வியாழன், 6 ஜூலை, 2017

தமிழிசை இயக்கம் அண்ணாமலைச் செட்டியார் செட்டிநாடு அரசர்

aathi tamil aathi1956@gmail.com

23/9/14
பெறுநர்: எனக்கு
ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டெடுத்த கோ மகன்
செட்டி நாட்டரசர் அண்ணாமலை செட்டியார். அந்த ஆலமரம்
தந்த நிழலில் வளர்ந்த ஒப்பற்ற சான்றோர்களின் நினைவாகப்
படைக்கப்படும் தொகுப்பு :- அயலார் ஆட்சிக் காலங்களில்
தமிழும் தமிழிசையும் கேட்பாரற்றுக் கிடந்த போது, என்
தாய் மொழி தமிழ், என் இனம் தமிழ், என்
இசை தமிழிசை என்று கொட்டி முழக்கி தமிழிசை இயக்கம்
கண்டு, தமிழறிஞர் இல்லம் தோறும் சென்று தமிழ் வாழ
வகை செய்த அண்ணாமலையரசன், அவன் தனியொரு மனிதன் அல்ல.
வாழ்வாங்கு வாழ்ந்த, தமிழ் தேசிய இனத்தின் அடையாளம்
மீட்டெடுத்த தலைமகன். தமிழறிஞர் இல்லம் தோறும் தேடிச்
சென்று சான்றோர்க்கெல்லாம் துணை நின்ற காவலன்.
ஆதலினால் அவர் குடும்பம் என்பது தனி மனிதர்
சார்ந்தது அல்ல. தமிழ் தேசிய இனத்தின் அடையாளம். அவர்
பெற்ற இராமசாமி ஐயா என்ற பெயரனுக்கு இடர் என்றால்
தமிழ் இனம் முழுமையும் ஓரணி திரளும்
என்பது உணர்வாளர் சொல்லும் உண்மை. ---
நெற்குப்பை காசிவிசுவநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக