ஞாயிறு, 23 ஜூலை, 2017

நெடுஞ்சேரலாதன் மகன் செங்குட்டுவன் இமயம் வில் அகநானூறு

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: aathi1956
சேரன் இமய வில் பொறித்து, ஆரிய மன்னரை வென்றது
ஆரியர் அலறத்  தாக்கிப் பேரிசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு விற் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சியன்ன .........................
                  பரணர், அகநா.396 :  16-19
ஆரிய மன்னர்கள் அலற- இமய மலையி வளைந்த வில்லைப் பதித்து – பகை வேந்தரைப் பிணித்து வந்த – இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் – இதனை, ‘இமயம் விற் பொறித்து ‘ எனவும்’ பேரிசை மரபின் ஆரியர் வணக்கி ‘ எனவும் பத்திற்றுப்பத்தின் இரண்டாம் பத்துப் பதிகத்தில் நெடுஞ்சேரலாதன் கூறப்படுதலான் அறிக.
இந்நிகழ்ச்சிகள் அவன் மைந்தனாகிய செங்குட்டுவனாலும் நிகழ்ந்தமை சிலப்பதிகாரத்தால் அறியப்படுதலின், பிணித்தோன் என்றது செங்குட்டுவன் எனலும் பொருந்தும் – நாட்டார் உரை.
அகநானூறு சங்ககால இலக்கியம் 
களப்பாள் இணையம் சிலப்பதிகாரம் சேரர் சேரன் 
இமயமலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக