வெள்ளி, 6 அக்டோபர், 2017

இராசராசன் தங்கசிலை திருட்டு செப்பு சிலை வைத்தனர் குஜராத்தி நாட்காட்டி 360 நாட்கள் கல்வெட்டு பெரியகோவில் தஞ்சை சோழன் சோழர்

தஞ்சைப் பெரிய கோயில் கருவறை இரட்டைச் சுவர்களால் ஆனது.
தரை தளம்
முதல் தளம்
இரண்டாம் தளம்
இந்த மூன்றிலும் இரட்டைச் சுவர் இடைவெளியில் சுற்றி வரலாம்.
இரண்டாம் தளத்தில் சோழர் கால ஓவியங்கள் மற்றும் மிக அழகான சிற்பங்கள் உள்ளன.
இரண்டாம் தளத்தில் 108 கரணச் சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன.
பார்வையாளர்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்புதல் பெற்று முதல் தளம்
மற்றும் இரண்டாம் தளத்தைப் பார்வையிடலாம்.
அப்படியே விமான உட்கூட்டின் கண்கொள்ளாக் காட்சியைக் காணலாம்.
கட்டணம் ஏதும் இல்லை.
சரி
இந்தத் தரை தளத்தில் உள்ள சுற்றுப் பாதையை மட்டும் ஏன் அடைத்து
வைத்திருக்கிறார்கள் ?
இரண்டு பெரிய கதவுகள் பூட்டப்பட்டுள்ளன.
கருவறையைச் சுற்றி மூன்று கோட்ட ங்களிலும் கம்பிக் கதவு போட்டு அடைத்து
வைத்திருக்கிறார்கள்.
அது ஏன் . ?
உள்ளே என்ன இருக்கிறது. ?
பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ?
ஆய்வாளர்களாவது பார்த்திருக்கிற
ார்களா ?
ஒன்றும் இல்லை என்றால் மக்கள் சுற்றி வந்து வழிபடட்டுமே
அதை ஏன் தடுக்க வேண்டும் . ?
ஆம்
அங்கு தான் நாட் பலி கொள்ளும் பொன்னின் கொள்கைத் தேவர் சிலை இருந்தது.
800 கழஞ்சு எடை
ஏல அரிசியும் இலா மிச்ச வேரும் ஊறிய நீரில் நாள் முச்சந்தியும்
திருமஞ்சனம் ஆடி அருள் செய்தாராம் அந்தக் கொள்கைத் தேவர்
அவர் வேறு யாருமல்லர்.
மன்னன் இராஜராஜன்
அந்தத் தங்கச் சிலையைத் திருடி அப்படியே செம்புச் சிலையாகப் படியெடுத்து
மாற்றி அதையும் விற்று விட்டனர்.
குஜராத்தில் ஒரு தனியார் வசம் அது இருக்கிறது.
அந்தச் சிலை முருகனைப் போல இருக்கிறது.
நாகசாமி அதனைக் கொண்டு வர முயற்சி செய்தார்.
ஏனோ அது நடக்கவில்லை.
பாதையைத் திறந்துவிட்டால் அந்தச் சிலை இருந்த பீடத்தை மக்கள் கண்டு கொள்ளக் கூடும்.
வேறு என்னவெல்லாம் இருக்கிறதோ ?
கல்வெட்டுச் செய்திகள் போட்டு உடைக்கின்றன.
இதில் அரிய செய்தி
8 நாளைக்கு ஒரு முறை அக்கப் பொலிசையாக ஏல அரிசியும் இலா மிச்ச வேரும்
ஓராட்டைக்கு அதாவது ஆண்டு ஒன்றுக்கு 45 முறை தரப்பட்டதாம்.
அடக் கடவுளே
8 x 45 - 360.
அதாவது ஆண்டு நாட்கள் 360 மட்டும்.
எதையெல்லாம் இழந்து நிற்கிறோம் . ?
தென்னன் மெய்ம்மன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக