ட எல்லைக்குள் வர
வேண்டாம் என்று கோரிக்கை வைக்கப்படும். அதையும் மீறி வந்தால் சில படகுகளை
விரட்டி சென்று பிடித்து வருவார்கள். சில பல கட்ட பேச்சு வார்த்தைக்கு
பிறகு படகுகள் விடுவிக்கப்படும். (இயந்திரம் பொருத்திய விசை படகுகளை,
பாய் விரித்த கட்டுமரம் கொண்டு பிடித்து வருவார்கள் என்பது நம்ப
முடிகிறதா? ஆனால் 1980 களில் இது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்).
எல்லைமீறும் விசை படகுகளை பிடித்து வரலாம். பெரிய பெரிய கப்பல்களை என்ன
செய்ய முடியும்? அரசாங்கத்தில் முறையிடதான் முடியும். மீனவன் முறையிட்டு
எந்த அரசாங்கமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமா? ஆக அன்றைய இடிந்தகரையின்
இளைஞர் கூட்டம் முடிவெடுத்தது. ஒரு கப்பலை பிடித்து வர வேண்டும். இந்த
கப்பல்களுக்கும், கண்டு கொள்ளாத அரசுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.
எப்படி முடியும்? சிறிய கட்டுமரங்கள் மூலம், அதுவும் காற்றின் திசையில்
பாய்விரித்து செலுத்தும் அந்த கலத்தின் மூலம் எப்படி அந்த ராட்சத கப்பலை
நெருங்க முடியும்? முடியும்....நடத்தியும் காட்டினர்கள் எம் சகோதரர்கள்.
அந்த நாளும் வந்தது. அதிகாலையில் ஒரு பெரிய கப்பல் இவர்கள் வலை
விரிக்கும் கடல்பகுதிக்குள் சாவகாசமாக புகுந்து மீன் வேட்டையாடும் சமிஞை
கிடைக்கிறது. கையில் கிடைத்த சில உருட்டு கட்டைகள், சில திருக்கைமீன்
வெட்டும் அரிவாள்களோடு ஒரு மரத்திற்கு ஏழெட்டு இளைஞர்கள் என ஐந்தாறு
கட்டுமரங்கள் அந்த கப்பலை நோக்கி பாய்விரித்து புறப்படுகிறார்கள்.
நங்கூரமிட்டு கிடந்த கப்பலை நெருங்கி அந்த கப்பலில் ஏறுகிறார்கள்.
அரிவாளோடும், கட்டைகளோடும் ஒரு கூட்டம் கப்பலில் நுழைந்ததை எதிர்பாராத
கப்பல் சிப்பந்திகள் அதிர்ச்சியடைந்த
ு சுதாரிக்கும் முன் கப்பலின் தொலை தொடர்பு கருவிகள் மற்றும் இயக்கும்
இயந்திரங்கள் இருக்கும் wheel house என்று சொல்லப்படும் கப்பலின்
கட்டுப்பாட்டு அறை அந்த கேப்டனோடு இவர்களின் கட்டுப்பாட்டில். முரண்டு
பிடித்த கேப்டனோடு சில மிரட்டல்களுக்கு பிறகு கப்பல் இடிந்தகரை கரையை
நோக்கி திருப்பபட்டு, தரை தொடா தூரத்தில் நங்கூரமிடப்படுகிறது. கேப்டன்
உட்பட சிப்பந்திகள் அனைவரும், கட்டுமரத்தில் ஏற்றப்பட்டு இடிந்தகரைக்குள்
கொண்டு வரப்படுகிறார்கள். ஒட்டு மொத்த ஊரும் ஏதோ போரில் வென்று
திரும்பும் வீரர்களை வரவேற்க காத்திருப்பது போல் ஒருவித வெற்றி
பரவசத்தில் கடற்கரையில் முகாமிட்டிருந்தது. அது ஒரு தைவானை சேர்ந்த
கப்பல் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். கப்பல் சிப்பந்திகள் அனைவரையும்
ஒரு வீட்டில் தங்கவைத்து நன்றாக உணவும், அவர்களது தேவைகளையும் நிறைவேற்றி
வழக்கம் போல் நெய்தல் நிலத்திற்கேயுரிய விருந்தோம்பலும் நடந்தது. சில
நாட்களுக்கு பிறகு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வந்து பேச்சு வார்த்தை
நடத்தி, அந்த கப்பல் விடுவிக்கப்பட்டது.
அயல்நாட்டு கொள்ளையர்களிடம் இருந்து இந்த நாட்டையும், எம் கடலையும்
காப்பற்றிய இந்த இனம், இன்று உள்நாட்டு கொள்ளையர்களிடம், அணு உலை
அரக்கர்களிடமும் மண்டியிட்டு கிடப்பதுதான் காலத்தின் கோலம்!
Kumarimainthan இன்று உள்நாட்டு மக்களையும் துணை சேர்த்து நம் உரிமைகளை
வென்றெடுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு நெய்தல் நில தமிழக மக்களை அறைகூவி
அழைக்கிறது தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம்.
விரும்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக